தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
south west mansoon லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
south west mansoon லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2017 ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை உள்ள காலகட்டத்தில் தமிழகத்தில் 251.5 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது - இது 204.2 மி.மீ என்கிற சராசரி அளவை விட 23% அதிகம்

01-06-2017 முதல் 31-08-2017 வரை உள்ள காலகட்டத்தில் தமிழகத்தில் 251.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது இது இந்த காலகட்டத்தின் சராசரி அளவான 204.2 மி.மீ உடன் ஒப்பிடுகையில் 23% அதிகம்.அதே போல புதுச்சேரியில் இந்த காலகட்டத்தில் 300 மி.மீ மழை பதிவாகியுள்ளது இது சராசரி அளவான 235.2 மி.மீ உடன் ஒப்பிடுகையில் 28% அதிகம்.

ஆகமொத்ததில் தென்மேற்கு பருவமழை காலங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவாகும் சராசரி அளவை விட இந்த  ஆண்டு அதிக மழை பதிவாகியுள்ளது.

இந்த காலகட்டத்தில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 491.2 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது இது இந்த காலகட்டத்தின் அதன் மாவட்டத்தின் சராசரி அளவான 300.7 மி.மீ என்கிற அளவை விட 63% அதிகமாகும் இதற்கு அடுத்தபடியாக சிவகங்கை மாவட்டத்தில் 400.9 மி.மீ மழை இந்த காலகட்டத்தில் பதிவாகியுள்ளது இது அதன் சராசரி அளவான 202.1 மி.மீ உடன் ஒப்பிடுகையில் 98% அதிகமாகும்.

அதே சமயம் நீலகிரி மாவட்டத்தில் 01-06-2017 முதல் 31-08-2017 வரை உள்ள காலகட்டத்தில் 436.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது ஆனால் இது அதன் சராசரி அளவான 611.5 மி.மீ இந்த அளவை விட 29% சதவிகிதம் குறைவாகும் அதே போல காரைக்கால் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில்  இந்த ஆண்டு இதுவரையில் 137.9 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது இது அதன் சராசரி அளவான 191.5 மி.மீ என்கிற அளவை விட 28% குறைவாகும்.


2017 ஜூலை மாதம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் ? - வட கிழக்கு பருவமழை தொடங்கும் சில வாரங்களுக்கு முன்பு வரை தென்மேற்கு பருவமழை தொடரும்

2017 ஜூலை மாதத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வட கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புண்டு.தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரையில் முதல் வாரத்தின் இறுதியிலும்  மற்றும் இரண்டாம் வாரத்திலும்  தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தென் இந்தியாவில் சற்று பலவீனமடைவது போல தோண்டிறினாலும் மூன்று மற்றும் நான்றாவது வாரத்தில் மீண்டும் நல்ல பலன் வழங்க தொடங்கலாம் அதாவது 16-07-2017 முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழையால் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு அதனால் கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்கள் அனைத்தும் பயனடையும்.

அந்தமான் மற்றும் கேரளாவை தொடர்ந்து தில்லியிலும் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட முன்பே தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.வட இந்தியாவை பொறுத்தவரையில் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் கடுமையான வறட்சி நிலவி வந்த நிலையில் தற்பொழுது பெய்து வரும் இந்த தென்மேற்கு பருவமழை மிகவும் இன்றியமையானதாக கருதப்படுகிறது.இந்திய வட கிழக்கு மாநிலங்களில் அதிக அளவிலான மழை பதிவாகி வருகிறது ஜூலை மாதத்தில் வரக்கூடிய நாட்களிலும் அது தொடரும் அதேசமயம் மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களின் கடலோர பகுதிகளில் தற்பொழுது கன மழை பெய்து கொண்டு இருக்கிறது இது மூன்று மற்றும் நான்றாம் வாரங்களில் இது மெல்ல குறைய தொடங்கும் மொத்தத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் இந்த ஜூலை மாதம் முழுவதும் தொடரும்.

வளிமண்டலத்தில் தற்பொழுது நிலவும் சூழ்நிலைகளை நமக்கு சாதகமாக கொண்டு பார்க்கையில் இந்த தென்மேற்கு பருவமழையானது 2017 செப்டம்பர் மாதம் வரை தொடர அதிக வாய்ப்புகள் உள்ளது இதனால் இந்த 2017 ஆம் நாடு ஜூலை மாதத்தில் நாடு முழுவதும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நல்ல மழைக்கு  வாய்ப்புண்டு என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது.


Related Posts Plugin for WordPress, Blogger...