தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
swine flu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
swine flu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்' என்ற நாட்டு மருந்தை பயன்படுத்தலாம் என செய்தி பரவி வருகிறது. ஆம் டெங்கு காய்ச்சல் நோயை தடுக்க எப்படி  ' நிலவேம்பு கசாயம் ' பயன்படுத்தப்பட்டதோ அவ்வாறு பன்றிக்காய்ச்சல் நோயை தடுக்க இந்த 'கபசுர குடிநீர்' பயன்படும் என்று சில ஆண்டுகளுக்கு முன்னரே தமிழக சித்த மருத்துவ சங்கம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது இப்பொழுது இந்த 'கபசுர குடிநீர்' ஐ அங்கீகரிக்கு வகையில் புதுச்சேரி மருத்துவமனைகளில் இது பயன்படுத்தப்பட்டு வருவதாக செய்தி.

கபசுர குடிநீர் (பன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்து ) மூலப்பொருட்கள்
நில வேம்பு, சிறு தேக்கு, சுக்கு, திப்பிலி, லவங்கம், ஆடாதொடை வேர், கற்பூரவல்லி, கோரா கிழங்கு, அக்ரகாரம், சீந்தில், போஸ்டம் என, 11 வகையான மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

கபசுர குடிநீர் கஷாயம் எப்படி தயாரிப்பது ? 
'கபசுர குடிநீர் கஷாயம்' தயாரிக்க, 'கபசுர கஷாயம்' சூரணத்தை, 10 கிராம் எடுத்து, 200 மி.லி., தண்ணீரில் கலந்து, கொதிக்க வைக்க வேண்டும். அது, 50 மி.லி.,யாகும் வரை, சுண்ட காய்ச்சிய பின், அதை வடிகட்டி, காலை, மாலை அருந்த வேண்டும்.


குடிநீர் கஷாயம் சூரணம் எங்கு கிடைக்கும் ? 
நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இன்று புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி

புதுச்சேரியில் தொடர்ந்து பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எணிக்கை அதிகரித்து வருகிறது இந்நிலையில் பன்றிக்காய்ச்சல் நோய் தாக்கி சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி  முருகம்பாக்கத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன.இவருடன் சேர்த்து பன்றிக்காய்ச்சல் நோயால் புதுச்சேரியில் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.


புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி

புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது இதனை அடுத்து புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க மாநில அரசு சார்பில் பல முன்ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது ஆயினும் நேற்று வரை பன்றிக்காய்ச்சலால் 3 பேர் உயிர் இழந்து விட்டதாக செய்தி வெளியானது இந்நிலையில் இன்று புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது.தற்பொழுது வரை புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.


Related Posts Plugin for WordPress, Blogger...