தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
monsoon லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
monsoon லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01-11-2018 ஆம் தேதி வாக்கில் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கலாம் - #யூடு (#YUTU) புயலின் வீரியம்

29-10-2018 நேரம் பிற்பகல் 2:15 மணி கடந்த பதிவுகளில் நான் குறிப்பிட்டு இருந்தது போல தற்பொழுது மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியை ஒட்டியுள்ள வட மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது தற்பொழுது பதிவாகி வரும் நிகழ் நேர செயற்கைகோள் படங்களின் உதவியுடன் அதனை தெளிவாக அறிய முடிகிறது அடுத்த சில மணி நேரங்களில் அது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுக்கலாம் இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து அடுத்த சில மணி நேரங்களில் வெளியாகலாம் தற்பொழுது ஒடிசாவின் #பிரமாப்பூர் (#Brahmapur) க்கு கிழக்கே வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருக்கும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு பெற்று மேலும் வட -வட மேற்கு திசையில் நகர்ந்து 30-10-2018 ஆகிய நாளை காலை ஒடிசா மாநிலம் #பரதீப் (#Paradip) நகரின் கடலோர பகுதிகளை நெருங்க முற்படலாம் பின்னர் அது மேலும் வடக்கு  திசையில் நகர தொடங்கி ராஜ்நகர் உட்பட ஒடிசா மாநிலத்தின் பல கடலோர பகுதிகளிலும் நல்ல வலுவான மழை பொழிவை ஏற்படுத்தி ஒடிசா மாநிலம் #பாலசோர் அருகே உள்ள கடலோர பகுதிகளில் 31-10-2018 ஆகிய நாளை மறுநாள் கரையை கடக்க முற்படலாம்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரையில் நான் முன்பு பதிவிட்டு  இருந்தது போல தற்பொழுது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது அடுத்து வரக்கூடிய நாட்களில் அது இலங்கைக்கு அருகே கிழக்கே ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவெடுக்கவும் வாய்ப்புகள் உள்ளது.மேலும் நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல 30-10-2018 ஆகிய நாளை வட கடலோர மாவட்டங்களில் அங்கங்கே ஒரு சில இடங்களில் மழை பதிவாகலாம்.31-10-2018 ஆகிய நாளை மறுநாள் வட கடலோர மாவட்டங்களின் அநேக இடங்களிலும் மழைக்கு வாய்ப்புகள் உண்டு தென் கடலோர மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகலாம்.31-10-2018 முதல் 02-11-2018 வரை உள்ள 3 நாட்களில் ஏதேனும் ஒரு நாளை வட கிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வானிலை ஆய்வு மையத்திடன் இருந்து வெளியாகலாம்.

29-10-2018 நேற்று ஒரு 4 ஆம் வகை சக்தி வாய்ந்த சூறாவளியாக மேற்கு பசிபிக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த அந்த #யூடு (#YUTU) சூறாவளியானது தற்பொழுது ஒரு 2ஆம் வகை சூறாவளியாக சற்று வலு குறைந்து பிலிப்பைன்ஸ் நாட்டின் #லூசன் (#LUZON) மாகாணத்தின் வட கிழக்கு பகுதிகளை நெருங்க முற்பட்டு வருகிறது.மேலும் நான் நேற்றைய எனது பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல 30-10-2018 ஆகிய நாளை அந்த #யூடு (#YUTU) சூறாவளியின் மையப்பகுதியானது #பலானன் (#Palanan)  நகரின் கடலோர பகுதிகளை அடைய முற்படலாம் மேலும் #Tuguegaroa ,#ilagan , #Santiago , #Baggao , #Appari , #Santaana, #Dilasag , #Kabugao,#Baguio , #candon , #vigan , #Laoag மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #லூசன் (#LUZON) மாகாணத்தின் அநேக வடக்கு மற்றும் மத்திய பகுதிகளிலும் சூறாவளி காற்றுடன் மிக மிக கனத்த மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.இந்த 2018 ஆம் ஆண்டில் இதுவரையில் நிகழ்ந்தேறிய இயற்கை பேரிடர்களில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய பட்டியல்கள் வரிசையில் இந்த #யூடு (#YUTU) வுக்கும்  கண்டிப்பாக இடம் இருக்கும்.

அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடுக்கு சுழற்சி நிரவி வருகிறது.நான் நமது பக்கத்தில் கடந்த வாரத்திற்கான வானிலை தகவல்களில் குறிப்பிட்டு இருந்தது போல 13-08-2018 ஆகிய நாளை அல்லது 14-08-2018 ஆகிய நாளை மறுநாள் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ள வட மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புகள் உள்ளது அது மேலும் வலு பெற்று அதற்கு அடுத்த வரக்கூடிய நாட்களில் மேற்கு -வட மேற்கு திசையில் நகர முற்படலாம் இதன் காரணமாக அதன் சுழற்சியின் விசையால் மேற்கு திசை காற்றை தம்வசம் இழுப்பதால் அரபிக்கடலை ஒட்டியுள்ள இந்தியாவின் மேற்கு மாநிலங்களின் அநேக கடலோர மாவட்டங்களிலும் மேற்கு திசை காற்றின் வீரியம் அதிகரித்து மேற்கு கடலோர மாவட்டங்களில் பதிவாகும் மழையின் அளவும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.

12-08-2018 ஆகிய இன்று முதல் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது தற்பொழுதும் அங்கு தொடர்ந்து மழை பதிவகை வருகிறது நாளை முதல் தென்மேற்கு பருவ மழையானது அப்பகுதிகளில் மேலும் தீவிரமடைய தொடங்கலாம் இதன் காரணமாக அடுத்து வரக்கூடிய நாட்களில் தமிழகத்துக்கு காவிரியில் இருந்து வரும் உபரி நீரின் அளவு மேன் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது .தற்பொழுது மேட்டூர் அணையும் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் இனி கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய உபரி நீரினால்.வரக்கூடிய வாரத்தில் நாகை ,காரைக்கால் போன்ற கடைமடை மாவட்டங்களிலும் காவிரி நீர் புரண்டோடும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

13-08-2018 ஆகிய நாளை முதல் தமிழக மேற்கு தொடர்ச்சி மழை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மீண்டும் ஆங்காங்கே கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.அடுத்த வரக்கூடிய நாட்களில் தமிழகத்தில் கனமழை  பதிவாக வாய்ப்பு உள்ள பகுதிகளை மாவட்டங்கள் வாரியாக இங்கு பட்டியளிடுகிறேன்.

கோவை மாவட்டம்  : #வால்பாறை (#Valparai) , #சின்னக்கல்லாறு (#Chinnakallar ) ,#சோலையாறு அணை பகுதிகள் (#Sholaiyar Dam ) , #அட்டகட்டி (#Attakatti ) ,#அக்காமலை புல்மேடு (#AkkamalaiPulmedu ) ,#ஆனமலை புலிகள் சரணாலயம் (#Anamalai Tiger Reserve) உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புகள் உண்டு #காரூண்யா நகர் (#Karunya Nagar) ,#ஆழியாறு (#Azhiyar) பகுதிகளிலும் ஓரளவு கனமழைக்கு மழைக்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் வாய்ப்புகள் உண்டு.

நீலகிரி மாவட்டம்  : #அவலாஞ்சி (#Avalanche),#மேல்பவானி(#Upper Bhavani)   ,#மூக்குருத்தி தேசிய பூங்கா (#Mukkuruthi National Park) ,#தைசோலா (#Thaishola) ,#பிக்கெட்டி(#Bikketti) , #கூடலூர்(#Gudalur),#நெல்லியலம்(#Nelliyalam) ,#பண்டலூர்(#Pandalur) ,#தேவாலா(#Devala), #தேவர்சோழா(#Devarshola) , #நடுவட்டம்(#Naduvattam) உள்ளிட்ட பகுதிகளில் கனமழையை எதிர்பார்க்கலாம்.

தேனி மாவட்டம்  :#பெரியார் (#Periyar )  ,#தேக்கடி மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகள் (#Thekkady Sorroundings) , #குமிழி (#Kumili)

நெல்லை மாவட்டம  : #செங்கோட்டை (#ShenKottai ) , #குற்றால மலைப்பகுதிகள் (#Coutrallam Mountains) , #செந்தூரணி வணப்பகுதி (#Shendurney Wildlife Sanctuary) , #அகஸ்தியர் மலை (#Agasthiyar Hills), #முண்டந்துறை புலிகள் காப்பகம் (#Mundanthurai Tiger Reserve), #பாபநாசம் (#Papanasam).

குமரி மாவட்டம் : #பேச்சிப்பாறை (#Pechiparai ), #குலசேகரம் (#Kulasekaram ) ,#திற்பரப்பு (#Thirparappu ).

கேரளாவில் தற்பொழுதே அணைத்து அணைகளும் நிரம்பி கடந்த அரை நூறாண்டுகளாக இல்லாத அளவு கடும் வெள்ளப் பேருக்கு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய உள்ளது அடுத்து வரக்கூடிய நாட்களிலும் வயநாடு மற்றும் இடுக்கி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளது.கேரள மாநிலத்தை பொறுத்த மட்டில் இது வருத்தத்திற்கு உரிய ஒரு செய்தி தான்.கேரள மாநிலத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்வது நல்லது.

தமிழக உள் மற்றும் வட மாவட்டங்களை பொறுத்தவரையில் அவ்வப்பொழுது வெப்பசலன மழைக்கு வாய்ப்புகள் உண்டு 14-08-2018 அன்று வட தமிழக பகுதிகளில் ஓரளவு வெப்பசலன மழை பதிவாகலாம்.மேலும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் நகர்வுகளை பொறுத்து இந்திய மேற்கு மாநிலங்ககளில் அதாவது கேரளா ,கர்நாடகா ,கோவா ,மஹாராஷ்டிரா மாநிலங்களில் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே மிக கனத்த மழை பதிவாகலாம்.அந்த தாழ்வு நிலையின் நகர்வுகளை பொறுத்து மிக கனத்த மழை பதிவாக வாய்ப்புகள் இருக்கும் பகுதிகளை அடுத்து வரக்கூடிய நாட்களில் ஒவ்வொரு நாளும் பட்டியளிடுகிறேன்.

மேலும் நான் இங்கே குறிப்பிட்டு இருக்கும் தகவல்கள் அனைத்தும் தற்போது நிலவி வரும் வானிலை சூழல்களை அடிப்படையாக கொண்ட ஒரு கணிப்பு தான் இதில் மாற்றங்கள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.



Related Posts Plugin for WordPress, Blogger...