தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
nagapattinam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
nagapattinam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கஜா புயல் காரைக்கால் அருகே கரையை கடக்க வாய்ப்பு - 15-11-2018 அன்று இரவு அது கரையை கடக்கலாம்

14-11-2018 நேரம் பிற்பகல் 1:50 மணி இன்று காலை முதல் அந்த #கஜா (எ) #காஜா (#GAJA) புயலானது மேற்கு - தென்மேற்கு திசையில் நகர தொடங்கி தொடர்ந்து தமிழக வட கடலோர மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது இன்னும் சற்று நேரத்தில் அது தீவிரமடைய தொடங்கி அடுத்த சில மணி நேரங்களில் அது ஒரு தீவிர புயலாக உருவெடுக்கவும் வாய்ப்புகள் உள்ளது தற்பொழுது மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் அந்த  #கஜா (எ) #காஜா (#GAJA) புயலானது நிலைகொண்டுள்ளது அடுத்த சில மணி நேரங்களில் அது தீவிரமடைய தொடங்கி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொள்ளலாம்.மேலும் நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல அது வட கடலோர பகுதிகளை நெருங்க முற்படுகையில் அதன் வலு குறைய தொடங்க வாய்ப்புகள் உள்ளது அடுத்து வரக்கூடிய நாட்களில் அது மேலும் மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து 15-11-2018 ஆகிய நாளை மாலை அல்லது இரவு நேரத்தில் #நாகப்பட்டினம் மற்றும் #காரைக்கால் மாவட்டங்களின் கடலோர பகுதிகளை நெருங்க முற்படலாம் அது #காரைக்கால் மற்றும் அதனை ஒட்டியுள்ள #நாகை மாவட்ட பகுதிகளில் கரையை கடக்க அதிக வாய்ப்புகள் உள்ளது அவ்வாறு அது கரையை கடக்க முற்படுகையில் மணிக்கு 70 கி.மீ  - 80 கி.மீ வரை #நாகப்பட்டினம் மற்றும் #காரைக்கால் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் கற்று வீசக்கூடும் சில சமயங்களில் 90 கி.மீ வரையிலும் காற்றின் வேகம் அதிகரிக்கலாம்.

15-11-2018 அன்றைய மழைக்கான வாய்ப்புகள்
-------------------------------------------------------------------------
14-11-2018 அன்று நள்ளிரவு அல்லது 15-11-2018 ஆம் தேதி அதிகாலை முதல் திருவள்ளூர் மாவட்டத்தின் கடலோர பகுதிகளிலும் #சென்னை மாநகரில் ஆங்காகே மழை பதிவாக தொடங்கலாம் மெல்ல மெல்ல மழை #காஞ்சிபுரம் , #விழுப்புரம் ,#புதுச்சேரி ,#கடலூர் என அன்று நண்பகுலுக்குள் பிற வட கடலோர மாவட்டங்களுக்கும் பரவ தொடங்கலாம்.15-11-2018 அன்று வட உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உண்டு.

15-11-2018 நள்ளிரவு முதல் 16-11-2018 நள்ளிரவு வரை உள்ள 24 மணி நேரத்தின் மழைகான வாய்ப்புகள்
--------------------------------------------------------------------------

#காரைக்கால் ,#நாகப்பட்டினம் ,#திருவாரூர் ,#தஞ்சை ,#புதுக்கோட்டை ,#திருச்சி மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது மேலும் அந்த #கஜா (எ) #காஜா (#GAJA) புயலானது  கரையை கடந்து ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து பின்னர் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் கேரளாவை கடந்து அரபிக்கடல் பகுதியை எட்ட முற்படலாம் இதன் காரணமாக இவை தவிர்த்து கரூர் ,திருப்பூர் ,கோவை மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு குறிப்பாக கோவை ,திருப்பூர் மாவட்டங்களின் தெற்கு பகுதிகளில் ஓரளவு வலுவான மழையை எதிர்பார்க்கலாம் மேலும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள #நீலகிரி ,#தேனி ,#விருதுநகர் உட்பட தமிழக மேற்கு மாவட்டங்களிலும் #மதுரை ,#ராமநாதபுரம் ,#சிவங்கங்கை ,திண்டுக்கல் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது மேலும் #நெல்லை ,#தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகலாம்.பொதுவாக தென் உள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு உள் மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.மேலும் #அரியலூர் ,#பெரம்பலூர் ,#விழுப்புரம் ,#திருவண்ணாமலை மற்றும் #வேலூர் ,#ஈரோடு ,#சேலம் ,#நாமக்கல் ,#விழுப்புரம் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகலாம் மேலும் இவைகள் உட்பட தர்மபுரி ,கிருஷ்னகிரி மற்றும் வட கடலோர மாவட்டங்களிலும் 16-11-2018 அன்று மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.மொத்தத்தில் 16-11-2018 அன்று தமிழிகக்தில் பரவலான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.

15-11-2018 மற்றும் 16-11-2018 ஆம் தேதிகளில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் வானிலை எப்படி இருக்கலாம் ?
------------------------------------------------------------------------------------
15-11-2018 ஆகிய நாளை காலை அல்லது நன்பகல் வாக்கில் #புதுச்சேரி மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பதிவாக தொடங்கலாம் மேலும் 15-11-2018 ஆம் தேதி நண்பகல் முதல் காற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கலாம் மணிக்கு 45 கி.மீ முதல் 55 கி.மீ வேகம் வரையிலும் காற்று வீசக்கூடும் மேலும் அந்த புயல் #நாகை மற்றும் #காரைக்கால் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் கரையை கடக்க முற்படுகையில் அதாவது 15-11-2018 அன்று நள்ளிரவு மற்றும் 16-11-2018 அன்று அதிகாலை நேரத்தில் புதுச்சேரி மாவட்டத்தில் மணிக்கு 60 கி.மீ  - 70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

காரைக்கால் மாவட்டத்தை பொறுத்தவரையில் 15-11-2018 ஆகிய நாளை நண்பகல் அல்லது பிற்பகல் வாக்கில் மழை பதிவாக தொடங்கலாம் அந்த கப்புயல் கரையை கடக்கையில் அதாவது 16-11-2018 அன்று நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் மணிக்கு 70 கி.மீ முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் சில சமயங்களில் மணிக்கு 90 கி.மீ என்கிற அளவிலும் காற்றின் வேகம் அதிகரிக்கலாம்.#காரைக்கால் மற்றும் அதனை ஒட்டியுள்ள #நாகை மற்றும் #திருவாரூர் மாவட்ட பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகலாம்

அந்த  #கஜா (எ) #காஜா (#GAJA) புயலானது தீவிர புயலாக உருவெடுக்கும் பட்சத்தில் அதன் நகர்வுகள் தொடர்பான மேலும் பல தகவல்களுடன் இன்று மீண்டும் பதிவிடுகிறேன்.அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.

நாகப்பட்டினத்தில் 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட மாதரசி மாதா தேவாலய ஆண்டு திருவிழா 10-08-2017 (நேற்று ) அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

நாகப்பட்டினம் ஆங்கிலேயர் காலத்திலும் பண்டைய தமிழ் வரலாற்றிலும் முக்கிய துறைமுக நகராக அறியப்படுகிறது.இங்கு தான் 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய மாலுமிகளால் கட்டப்பட்ட பழமையான மாதரசி மாதா தேவாலயம் உள்ளது.1660 ஆம் ஆண்டு டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டிற்கு  கைமாறியது  நாகப்பட்டினம்,இதனால் டச்சுக்காரர்களால் மாதரசி மாதா ஆலயத்தின் சொரூபத்திற்கு  ஆபத்து இருப்பதாக கருதிய பக்தர்கள் மாதாவின் திருச்சொரூபத்தை ஒரு பெட்டியில் மறைத்து வைக்க திட்டமிட்டனர்.மறுநாள் காலையில் தேவாலயத்திற்கு சென்று பார்த்தபொழுது ஒரு பெட்டியில் தலை சாய்ந்த நிலையில் மாதரசி மாதாவின் திருச்சொரூபம் இருந்தது இந்த நிகழ்வுக்கு பிறகு மாதரசி மாதாவின் புகழ் உலகெங்கும் பரவியதாக கூறப்படுகிறது.

நாகபட்டினம் முதன்மை கடற்கரை சாலையில் அமைந்துள்ள இத்தேவாலயத்தின் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன்படி நிகழும் 2017ஆம் ஆண்டுக்கான ஆண்டு திருவிழா கொண்டாட்டங்கள் 10-08-2017 (நேற்று ) நாகப்பட்டினத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.முன்பெல்லாம் வேளாங்கண்ணிக்கு  வருகைபுரியும் பக்தர்கள் நாகப்பட்டினத்தில் உள்ள இந்த மாதரசி மாதா தேவாலயத்துக்கு சென்று ஜெபித்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர் இப்பொழுது வேளாங்கண்ணிக்கு பயணம் செய்வோர் புறவழிச்சாலை வழியாக பயணிப்பதால் இந்த தேவாலயத்தின் தொன்மையும் ,சிறப்பும் தெரிந்தவர்கள் மட்டுமே இங்கு வருகை புரிகிறார்கள்.காலங்கள் எப்படி மாறினாலும் இந்த மாதரசி மாதா தேவாலயம் நாகப்பட்டினத்தில் வரலாற்று சின்னங்களில் ஒன்றாக திகழ்கிறது என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது.


காரைக்கால் அருகே நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோலிய பொருட்கள் தயாரிக்கும் ஆலை - மத்திய அரசின் புதிய திட்டம் - நாகை மற்றும் கடலூர் மாவட்டத்தில் 23,000 ஹெக்டர் விவசாய நிலத்தை கையகப்படுத்த உத்தேசம்

தமிழகத்தில்  மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ஹைட்ரொ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டங்களை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்களம் போன்ற இடங்களில்  பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவது கல்லூரி மாணவர்கள் ,இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அதிக எண்ணிக்கையில் ஆன மக்கள் அவ்வப்பொழுது போராட்டத்தில் ஈடுபட்டும்  குரல் எழுப்பியும் வருகின்றனர்.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க தமிழகத்தில் கடலூர் மட்டும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய பொருட்கள் தயாரிக்கும் ஆலையை நிறுவ மத்திய அரசு திட்டமிட்டுள்ளது இதற்காக நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் இருந்து 23,000 ஹெக்டர் நிலத்தை கையகப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது மேலும் கடலூர் ,புவனகிரி ,சிதம்பரம் ,சீர்காழி ,தரங்கம்பாடி போன்ற தாலுக்காகளை சேர்ந்த 45 கிராமங்களில் இருந்து இத்திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்த உத்தேசிக்கபட்டுள்ளது.

ஏற்கனவே நாகை மாவட்டத்தில் இயங்கிவரும் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி யை எதிர்த்து பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் மத்திய அரசின் இந்த புதிய அறிவிப்பை பொதுமக்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.






நாகப்பட்டினம் ,காரைக்கால் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் உணவு பொருட்களின் தரம் குறித்து எப்படி புகார் தெரிவிப்பது ?

சமீப காலமாக சென்னை போன்ற பெருநகரங்களுக்கு இணையாக தமிழகம்  மற்றும் புதுச்சேரியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களிலும் உணவகங்களை தேடி சென்று குடும்பத்துடன் உணவு உண்ணும் மக்களின் விகிதம் அதிகரித்து வருகிறது.சுவையான உணவகங்களை தேடி படையெடுக்கும் மக்கள் கூட்டம் அதிகரித்ததால் இன்று உணவாக தொழில் என்பது அதிக லாபம் ஈட்டி தரக்கூடிய ஒரு தொழிலாக மாறிவிட்டது.ஒரு உணவகங்கத்தில்  அன்றாடம் சகஜமாக சாப்பிடும் ஒருவரிடம் சென்று இந்த உணவகத்தில் பயன்படுத்தப்படும் உனவு  பொருட்கள் தரமானவை தானா ?  என்ற ஒரு கேள்வியை முன் வைத்தோமேயானால் அதற்கு அவரிடம் இருந்து நமக்கு கிடைக்கும் பதிலும் ஒரு கேள்வியாக தான் இருக்க முடியும் .

பெருகி வரும் தொழிற் போட்டியால் குளிர் சாதன வசதி ,கண்ணாடி மேசைகள் ,சொகுசு நாற்காலிகள் என நம்மை ஈர்க்கும் உணவகங்களில் சமையல் நடைபெறும் இடத்தை மட்டும் யாரும் சென்று பார்த்திருக்க மாட்டோம்.இன்று பல உயர்தர உணவகங்களில் சமையல் நடைபெறும் இடத்தை சென்று பார்க்க அனுமதி மறுக்கப்படுகிறது என்பது தான் உண்மை அப்படி அனுமதி மறுக்கப்படும்பொழுது என்னது நாம் பணம் கொடுத்து வாங்கி சாப்பிடும் உணவை எப்படி சமைக்கிறார்கள் என்று பார்க்க நமக்கே அனுமதியில்லையா? என்று இங்கு யாரும் இதுவரையில் கொதித்தெழுந்ததாக செய்தி கிடையாது.ஒரு சில இடங்களில் உணவகங்களுக்கு வழங்குவதற்கு என்றே இறைச்சி கடைகளில் காலாவதியான இறைச்சிகள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் செய்தி. இந்த காலவதியான இறைச்சி விற்பனைகள் குறித்து வேறொரு பதிவில் விரிவாக விவாதிப்போம் .இப்பொழுது இந்த உணவு பொருட்களின் பாதுகாப்பு குறித்த விஷயத்துக்கு வருவோம் இப்படி நாம் அன்றாடம் நம் வாழ்வில் உணவு பொருட்களுக்காக பயன்படுத்தும் ஹோட்டல்கள் ,மளிகை கடைகள் ,இறைச்சி கடைகள் ,பேக்கரிக்கள் ,பால் வியாபாரிகள் ,மொத்த விற்பனை நிலையங்கள்  ,சாலையோர கடைகள் ,உணவு பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் ,இரவு நேர உணவு விடுதிகள் போன்றவைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்துமே தரமானது தானா ? அப்படி அவைகள் தரமற்ற மற்றும் காலாவதியான பொருட்கள் என்றால் யாருக்கு புகார் தெரிவிப்பது ?


நாகப்பட்டினம் மாவட்டத்தில் உணவு பொருட்களின் தரம் குறித்த புகாருக்கு  : 04365 247060

புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உணவு பொருட்களின் தரம் குறித்த புகார்களுக்கு : 0413 2292277


தமிழ்நாட்டின் உணவு பாதுகாப்பு ஆணையரால் அறிவிக்கப்பட்ட வாட்ஸ்அப் எண் : 94440 42322

இந்திய உணவு பாதுகாப்புத்துறை  ஆணையம் : 9868686868

காரைக்கால் மாவட்ட மக்கள் fcps-kkl.py@gov.in என்கின்ற இமெயில் முகவரியில் உணவாயு பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கலாம்.


நாகப்பட்டினம் மாவட்ட மக்கள் : மாவட்ட நியமன அலுவலர் ,உணவு பாதுகாப்பு அலுவலகம் ,பழைய அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் ,மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகம் ,நாகப்பட்டினம் .  என்ற முகவரியில் நேரில் சென்று தங்களுடைய புகார்களை வழங்கலாம்.

16-05-2017 நேற்று தேசிய டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு நாள் கடைபிடிக்கப்பட்டது

ஒவ்வொரு ஆண்டும் டெங்கு காய்ச்சல் நோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.சமீப காலங்களில் நாம் மருத்துவ முறைகளில் மிக பெரிய வளர்ச்சி கண்டிருந்தாலும் டெங்கு போன்ற நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் மட்டுமே முற்றிலும் குணப்படுத்துவது சாத்தியமாகிறது.னாய் முற்றிய நிலையில் ஒருவரை குணப்படுத்தி மீட்டெடுப்பது மிகவும் சிரமமான ஒன்றாக கருதப்படுகிறது.இந்நிலையில் நேற்று 16-05-2017 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு நாள் கடைபிடிக்கப்பட்டது.நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாம் மாவட்டம் முழுவதிலும் உள்ள ஆறாத சுகாதார நிலையங்களில் நடத்தப்பட்டது.நேற்று நாகை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் டெங்கு காய்ச்சல் நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியமாகிறது இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் 16-05-2017 மே 16 ஆம் தேதியில் டெங்கு நோய் தடுப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது இதனையடுத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் விழிப்புணர்வு கூட்டம் பேரணிகள் நடத்தப்பட உள்ளன.தரையை தொடாத தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்களின் மூலமே டெங்கு நோய் பரவுகிறது.எனவே டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக தேவையில்லாத கலன்களில் தேநீர் தேங்கி நிற்காமல் தடுக்க வேண்டும் மேலும் டெங்கு காய்ச்சலுக்கான ஆரம்ப கால அறிகுறிகள் தெரியவரும் பொழுதே அருகில் உள்ள மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



டெங்கு காய்ச்சலுக்கான ஆரம்ப கால அறிகுறிகள்
  1. அதிக காய்ச்சல்
  2. கடுமையான தலைவலி
  3. கண்களின் பின்பகுதியில் வலி
  4. வாந்தி மற்றும் குமட்டல்
  5. தசை மற்றும் எலும்பு வலி (உடல் வலி )
  6. உடலின் சுரபிக்களில் மாற்றம் ஏற்படுவதால் தொண்டைப் புண் ,நாவில் சுவை மாற்றம் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்பு உள்ளது .
  7. தோல் தடித்து சிவப்படைந்து சினைப்பு உண்டாதல்
  8. மிதமான குருதிப்போக்கு (பல் ஈறுகளிலிருந்து குருதி வடிதல், மூக்கிலிருந்து குருதி வடிதல், மாதவிடாய் மிகைப்பு, சிறுநீரில் குருதி போதல், குருதிப்புள்ளிகள்
மேலும் டெங்கு காய்ச்சல் குறித்த முழுமையான தகவல்களுக்கு https://goo.gl/5qTZv4https://goo.gl/5qTZv4 என்ற முகவரியை சொடுக்கவும்

நாகை - கடலூர் எல்லை பிரச்சனையால் மக்களுக்கு தொடரும் தொல்லைகள் ? கொள்ளிடம் ஆறு யாருக்கு ?

நாம் தினத்தோறும் செய்திகளில் இரு நாட்டுக்கு இடையேயான எல்லை பிரச்சனைகளையும் இரு மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பங்கீட்டு பிரச்சனைகளையும் பற்றி படித்திருக்கிறோம்  கேள்விப்  பட்டிருக்கிறோம்.

தமிழகத்தில் நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு இடையே அமைந்துள்ளது  தான் கொள்ளிடம் ஆற்று பாலம்.அந்த பாலத்தில் பாதி நாகை மாவட்டத்துக்கும் மீதம் உள்ள பாதி கடலூர் மாவட்டத்துக்கும் சொந்தமாம் அதில் என்ன பிரச்னை ?  என்று கேட்கிறீர்களா பாலத்தை பொறுத்தவரையில் இதுவரையில் பிரச்னை என்று ஒன்றுமில்லை மாறாக கொள்ளிடம் ஆற்றின் நடுப்பகுதி யாருக்கு என்பதில் தான் தற்பொழுது பிரச்னை என்ன ஒன்றும் புரியவில்லையா ? மண்டை சுற்றுகிறதா ? புரிவது போல் கூறுகிறேன் கேளுங்கள்.

நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தமிழகத்தில் உள்ள சீமை கருவேலமரங்களை அழிக்க அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறன.அவற்றின் ஒரு பகுதியாக நாகை மற்றும் கடலூர் மாவட்ட எல்லையான கொள்ளிடம் ஆற்று பகுதியிலும் சீமை கருவேலமரங்களை அகற்றும் பனி நடைபெற்று வருகிறது.ஆற்றங்கரையில் உள்ள சீமை கருவேல மரங்களை  இயந்தரங்களின் உதவியுடன் அகற்றி  வருகிறார்கள் அதேசமயம்  ஆற்றின் நடுப்பகுதியில் மண்டிக் கிடக்கும் சீமை கருவேலமரங்களை அகற்றுவது யாரென்று இரு மாவட்ட நிர்வாகத்துக்கும் இடையே போட்டா போட்டி நடைபெற்று வருகிறதாம்.சுமார் 1 கி.மீ தூரம் அமைந்துள்ள இந்த கொள்ளிடம் பாலத்தில் அரை கிலோமீட்டர் உனக்கு என்றும் அரை கிலோமீட்டர் எனக்கு என்றும் பிரித்துக்கொள்வது சுலபம் ஆனால் ஆறு ஓடும் பகுதியில் எப்படி சரியாக எல்லையை கண்டறிய முடியும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனராம் அதிகாரத்தில் உள்ளோர்.

நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு இடையேயான இந்த எல்லை பிரச்சனை கொள்ளிடம் பகுதி மக்களுக்கு பெரும் தொல்லையை  ஏற்படுத்தியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு கொள்ளிடம் ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் வேண்டுகோலாக உள்ளது.

நாகை எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரியை முற்றுகையிட்ட பொது மக்கள்

தமிழக முதல்வராக யாரை தேர்ந்தெடுப்பது சட்டமன்ற உறுப்பினர் யாருக்கு ஆதரவு அழிப்பது சசிகலாவுக்கா அல்லது பன்னீர்செல்வத்துக்கா என்பது குறித்து மக்களின் கருத்தை கேட்பதற்காக நாகை மாவட்ட எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி இன்று நாகப்பட்டினத்தில் தனது கட்சி அலுவலகத்தில் பொதுமக்களுடன் கருத்து கேட்பு கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தார்.இதனையடுத்து மக்கள் கூட்டம் அவரது கட்சி அலுவலகத்தில் அதிகரித்துக் கொண்டே இருந்தது இந்நிலையில் கருத்து கூற வருபவர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என அறிவிக்கப்பட்டது இதனையடுத்து கூடியிருந்த பொதுமக்கள் எம்.எல்.ஏ வின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் இச்சம்பவம் நாகப்பட்டினத்தில் சிறிது நேரம் பரபரப்பை  ஏற்படுத்தியது.காவலர்களின் வருகைக்கு பின்னர் எம்.எல்.ஏ வை சுற்றி வளைத்த பொதுமக்கள் எங்களின் ஆதரவு முதல்வர் ஓ.பி.எஸ் க்கு தான் என்று கூட்டமாக முழக்கமிட்டனர்.

எது எப்படியாயினும் மக்களின் கருத்தை கேட்க வேண்டும் என்று நினைத்த நாகப்பட்டினம் எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரியை பாராட்டியே ஆகவேண்டும்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க நடந்து முடிந்த இந்த நிகழ்வுக்கு பிறகு காரைக்கால் - நாகப்பட்டினம் மாவட்ட எல்லையில்  அமைந்துள்ள வாஞ்சூர் மதுபானக் கடைகளில் சரியான கூட்டமாம் வசூல் அள்ளுகிறதாம்.நாகப்பட்டினத்தில் எது நடந்தாலும் வாஞ்சுருக்கு வருமானம் தான் போல.


11-02-2017 இன்று முதல் தமிழக கடலோர மாவட்டங்களில் குளிர் குறைய தொடங்கும்

நாம் முன்னரே பதிவிட்டு இருந்தது போல கடந்த வாரத்தில் காலை 4 மணி முதல் 7 மணி வரை நிலவிய குளிர் (வெப்பக்குறைவு ) இனி வரக்கூடிய வாரத்தில் குறையும்.11-02-2017 அன்று காலை காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தில் 24° C அளவு வெப்பம் நிலவும்.நாளை 12-02-2017 அன்று காலை 4 மணி முதல் 7 மணிவரை 11-02-2017 அன்று நிலவிய வெப்பநிலையை விட 1 முதல் 2° C கூடுதலாக இருக்கும்.

மேகமூட்டங்கள் இல்லாத தெளிவான வானிலை குளிருக்கு வழிவகுக்கும் ஜனவரி மாதம் இறுதியில் பெய்த மழைக்கு பிறகு ஏற்பட்ட தெளிவான வானிலையே அந்த வெப்ப குறைவுக்கு காரணம்.13-02-2017 இரவு முதல் தமிழகத்தில் மழை பொழிய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது அதனால் தான் தற்பொழுது குளிர் குறைந்து வருகிறது.மழை முடிந்த சில நாட்களில் மீண்டும் அந்த தெளிவான வானிலை ஏற்படும் அதனால் 16-02-2017க்கு பிறகு மீண்டும் குளிர் அதிகரிக்க தொடங்கலாம்.

காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை பொறுத்தவரையில் 14-02-2017 அன்று ஓரளவு மழையை எதிர்பார்க்கலாம் குறிப்பாக சொல்லவேண்டுமானால் 10 மி.மீ க்கும் குறைவான அளவு மழையையே எதிர்பார்க்கலாம்.







திருக்கடையூர் ரேக்ளா பந்தயம் 05-02-2017

நாகை மாவட்டத்தில் உள்ள திருக்கடையூரில் உலக புகழ் பெற்ற குதிரை,மாடு ரேக்ளா பந்தயங்கள் நாளை 05-02-2017 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது.தொடர்ந்து பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த இந்த பந்தயங்கள் கடந்த 2015ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு மற்றும் குதிரை,மாடு ரேக்ளா பந்தயங்களுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையால் 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் திருக்கடையூரில் ரேக்ளா ரேஸ் நடத்தப்படாமல் இருந்தது.இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த புதிய சட்டம் தமிழக அரசால் இயற்றப்பட்டு அது குடியரசு தலைவரின் ஒப்புதலையும் பெற்று விட்ட நிலையில் 2017இல் ரேக்ளா பந்தயங்கள் நடத்த ஏற்பாடுகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது இந்நிலையில் விதிமுறைகளை கடைபிடிக்க வில்லை என்று கூறி அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை இதனை அடுத்து நேற்று தரங்கம்பாடி தாசில்தார் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் உச்சநீதிமன்றம் விதித்த 14 நிபந்தனைகளுடன் நாளை திருக்கடையூர் ரேக்ளா ரேஸ் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.




நாகையில் பிளாஸ்டிக் முட்டை விற்பனை வெறும் வதந்தியா அல்லது உண்மையா ?

நேற்று நாகப்பட்டினத்தில் ஒரு கடையில் பிளாஸ்டிக் முட்டை விற்பனை நடைபெறுவதாக நாகை உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.தகவல் அறிந்து அந்த கடைக்கு விரைந்த உணவு பாதுகாப்பு அலுவலர் பிளாஸ்டிக் முட்டை விற்பனை குறித்து தகவல் அளித்த அந்த நபரையும் அங்கு வரவழைத்திருக்கிறார்.பின்னர் பிளாஸ்டிக் முட்டையை எப்படி கண்டறிவது என்பதனை அவருக்கு விளக்கியிருக்கிறார் அதன் பின் புகார் தெரிவித்த நபரையே சோதித்து பார்க்கவும் சொல்லியிருக்கிறார்.சரி அடுத்து நடந்ததை சீக்கிரம் சொல்லுங்கள் அது பிளாஸ்டிக் முட்டை தானே ? என்று ஆர்வத்துடன் கேட்பவர்களுக்கு மிஞ்சியது பல்புதான்.ஆம் அந்த சோதனையின் முடிவில் அது பிளாஸ்டிக் முட்டை இல்லை என்பது உறுதியாகிவிட்டதாம்.பிறகு எதற்கு இதை பதிவு செய்தீர்கள் என்று நீங்கள் கேட்கலாம் வந்த உணவு பாதுகாப்பு அலுவலர் பிளாஸ்டிக் முட்டையை எப்படி கண்டறிவது என்று கூறிய விளக்கங்கள் வேண்டாமா.வேண்டாம் என்பவர்கள் தயவு செய்து கீழே எழுதியிருப்பதை படிக்காதீர்கள்.

பிளாஸ்டிக் முட்டையை கண்டறியும் முறை 

நீங்கள் வாங்கியிருப்பது பிளாஸ்டிக் முட்டை என்று உங்களுக்கு தோன்றினால்

முட்டையை உடைக்காமல் முழு முட்டையை துணியில் வைத்து நன்கு உரச வேண்டும் பின்னர் சிறு துண்டு காகிதங்களுக்கு அருகில் கொண்டு சென்றால் பிளாஸ்டிக்கில் உராய்வு ஏற்பட்டு தூண்டப்பட்ட  மின்சக்தியால் அந்த காகிதம் முட்டை ஓட்டில் ஒட்டிக்கொள்ளும். 

முட்டையை சரிபாதியாக உடைத்த பின்னர் அடிப்பாகம் அகன்ற பகுதியின் உட்பகுதியில் காற்றால் உப்பிய பகுதி பிளாஸ்டிக் முட்டையில் காணப்படாது.

முட்டையின் உட்புறம் உள்ள ஜவ்வு போன்ற பகுதியை கவனமாக பிரித்து வைக்க வேண்டும்.அந்த முட்டை பிளாஸ்டிக்காக இருந்தால் சிறிது நேரத்தில் அந்த ஜவ்வு போன்ற பகுதி கடினத்தன்மை அடைந்துவிடும்.

முட்டையை உடைத்து உள்ளே உள்ள மஞ்சள் மற்றும் வெள்ளைக்கருவை ஊற்றினால் அது நல்ல முட்டையாக இருந்தால் கரு தனித்தனியே தெளிவாக இருக்கும்.


மேற்குறிய விஷயங்களை முயற்சி செய்து பார்த்தல் அது நல்ல முட்டையா அல்லது பிளாஸ்டிக் முட்டையா என்பதனை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.


குறிப்பு : இவை யாவும் நான் கண்டுபிடித்து கூறிய விஷயங்கள் அல்ல நாகை உணவு பாதுகாப்பு அலுவலர் பொது மக்களுக்கு கொடுத்த விளக்கங்கள்.

நாடா புயல் நாகை அருகே கரையை கடந்தது

தமிழகத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் பருவ மழையின் அளவு மிக குறைவு என ஊடகங்களில் இருந்து பொது மக்கள் வரை கருத்து தெரிவித்து வந்த நிலையில் குறை தீர்க்க உருவான நாடா பயலும் காணாமல் போனது.ஆம் நாடா புயலால் ஏற்பட்ட மழைபொழிவை விட டிசம்பர் மாதத்தில் ஏற்படும் பனிப்பொழிவே அதிகமா இருந்தது.பலரின் நம்பிக்கையை உடைத்து சுவுடுகள் இன்றி நாகப்பட்டினம் காரைக்கால் அருகே கரையை கடந்தது நாடா புயல்.ஒரு புயல் சின்னம் உருவானதும் அது ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகள் பற்றிய கவலை ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் நாடு வளம் கொழிக்க மழை வேண்டி காத்திருக்கும் மக்கள் கூட்டத்தின் குறை தீர்க்க வந்த இந்த புயல் சின்னதால் இன்று தணியாத தாகங்கள் ஏராளம் என்பதை என்னும் பொழுது வருத்தமாக தான் உள்ளது.இப்பொழுது மழை வேண்டி காத்திருந்த மக்களின் மனநிலையை டீ.ஆர் பாணியில் சொல்லனும்னா " டேய் நாடா இல்லனா போடா,இன்னும் ஒரு புயலுக்கு காத்திருப்பிப்போம் வாடா ".




இலங்கை கடற்படையின் தொடரும் அட்டூழியம்-காரைக்கால் மீனவர் படுகாயம்

எல்லை தாண்டி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என கடந்த 5ஆம் தேதி நடைப் பெட்ரா பேச்சுவார்தையின் பொழுது உறுதியளித்த இலங்கை அரசு அந்த ஒப்பந்தத்தை சிதைக்கும் வகையில் இன்று கோடியாக்கரை கடற்பகுதிக்கு அருகே மீன்பிடித்துக்கொண்டு இருந்த நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறது.இதில் காரைக்காலை  சேர்ந்த பாலமுருகன் என்ற மீனவரும் நாகையை சேர்ந்த அரவிந்தன் என்ற மீனவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டு இருந்த நிலையில் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் அங்கே அவர்களுக்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது படகுகளில் ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தாலும் கடலில் பயணம் செய்யும் பொழுது அதன் நம்பகத்தன்மை எந்த அளவு இருக்கும் என்பது கேள்விக்குரிய ஒரு  விஷயம்தான்.என்னதான் பாதுகாப்பு காரனங்கள் கூறப்பட்டாலும் கடலில் வழித்தவரும் அப்பாவி மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது மனித உரிமைக்கு எதிரான செயல் என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Related Posts Plugin for WordPress, Blogger...