தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
heat லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
heat லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

31-05-2017 இன்று காரைக்காலில் 108° நாகப்பட்டினத்தில் 105° பாரன்ஹீட் வெப்பம் பதிவானது

31-05-2017 இன்று காரைக்காலில் அதிகபட்சமாக 108.32° ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது அதே போல இன்று நாகப்பட்டினத்தில் 104.72° அதாவது 40.4° செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

காரைக்காலில் இதுவரை இருக்கும் பதிவுகளில்  உள்ள தகவலின் படி கடந்த 150 ஆண்டுகளில் என்று வேண்டுமானாலும் வைத்துக்கொள்வோம் மே மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையின் அளவில் இன்று 31-05-2017 ஆம் தேதி பதிவாகிய 108.32° ஃபாரன்ஹீட்டே அதிகம் .இதற்கு முன்பு 1980 ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதி 24-05-1980 அன்று 107.6° ஃபாரன்ஹீட் அதாவது 42° செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது அதை விட இன்று கூடுதலான வெப்பம் பதிவாகியதால் இந்த நாள் சாதனை பட்டியலில் இடம் பெற்றது.

31-05-2017 இன்று  புதுச்சேரியில் அதிகபட்சமாக 101.84° பாரன்ஹீட் அதாவது 38.8° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.

நேற்று கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பெரும்பாலான பகுதிகளில் இன்று 100° பாரன்ஹீட்டை  தாண்டியே வெப்பம் பதிவாகியுள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பகல் நேரத்தில் வெப்பம் இன்று அதிகமாக இருக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்று தான் ஆனால் காரைக்காலில் இந்த அளவு வெப்பம் பதிவாகும் என்பதை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.2017 மே  மாதத்தில் தமிழம் மற்றும் புதுச்சேரியில் நிறையமுறை 40° செல்சியை தாண்டி வெப்பம் பதிவாகியிருந்தாலும் இதுவரை காரைக்காலில் 40° செல்சியசுக்கு குறைவாகவே வெப்பம் பதிவாகிவந்தது அக்னி நட்சத்திரம் முடிந்து கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் காரைக்காலில் இன்று 108° பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.




வட கடலோர மாவட்டங்களில் வெயில் குறைந்து இருந்தாலும் அதிகமான உடல் வியர்வைக்கு எது காரணம் என்று உங்களுக்கு தெரியுமா ?

25-04-2017 இன்று ஒரு நாளிதழில் செய்தி வெளியிட்டு இருந்தார்கள் "புதுச்சேரியில் மேகமூட்டத்தால் வெயில் குறைந்து இருந்தாலும் வெப்பம் குறையவில்லை " என்று அதில் எழுதியிருந்தார்கள்.ஆம் உண்மை தான் தற்பொழுது வெயிலின் அளவு குறைந்து இருந்தாலும் உடலில் முன்பை விட வியர்வை அதிகமாகியுள்ளது.உட்கார்ந்து இருக்கும் பொழுதே வியர்வை அதிகமான அளவில் வெளியேறுகிறது. இதற்கு முக்கிய காரணம் வெப்பம் அல்ல தற்பொழுது முன்பை விட வெப்பம் குறைந்தே உள்ளது இதெற்கு காரணம் காற்றில் அதிகரித்திருக்கும் ஒப்பு ஈரப்பதமாக (Relative Humidity ) இருக்கலாம்.

உதாரணமாக இப்பொழுது காற்றில் வெப்பநிலையானது 24° செல்ஸியசாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம் ஒப்பு ஈரப்பதம் 0% சதவிகிதம் என்றால் நீங்கள் 21° செல்சியசை போல உணர்வீர்கள் அதே ஒப்பு ஈரப்பதம் 100% சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது என்றால் நீங்கள் 27° செல்சியஸ் போல உணர்வீர்கள்.தற்பொழுது அது தான் நடந்துள்ளது வழக்கமாக பகல் நேரத்தில் 40 முதல் 50 சதவிகிதம் வரை இருந்த ஒப்பு ஈரப்பதமானது கடந்த சில நாட்களாக 75% சதவிகிதம் வரை உயர்ந்து காணப்படுகிறது.அதைப்போல இரவு நேரங்களில் 90% சதவிகிதம் வரை பதிவாகிறது.நீங்கள் கீழே காணும் படத்தில் சென்னையில் நேற்றும் இன்றும் பதிவான ஒப்பு ஈரப்பதத்தின் அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.சிகப்பு நிறத்தில் இருப்பது நேற்றைய அளவு நீல நிறத்தில் இருப்பது இன்றைய அளவு.இயல்புடன் ஒப்பிடுகையில் நேற்றைய அளவே அதிகம் என்று எடுத்துக்கொண்டால் இன்று அதை விட அதிகமாக பகல் நேரத்தில் பதிவாகியிருப்பதை நீங்களே காணலாம்.அப்பொழுது உடலில் வியர்வை அதிகமாக வெளியேற தானே செய்யும்.

16-05-2017 இன்று வட கடலோர மாவட்டங்களை வறுத்தெடுத்து கொண்டிருக்கும் வெயில்

16-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பத்தின் அளவு கடந்த வரத்துடன் ஒப்பிடுகையில் இயல்பை விட அதிகரித்துள்ளது.இன்று காலையிலிருந்து பதிவான வெப்பநிலையில் படி தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 14 மாவட்டங்களில் 100° பாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவாகியுள்ளது.குறிப்பாக வட கடலோர மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு இயல்பை விட அதிகமாக உள்ளது.

16-05-2017 இன்று புதுச்சேரி ,கடலூர் ,சென்னை ஆகிய வட கடலோர பகுதிகளில் காலை 11:30 மணிக்கே 100° பாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவாகியுள்ளது.காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் காலை 11:30 மணிக்கு மாவட்டத்தில் 100° க்கும் சற்று குறைவாக பதிவாகியுள்ளது.இது மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்பொழுது ஒரு நாளில் அதிகபட்ச வெப்பநிலையானது மதியம் 1:30 மணியிலிருந்து 4:30 மணிக்கு உள்ளாக தான் பதிவாகிறது.அதனால் மக்கள் காலை 11:00 மணியிலிருந்து மாலை 5 மணிவரை வெயிலில் நடமாடுவதை முடிந்தவரையில் குறைத்துக் கொள்ளவும்.


23-03-2017 புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் இனி வெப்பம் அதிகரிக்கும் .

23-03-2017 இதுவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களையும் ஒரு சில மேற்கு மாவட்டங்களையும் தவிர மற்ற தமிழகத்தின் உள் மாவட்டங்கள் அனைத்திலும் வெப்பம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.சில தினங்களுக்கு முன்பு கூட கரூர் மாவட்டத்தில் 107° F அளவு வெப்பம் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இனி வரக்கூடிய வாரத்தில் தமிழக வட கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரி மாநிலத்திலும் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது குறிப்பாக 26-03-2017க்கு பிறகு அதிக பட்ச வெப்பநிலையானது  கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 1° முதல் 3° C  செல்ஸியஸ் வரை உயரக்கூடும் அப்பொழுது காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும்.

காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை பொறுத்தவரையில் காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணிவரையில் இதுவரையில்  நிலவிய வெப்பத்தின் அளவு மெல்ல மெல்ல அதிகரிக்கும் குறிப்பாக 26-03-2017க்கு பிறகு அதிக பட்ச வெப்பநிலையானது  கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 1° முதல் 3° C  செல்ஸியஸ் வரை உயரக்கூடும்.தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வெப்பம் அதிகரிப்பதால் ஏப்ரல் மாதத்தில் வெப்ப சலனம் ஏற்பட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது.

இன்று காலை 8:30 அளவில் பதிவான வெப்பத்தின் படி கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பத்தூரில்  - 37.8°C  (100.4°F ) பதிவாகியுள்ளது.இதற்கு அடுத்தபடியாக கரூர் மற்றும் வேலூரில் 37.5°C (99.5°F ) வெப்பம் பதிவாகியுள்ளது.

ஊட்டி ,கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களில் கூட பகல் நேர அதிகபட்ச வெப்பநிலையானது அதிகரித்துள்ளது.

வானிலை தொடர்பான மேலும் பல தகவல்களை மீண்டும் பதிவிடுகிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...