#Penguin (#பெண்குயின்) விமர்சனம்
===============
#one_woman_Army யாக ஒட்டுமொத்த படத்தையும் அதன் கதாநாயகி அவரது தோலில் சுமந்திருக்கிறார் அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.படத்தின் ஒரு சில காட்சிகளில் இதுவரையில் நாம் தமிழ் #Thriller படங்களில் கண்டிராத அளவு புதுமையை காண முடிந்தது அந்த காட்சிகளை மேலும் மெருகேற்றும் விதமாக நாயகியின் எதார்த்தமான நடிப்பும் அமைந்திருப்பது சிறப்பு.
தெலுங்கில் #HIT என்கிற ஒரு திரில்லர் படம் உண்டு #Climax வரை மிக சிறப்பாக #கொலையாளி யார் என்கிற கேள்வியுடன் வேகமாக நகர்ந்து செல்லும் அந்த திரைப்படத்தின் இறுதியில் கொலையாளி யார் ? கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவவருகையில் மிகவும் மொக்கையாக இருக்கும்.ஒரு கட்டத்தில் அந்த மாதிரியான ஒரு நிலையை இந்த படம் அடைந்துவிடுமோ என்ற எண்ணம் எனக்குள் தோன்றியப்பொழுது.நான் இருக்கிறேன்.... என்று #கதாநாயகி மீண்டும் ஒரு முறை கதையை இறுதிக்கட்டம் வரை நகர்த்தி சென்றிருக்கிறார் அது தான் இந்த படத்தின் வெற்றி.
Makingwise பார்க்கப்போனால் இயக்குனர் உண்மையான குற்றவாளி யார் என்று தெரியவருவதற்கு முன்பு ஆங்கில மற்றும் வங்காள மொழி படங்களில் வருவது போல் கேள்வி பதில் விளையாட்டு ஒன்றை காட்சியாக அமைத்து இருக்கிறார் அது Workout ஆகி இருக்கிறது.மேலும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத மேகங்கள் மூடிய #கொடைக்கானல் மலையின் வளைந்து வளைந்து செல்லும் சாலைகள் ,இயற்கை எழில் கொஞ்சும் ஏரி என அவைகளை நிழற்படக்கருவியில் காட்சிப்படுத்தி இருக்கும் விதமும் சிறப்பாக உள்ளது மேலும் அது படத்தின் #Thriller genre க்கும் உதவி புரிந்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
மொத்தத்தில் இந்த #Penguin படத்தின் வெற்றியை உறுதிசெய்த #பெண்_குயின் இந்த படத்தின் நாயகி தான்.
எனது Rating : 3/5
#Penguin_movie_review #penguin_review #பெண்குயின்_விமர்சனம்