தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
tamilnadu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tamilnadu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26-04-2019 வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் தற்போதைய நிலை என்ன ? தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடந்த 24 மணி நேர வானிலை தொடர்பான தகவல்கள்.

26-04-2019 நேரம் காலை 10:55 மணி நேற்று இரவில் நேரலையில் நான் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் அங்கும் இங்குமாக ஓரிரு இடங்களில் மட்டும் மழை மேகங்கள் பதிவாகி வருவதாக தெரிவித்து இருந்தேன் இன்றும் காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் #கோவை மாவட்டம் #வால்பாறை பகுதியை அடுத்த #சோலையாறு அணை பகுதியில் 16 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.அதே போல #குமரி மாவட்டம் #பெருஞ்சாணி அணை பகுதியிலும் கிட்ட தட்ட 8 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளின் ஓரிரு இடங்களை தவிர்த்து கடந்த 24 மணி நேரத்தில் அநேக பிற பகுதிகளிலும் வறண்ட வானிலையே நிலவி உள்ளது.இன்றும் இதே சுழல்களே தொடரும்.

26-04-2019 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#சோலையாறு  - #Solaiyar dam (கோவை மாவட்டம் ) - 16 மி.மீ
#பெருஞ்சாணி - #PERUNCHANI (கன்னியாகுமரி மாவட்டம் ) - 8 மி.மீ
#சுரளக்கோடு  - #SURALACODE (கன்னியாகுமரி மாவட்டம் ) - 5 மி.மீ 
#வால்பாறை (கோவை மாவட்டம் ) - 5 மி.மீ
#கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம் ) - 2 மி.மீ

அந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியை (Well Marked Low Pressure Area) பொறுத்தவரையில் தற்பொழுது அதாவது இன்று காலை 9:00 மணி வாக்கில் பூமத்திய ரேகை அருகே உள்ள வட கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்தது.தற்பொழுது பல்வேறு மாதிரிகளும் அது வலு பெற்று தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களை நெருங்கி பின்னர் ஆந்திர கடலோர பகுதிகளின் அருகே வளைந்து (Re-Curve) செல்ல தொடங்கும் என்பதைப் போன்ற தகவல்களை வெளிப்படுத்த தொடங்கியுள்ளன.நான் நேரலையில் தெரிவித்து இருந்தது போல அதனுடைய திசையை தீர்மானிப்பதில் அந்த உயர் அழுத்தத்தின்  (High Pressure) சுழற்சி முக்கிய பங்காற்றுகிறது.

அது எந்த அளவுக்கு அது தமிழகத்துக்கு  நெருக்கமாக வருகிறதோ அந்த அளவுக்கான மழை தமிழகத்தில் பதிவாகலாம்.இன்னமும் எதுவும் முடிந்து விட வில்லை.எதையும் உறுதி செய்வதற்கு முன் நாளை வரை காத்திருக்கவும்.

கடந்த 24 மணி நேரத்தின் மழை அளவுகளை குறிப்பிட தான் இந்த பதிவை பதிவிட்டேன்.அந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வுகள் தொடர்பாகவும் தமிழகத்திற்கான மழை சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் இன்று மீண்டும் பதிவிடுகிறேன்.

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


21-04-2019 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவாகிய மழை தொடர்பான தகவல்கள்

21-04-2019 நேரம் காலை 11:35 மணி நேற்றும் தமிழகத்தில் ஆங்காங்கே சில மாவட்டங்களில் பரவலான வெப்சலன மழை பதிவாகியுள்ளது குறிப்பாக #நீலகிரி  , #தேனி ,#கன்னியாகுமரி உட்பட மேற்கு மற்றும் தென் மேற்கு மாவட்டங்களிலும் #நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் #வேலூர் மாவட்டம் மேற்கு பகுதிகளிலும் #சேலம்  , #நாமக்கல் உள்ளிட்ட மேற்கு உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழை பதிவாகியுள்ளது குறிப்பாக நீலகிரி மாவட்டம் #ஊட்டி யில் 98 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது அதே போல #தேனி மாவட்டம் #சோத்துப்பாறை பகுதியிலும் 92 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது மேலும் நேற்று கிருஷ்னகிரி , தர்மபுரி , திருவண்ணாமலை மாவட்டத்தின் மேற்கு பகுதிகளிலும் #துறையூர்  , #மணப்பாறை உட்பட திருச்சி மாவட்டத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும் ஆங்காங்கே நல்ல மழை பதிவாகியுள்ளது.இன்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மேற்கு உள் மற்றும் தென் உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.

21-04-2019 இன்றும் காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பதிவான சில பகுதிகளின் நிலவரம்

#உதகமண்டலம் - #OOTY (நீலகிரி மாவட்டம் ) - 98 மி.மீ
#சோத்துப்பாறை (தேனி மாவட்டம் ) - 92 மி.மீ
#கோடநாடு (நீலகிரி மாவட்டம் ) - 75 மி.மீ
#ஓசூர் - #HOSUR (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 69 மி.மீ
#ஓமலூர் - #OMALUR (சேலம் மாவட்டம் ) - 66 மி.மீ
#வால்பாறை (கோவை மாவட்டம் ) - 66 மி.மீ
#மேட்டூர் (சேலம் மாவட்டம் ) - 65 மி.மீ
#குன்னூர் PTO (நீலகிரி மாவட்டம் ) - 63 மி.மீ
#சிவலோகம் -#சித்தாறு II   (கன்னியாகுமரி மாவட்டம் ) - 62 மி.மீ
#எடப்பாடி (சேலம் மாவட்டம் ) - 60 மி.மீ
#பரூர் - #BARUR(கிருஷ்னகிரி மாவட்டம் ) - 60 மி.மீ
#பொன்னையாறு அணை (திருச்சி மாவட்டம் ) - 57 மி.மீ
#சித்தாரல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 53 மி.மீ
#தொட்டபெட்டா -#Doddapetta , உதகமண்டலம் (நீலகிரி மாவட்டம் ) - 45 மி.மீ
#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 43 மி.மீ
#பெண்கொண்டபுரம் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 41 மி.மீ
#குமாரபாளையம் (நாமக்கல் மாவட்டம் ) - 41 மி.மீ
#திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம் ) - 41 மி.மீ
#பர்லியார் (நீலகிரி மாவட்டம் ) - 40 மி.மீ
நெடுங்கள் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 40 மி.மீ
#பாப்பிரெட்டிப்பட்டி  (தர்மபுரி மாவட்டம் ) - 40  மி.மீ
#பெரியகுளம் (தேனி மாவட்டம் ) - 38 மி.மீ
#திருசெங்கோடு  (நாமக்கல் மாவட்டம் ) - 38 மி.மீ
#மணப்பாறை ARG (திருச்சி மாவட்டம் ) - 38 மி.மீ
#கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம் ) - 36 மி.மீ
#துறையூர் (திருச்சி மாவட்டம் ) - 36 மி.மீ
புஷ்பாமருத்துவமனை அருகில் , குன்னூர் (நீலகிரி மாவட்டம் ) - 34 மி.மீ
#கோத்தகிரி (நீலகிரி மாவட்டம் ) - 32 மி.மீ
செங்கோட்டை (திருநெல்வேலி மாவட்டம் ) - 32 மி.மீ
#ஸ்ரீவைகுண்டம்  (தூத்துக்குடி மாவட்டம் ) - 31 மி.மீ
கெத்தி -#GEDDAI  (நீலகிரி மாவட்டம் ) - 30 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம் ) - 30 மி.மீ
#சங்கரிதுர்க் (சேலம் மாவட்டம் ) - 28 மி.மீ
தானிஷ்பேட்டை  - #DANISHPET (சேலம் மாவட்டம் ) - 28 மி.மீ
#ஆணைமடவு அணை  - #ANAIMADAVU DAM (சேலம் மாவட்டம் ) - 26 மி.மீ
#தர்மபுரி (தர்மபுரி மாவட்டம் ) - 24 மி.மீ
மயிலடி  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 24 மி.மீ
#அரூர்  (தர்மபுரி மாவட்டம் ) - 24 மி.மீ
ஆண்டிபட்டி (தேனி மாவட்டம் ) - 24 மி.மீ
#பல்லடம்  (திருப்பூர் மாவட்டம் ) - 24 மி.மீ
#நாகர்க்கோயில்  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 23 மி.மீ
மணப்பாறை TOWN (திருச்சி மாவட்டம் ) - 23 மி.மீ
போச்சம்பள்ளி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 22 மி.மீ
கடவூர் (கரூர் மாவட்டம் ) - 21 மி.மீ
குழித்துறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 20 மி.மீ
பூதப்பாண்டி  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 20 மி.மீ
தளி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 20 மி.மீ
#நாமக்கல் (நாமக்கல் மாவட்டம் ) - 20 மி.மீ
#தாராபுரம் (திருப்பூர் மாவட்டம் ) - 18 மி.மீ
#ஆலங்காயம் (வேலூர் மாவட்டம் ) - 17 மி.மீ
#கூடலூர் - #GUDALUR (நீலகிரி மாவட்டம் ) - 16 மி.மீ
#உத்தமபாளையம் (தேனி மாவட்டம் ) - 16 மி.மீ
உத்தம்பாளையம் (தேனி மாவட்டம் ) - 16 மி.மீ
#உடுமலைப்பேட்டை  (திருப்பூர் மாவட்டம் ) - 16 மி.மீ
#தட்டையங்கார்பேட்டை (திருச்சி மாவட்டம் ) - 15 மி.மீ
#சேந்தமங்கலம் (நாமக்கல் மாவட்டம் ) - 15 மி.மீ
பரமத்தி வேலூர் (நாமக்கல் மாவட்டம் ) - 15 மி.மீ
#பென்னாகரம் (தர்மபுரி மாவட்டம் ) - 15 மி.மீ
#கோவில்பட்டி (தூத்துக்குடி மாவட்டம் ) - 15 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 14 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம் ) - 14 மி.மீ
#சேலம் (சேலம் மாவட்டம் ) - 12 மி.மீ
கன்னியாகுமரி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 12 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம் ) - 12 மி.மீ
அரண்மனைப்புத்தூர் (தேனி மாவட்டம் ) - 12 மி.மீ
#எட்டையபுரம்  (தூத்துக்குடி மாவட்டம் ) - 12 மி.மீ
பெரியார் (தேனி மாவட்டம் ) - 13 மி.மீ
#பீளமேடு - கோவை விமான நிலையம்  (கோவை மாவட்டம் ) - 11 மி.மீ
தென்காசி (திருநெல்வேலி மாவட்டம் ) - 11 மி.மீ
#ஆம்பூர் (வேலூர் மாவட்டம் ) - 11 மி.மீ
#ராதாபுரம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 11 மி.மீ
லால்குடி (திருச்சி மாவட்டம் ) - 10 மி.மீ
#மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம் ) - 10 மி.மீ
ராசிபுரம்  (நாமக்கல் மாவட்டம் ) - 10 மி.மீ
எருமைப்பட்டி (நாமக்கல் மாவட்டம் ) - 10 மி.மீ
பாண்டவையாறு (திருவாரூர் மாவட்டம் ) - 9 மி.மீ 
#கிண்ணக்கோரை (நீலகிரி மாவட்டம் ) -9 மி.மீ
மேலூர் (மதுரை மாவட்டம் ) - 9 மி.மீ
பெருஞ்சாணி  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 9 மி.மீ
#சூளகிரி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 9 மி.மீ
ஊத்தங்கரை (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 9 மி.மீ
வீரப்பாண்டி (தேனி மாவட்டம் ) - 9 மி.மீ

இவை தவிர்த்து பல இடங்களிலும் மழை பதிவாகியுள்ளது 9 மி.மீ க்கும் குறைவான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளை நான் மேலே குறிப்பிடவில்லை.இந்த பட்டியலில் இடம்பெறாத உங்களது பகுதியின் மழை அளவை அறிய விரும்பினால் உங்களது ஊரின் பெயரை COMMENT செய்யுங்கள் நான் பதில் வழங்குகிறேன்.

நிகழ் நேரத்தில் பதிவாகி வரும் மழை தொடர்பான தகவல்களுடன் இன்று மீண்டும் பதிவிடுகிறேன்.அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.

20-04-2019 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவான மழை அளவுகளின் தகவல்கள்

20-04-2019 நேரம் நண்பகல் 12:15 மணி நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல தமிழகத்தில் நேற்று மேற்கு ,மேற்கு உள் ,தென் உள் ,தென் மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பசலன மழை தீவிரமடைந்து உள்ளது நேற்று நாமக்கல் பகுதியில் நல்ல மழை பதிவாகியுள்ளது.20-04-2019 ஆகிய இன்றும் தமிழகத்தின் மேற்கு ,மேற்கு உள் ,வட உள்  , உள் ,தென் மற்றும் தென் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் சூறைக்காற்றுடனான இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது .இது தொடர்பாகவும் நிகழ் நேரத்தில் மழைக்கான வாய்ப்புகளுடனும் இன்று இன்னும் சற்று நேரத்தில் பதிவிடுகிறேன்.

மேலும் அடுத்து வரக்கூடிய வாரத்தில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புகள் உள்ளது.இதன் நகர்வுகள் தொடர்பாகவும் தமிழக மழைக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் அடுத்தடுத்த பதிவுகளில் விவாதிப்போம்.

20-04-2019 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#கீழ்-கோதையார்  - #LOWER-KOTHAIYAR ARG (கன்னியாகுமரி மாவட்டம் ) - 93 மி.மீ
நாமக்கல் AWS - #NAMAKKAL (நாமக்கல் மாவட்டம் ) - 88 மி.மீ
#கொடைக்கானல் படகுக்குழாம் (திண்டுக்கல் மாவட்டம் ) - 78 மி.மீ
#கொடைக்கானல்  - #KODAIKANAL (திண்டுக்கல் மாவட்டம் ) - 66 மி.மீ
#மஞ்சளாறு அணை (திண்டுக்கல் மாவட்டம் ) - 58 மி.மீ
#வேடசந்தூர் (திண்டுக்கல் மாவட்டம் ) - 56 மி.மீ
#பரமத்திவேலூர் (நாமக்கல் மாவட்டம் ) - 38 மி.மீ
#குந்தாபாலம் ARG (நீலகிரி மாவட்டம் ) - 36 மி.மீ
#மேல்பவானி (#UPPER-BHAVANI)  - 36 மி.மீ 
#மேலூர் ARG (மதுரை மாவட்டம் ) - 35 மி.மீ
#எருமப்பட்டி - #ERUMAPPATI (நாமக்கல் மாவட்டம் ) - 30 மி.மீ
#சுரளக்கோடு - #SURALACODE (கன்னியாகுமரி மாவட்டம் ) - 29 மி.மீ
#கின்னக்கோரை (நீலகிரி மாவட்டம் ) - 28 மி.மீ
நிலக்கோட்டை (திண்டுக்கல் மாவட்டம் ) - 28 மி.மீ
#தாராபுரம் (திருப்பூர் மாவட்டம் ) - 26 மி.மீ
#ஆத்தூர் (சேலம் மாவட்டம் ) - 25 மி.மீ
ஏற்காடு AWS (சேலம் மாவட்டம் ) - 25 மி.மீ
#பிக்கெட்டி (நீலகிரி மாவட்டம் ) - 24 மி.மீ
#கெத்தி -#GEDDAI (நீலகிரி மாவட்டம் ) - 24 மி.மீ
RDO அலுவலகம் - நாமக்கல்  (நாமக்கல் மாவட்டம் ) - 24 மி.மீ
#காமாட்சிபுரம் - திண்டுக்கல் மேற்கு (திண்டுக்கல் மாவட்டம் ) - 23 மி.மீ
#சேலம்  - #SALEM (சேலம் மாவட்டம் ) - 23 மி.மீ
#திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம் ) - 22 மி.மீ
#மூலனூர் (திருப்பூர் மாவட்டம் ) - 20 மி.மீ
#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 19 மி.மீ
#ஏற்காடு - அண்ணாப்பூங்கா அருகில் (சேலம் மாவட்டம் ) - 17 மி.மீ
#ராசிபுரம் (நாமக்கல் மாவட்டம் ) - 17 மி.மீ
#சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம் ) - 17 மி.மீ
#பெரியநாயக்கன் பாளையம் (கோவை மாவட்டம் ) - 17 மி.மீ
#பெருஞ்சாணி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 16 மி.மீ
#சித்தாரல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 16 மி.மீ
#புத்தன்அணை - #PUTHANDAM (கன்னியாகுமரி மாவட்டம் ) - 15 மி.மீ
#பட்டுக்கோட்டை (தஞ்சாவூர் மாவட்டம் ) - 15 மி.மீ
#வாணியம்பாடி (வேலூர் மாவட்டம் ) - 15 மி.மீ
#எடப்பாடி (சேலம் மாவட்டம் ) - 14 மி.மீ
கள்ளிக்குடி (மதுரை மாவட்டம் ) - 13 மி.மீ
#திருவாரூர் - #TIRUVARUR (திருவாரூர் மாவட்டம் ) - 13 மி.மீ
#கோபிசெட்டிபாளையம் (ஈரோடு மாவட்டம் ) - 12 மி.மீ
மேலூர்  - பர்மாகாலனி அருகில் (மதுரை மாவட்டம் ) - 12 மி.மீ
கொல்லிமலை (நாமக்கல் மாவட்டம் ) - 12 மி.மீ
அவிநாசி (திருப்பூர் மாவட்டம் ) - 11 மி.மீ
#சங்கரிதுர்க் (சேலம் மாவட்டம் ) - 10 மி.மீ
குப்பணம்பட்டி (மதுரை மாவட்டம் ) - 10 மி.மீ
#அரவாக்குறிச்சி (கரூர் மாவட்டம் ) - 8 மி.மீ
பவானி (ஈரோடு மாவட்டம் ) - 7 மி.மீ
தல்லாகுளம் (மதுரை மாவட்டம் ) - 6 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம் ) - 6 மி.மீ
#மோகனூர் (நாமக்கல் மாவட்டம் ) - 5 மி.மீ
மதுரை தெற்கு (மதுரை மாவட்டம் ) - 5 மி.மீ
ஒரத்தநாடு (தஞ்சாவூர் மாவட்டம் ) - 5 மி.மீ
#கரூர் (கரூர் மாவட்டம் ) - 4 மி.மீ
ராமேஸ்வரம் (ராமநாதபுரம் மாவட்டம் ) - 4 மி.மீ
பரமக்குடி (ராமநாதபுரம் மாவட்டம் ) - 3 மி.மீ

அனைவருக்கும் எனது நண்பகல் வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


14-04-2019 இன்று முதல் தொடங்கிய வாரத்தில் அடுத்து வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கலாம் ?

14-04-2019 நேரம் காலை 10:45 மணி  எனது கடந்த பதிவில்  நான் குறிப்பிட்டு இருந்தது போல  நிகழும் வாரத்தின் மத்திய வார நாட்களில் தமிழகத்தின் மேற்கு உள் ,மேற்கு மற்றும் தென் உள் மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது குறிப்பாக 17-04-2019 அல்லது 18-04-2019 ஆம் தேதிகள் முதல் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் நான் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களிலும் சில மத்திய உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.மழை பதிவாக தொடங்கியதும் மழைக்கு வாய்ப்புகள் உள்ள பகுதிகள் தொடர்பாக அவ்வப்பொழுது நமது பக்கத்தில் பதிவிடுகிறேன்.

தற்போது மேற்கத்திய கலக்கத்தின் (Western Disturbance) தாக்கத்தால் #ஈரான் அருகே வளிமண்டலத்தின் மேலடுக்கில் குறைந்த காற்றழுத்தம் நிலவி வருகிறது இம்முறை இது அடுத்து வரக்கூடிய நாட்களில் மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து பாகிஸ்தானை கடந்து ராஜஸ்தான் மாநிலத்தின் மேற்கு பகுதிகளை அடைய முற்பட்டு வலுவிழக்கும் இதன் காரணமாக இமய மலை பகுதிகளில் அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.மேற்கத்திய கலக்கத்தின் (Western Disturbance) தாக்கம் வட மற்றும் வட மேற்கு இந்தியாவில் 18-04-2019 ஆம் தேதி முதல் குறைய தொடங்க வாய்ப்புகள் உள்ளது.

பகல் நேர வெப்பநிலையை பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக பகுதிகளிலும் அடுத்து வரக்கூடிய நாட்களில் வெப்பம் அதிகரித்து இருக்கவே வாய்ப்புகள் உள்ளது குறிப்பாக #வேலூர் , #திருச்சி  , #ஈரோடு  , #சேலம் ,#நாமக்கல் ,#தர்மபுரி ,#மதுரை , #விருதுநகர் ,#பெரம்பலூர் ,#அரியலூர் ,#தஞ்சை ,#கரூர் ,திருப்பூர் மாவட்டங்களிலும் #காஞ்சிபுரம் ,#விழுப்புரம் மற்றும் #திருவள்ளூர் மாவட்டங்களின் மேற்கு பகுதிகளிலும் #திண்டுக்கல் மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளிலும் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் அதிக வெப்பம் பகல் நேரத்தில் பதிவாகலாம்.#கும்பகோணம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் பகல் நேரத்தில் அடுத்து வரக்கூடிய நாட்களில் 101 டிகிரி பாரன்ஹீட் மற்றும் அதற்கு அதிகமான அளவு வெப்பம் பதிவாக வாய்ப்புகள் உள்ளது.வெப்பநிலை தொடர்பாக இனி வரக்கூடிய நாட்களில் அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.


மேடன்-ஜூலியன் அலைவு (Madden-Julian Oscillation) தற்போது அதன் இரண்டாவது  கட்டத்தில் 1க்கும் குறைவான வீச்சு அளவுடன் வலு குறைந்து உள்ளது அடுத்து வரக்கூடிய 2 அல்லது 3 நாட்களில் இதன் வலு மேலும் குறைய தொடங்கலாம் 20-04-2019 ஆம் தேதி வாக்கில் அதன் வலு சற்று அதிகரிக்க தொடங்கி 1க்கும் குறைவான வீச்சு அளவுடன் அதன் இரண்டாவது கட்டத்திலேயே (Phase 2) நிகழும் வாரத்தில் அது தொடரலாம்.

எல்-நினோ தெற்கு அலைவு
------------------------------------------
தற்போது பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள பசிபிக் கடல் பரப்பின் மத்திய பகுதியான நினோ 3.4 பகுதியில் 0.9 °C வெப்பமும் மேற்கு பகுதியான நினோ 4 பகுதியில் 0.8 °C வெப்பமும் கடந்த வாரம் பதிவாகி யுள்ளது கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் பசிபிக் கடல் பரப்பின் மத்திய மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளின் வெப்பம் இயல்பை விட அதிகரித்துள்ளது அதே சமயம் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்தோனேசியா அருகே உள்ள பசிபிக் கடலின் மேற்கு பகுதிகளில் கடல் பரப்பு வெப்பநிலையானது இயல்பை விட குறைவாக உள்ளது.தற்போது பசிபிக் கடல் பரப்பில் எல் நினோவுக்கான சூழல்கள் நிலவி வருகின்றன இதன் வலு குறைந்து ஒரு பலவீனமான எல்நினோ வுக்கான சூழல்கள் இந்த ஆண்டின் நிகழும் இளவேனிற்கலாம் முழுவதும் தொடர 80% வாய்ப்புகள் உள்ளதாக NCEP இன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.எல் -நினோ மற்றும் லா - நினா எப்படி ஏற்படுகிறது அதனால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் வால்கர் சுழற்சி என்றால் என்ன என்பதை போன்ற தகவல்களை எளிமையான தமிழில் அறிய - https://goo.gl/SDiQfL எல்நினோ மற்றும் லா நினா குறித்த அடிப்படை தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/n4vHby

இந்திய பெருங்கடலின் பூமத்திய ரேகை அருகே உள்ள மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு இடையிலான வெப்பநிலை வேறுபாட்டை அடிப்படையாக கொண்ட Indian Ocean Dipole தற்போது அதன் நடுநிலையான கட்டத்தில் உள்ளது.இந்திய பெருங்கடல் இருதுருவம் (Indian Ocean Dipole) குறித்த விரிவான தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/XmfuBT


அனைவருக்கும் எனது சித்திரைத் திருநாள் / தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.


25-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவாகிய மழை அளவுகள்

25-10-2018 நேரம் காலை 10:35 மணி நான் இங்கே பதிவேற்றம் செய்திருக்கும் செயற்கைகோள் படங்கள் இன்று காலை 10:00 மணி வாக்கில் பதிவானவை நேற்று இலங்கையில் நிலைகொண்டிருந்த அந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சியானது தற்போது சற்று மேற்கு நோக்கி நகர்ந்து இதென்ன மேற்கு இலங்கைக்கு அருகே உள்ள கடலோர பகுதிகளில் நிலைகொண்டுள்ளது அதே சமயம் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கைக்கு கிழக்கே ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது இதன் தாக்கத்தால் தென்மேற்கு இலங்கைக்கு அருகே உள்ள அந்த மேலடுக்கு சுழற்சியானது முற்றிலும் வலுவிழந்து போக வாய்ப்புகள் உள்ளது.தற்பொழுதும் நாகை மாவட்டம் #கோடியக்கரை பகுதிக்கு தெற்கே உள்ள வங்கக்கடல் பகுதிகளில் தொடர்ந்து சிறு சிறு மழை மேகங்கள் குவிந்து வருகின்றன மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர பகுதிகளிலும் ஆங்காங்கே மழை மேகங்கள் பதிவாக தொடங்கியிருக்கின்றன.25-10-2018 ஆகிய இன்றும் நான் நேற்று பதிவிட்டு இருந்தது போல தென் கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாகலாம் குறிப்பாக கடலோர பகுதிகளில் சில இடங்கள் வலுவான இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.இன்று ராமநாதபுரம் ,தூத்துக்குடி ,நெல்லை ,கன்னியாகுமரி ,சிவகங்கை ,புதுக்கோட்டை ,விருதுநகர்,மதுரை  மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புகள் உண்டு.அடுத்த 24 மணி நேரத்தில் எந்தெந்த பகுதிகளில் வலுவான மழையை எதிர்பார்க்கலாம் என்பது தொடர்பான தகவல்களை இன்று பிற்பகலில் பதிவிடுகிறேன்.


25-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவாகிய மழை அளவுகள்

#காயல்பட்டினம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 98 மி.மீ
#திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி மாவட்டம் ) - 87 மி.மீ 
#திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம் ) - 84 மி.மீ
#தூத்துக்குடி (தூத்துக்குடி மாவட்டம் ) - 63 மி.மீ 
#வேதாரண்யம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) -63 மி.மீ
#தூத்துக்குடி துறைமுகம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 58 மி.மீ
#ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 57 மி.மீ
#சாத்தான்குளம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 40 மி.மீ
#குழித்துறை (கன்னியாகுமரி மாவட்டம் )- 35 மி.மீ
#சிவகாசி (விருதுநகர் மாவட்டம் ) - 33 மி.மீ
#தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம் )- 31 மி.மீ
#ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 30 மி.மீ
#பாளையம்கோட்டை (திருநெல்வேலி மாவட்டம் ) - 23 மி.மீ 
#ராதாபுரம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 21 மி.மீ
#நாங்குநேரி (திருநெல்வேலி மாவட்டம் ) - 20 மி.மீ
#கன்னியாகுமரி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 19 மி.மீ
#திருபுவனம் (சிவகங்கை மாவட்டம் ) - 16 மி.மீ
#இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 16 மி.மீ
#சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம் ) - 15 மி.மீ
#சிவகிரி (திருநெல்வேலி மாவட்டம் ) - 15 மி.மீ
#பரமக்குடி (ராமநாதபுரம் மாவட்டம் ) - 14 மி.மீ
#கோவிலங்குளம் (விருதுநகர் மாவட்டம் ) - 14 மி.மீ
#கொளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 13 மி.மீ
#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 12 மி.மீ
#விளாத்திகுளம் (ராமநாதபுரம் மாவட்டம் ) - 12 மி.மீ
#பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 12 மி.மீ
#முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம் ) - 11 மி.மீ
#அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 10 மி.மீ
#மணியாச்சி (தூத்துக்குடி மாவட்டம் ) - 10 மி.மீ
#சேரன்மாதேவி (திருநெல்வேலி மாவட்டம் ) - 9 மி.மீ
#நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம் )  - 9 மி.மீ
#பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 9 மி.மீ
#திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம் ) - 9 மி.மீ
#மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம் )  - 8 மி.மீ

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


16-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் 4 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம்.

16-10-2018 நேரம் காலை 10:00 மணி நான் நேற்றைய எனது பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல நேற்று நள்ளிரவு நேரத்தில் நாகை மாவட்டம் அருகே உள்ள வங்கக்கடல் பகுதியில் சிறு சிறு மழை மேகங்கள் குவிய தொடங்கின #காரைக்கால் உட்பட காரைக்கால் மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பதிவானது மேலும் இன்று அதிகாலை #கன்னியாகுமரி மாவட்டத்தில் நுழைந்த மழை மேகங்கள் #நாகர்கோயில் உட்பட அம்மாவட்டத்தின் பல் இடங்களிலும் மழை பொழிவை ஏற்படுத்தின மேலும் அதிகாலை முதல் வட கடலோர மாவட்டங்களில் அங்கும் இங்குமாக மிக சிறிய  மழை மேகங்கள் நுழைந்து சில இடங்களில் லேசான மழையை பதிவு செய்தன காஞ்சிபுரம் மாவட்டத்தின் கடலோர பகுதியான #மாமல்லபுரம் பகுதியில் கிட்டத்தட்ட 2 மி.மீ அளவு லேசான மழை பதிவாகியுள்ளது.தற்பொழுதும் சிறு சிறு மழை மேகங்கள் வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே நுழைந்து வருகின்றன தற்சமயம் நாகை மாவட்டம் கொடியம்பாளையம் - பழையாறு மற்றும் #திருமுல்லைவாசல் பகுதிகளின் அருகே சிறிய மழை மேகங்கள் நுழைய முற்பட்டு வருகின்றன.16-10-2018 இன்றும் தமிழகத்தில் ஆங்காங்கே இடியுடன் கூடிய பரவலான மழைக்கு வாய்ப்புகள் உண்டு இன்று மேற்கு , மேற்கு உள் ,தென் உள் ,தென் ,உள் மற்றும் வட உள் மாவட்டங்களில் ஆங்காங்கே சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பதிவாகலாம் மேலும் இன்று கடலோர மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.மழைக்கு வாய்ப்புகள் உள்ள பகுதிகள் தொடர்பாக இன்று பிற்பகலில் பதிவிடுகிறேன்.இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை நேரத்திலும் நாகை உட்பட ஆங்காங்கே சில வட கடலோர மாவட்டங்களில் மழை பதிவாகலாம்.


16-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் 4 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம்.

#காரையூர்  - பொன்னமராவதி தாலுக்கா (புதுக்கோட்டை மாவட்டம் )  - 105 மி.மீ
#ஈச்சன்விடுதி (தஞ்சை மாவட்டம் ) - 50 மி.மீ
#வெட்டிகாடு (தஞ்சை மாவட்டம் ) - 45 மி.மீ
#விருதுநகர் (விருதுநகர் மாவட்டம் ) - 35 மி.மீ
#மருங்காபுரி (திருச்சி மாவட்டம் ) - 32 மி.மீ
#நாகப்பட்டினம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 28 மி.மீ
#ஏற்காடு AWS (சேலம் மாவட்டம் ) - 27 மி.மீ
#அரண்மனைபுதூர் (தேனி மாவட்டம ) - 27 மி.மீ
#நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 26 மி.மீ
#கமுதி (ராமநாதபுரம் மாவட்டம் ) - 25 மி.மீ
#வால்பாறை (கோவை மாவட்டம் ) - 24 மி.மீ
#கமுதி ARG (ராமநாதபுரம் மாவட்டம் ) - 23 மி.மீ
#பொன்னையாறு அணை (திருச்சி மாவட்டம் ) - 21 மி.மீ 
#ஒரத்தநாடு (தஞ்சை மாவட்டம் ) - 19 மி.மீ
#நத்தம் (திண்டுக்கல் மாவட்டம் ) - 19 மி.மீ
#விருதுநகர் AWS (விருதுநகர் மாவட்டம் ) - 19 மி.மீ
#நிலக்கோட்டை (திண்டுக்கல் மாவட்டம் ) - 18 மி.மீ
#வீரபாண்டி (தேனி மாவட்டம் ) - 18 மி.மீ
#திருவாரூர் (திருவாரூர் மாவட்டம் ) - 17 மி.மீ
#கூடலூர் (தேனி மாவட்டம் ) - 15 மி.மீ
#மணமேல்குடி (புதுக்கோட்டை மாவட்டம் ) - 15 மி.மீ
#ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம் ) - 15 மி.மீ
#சங்கரன்கோயில் (திருநெல்வேலி மாவட்டம் ) - 14 மி.மீ
#உத்தமபாளையம் (தேனி மாவட்டம் ) - 13 மி.மீ
#எம்ரால்டு (நீலகிரி மாவட்டம் ) - 13 மி.மீ
#காரைக்கால் (காரைக்கால் மாவட்டம் ) - 12 மி.மீ
#வாடிப்பட்டி (மதுரை மாவட்டம் ) - 12 மி.மீ
#அன்னவாசல் (புதுக்கோட்டை மாவட்டம் ) - 11 மி.மீ
#ஊட்டி (நீலகிரி மாவட்டம் ) - 11 மி.மீ
#தளி (கிருஷ்ணகிரி மாவட்டம் ) - 10 மி.மீ
#சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 7 மி.மீ
#கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம் ) - 7 மி.மீ
#கொளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 6 மி.மீ
#தாராபுரம் (திருப்பூர் மாவட்டம் ) - 6 மி.மீ
#கோத்தகிரி (நீலகிரி மாவட்டம் ) - 5 மி.மீ
#குந்தாபாலம் (நீலகிரி மாவட்டம் ) - 5 மி.மீ
#பாண்டவையாறு (திருவாரூர் மாவட்டம் ) - 5 மி.மீ
#மஞ்சளாறு - மேகமலை (தேனி மாவட்டம் ) - 5 மி.மீ
#திண்டுக்கல் கிழக்கு (திண்டுக்கல் மாவட்டம் ) - 5 மி.மீ
#வேடசந்தூர் (திண்டுக்கல் மாவட்டம் ) - 5 மி.மீ 
#சேலம் (சேலம் மாவட்டம் ) - 4 மி.மீ
#நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம் ) - 4 மி.மீ
#சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம் ) - 4 மி.மீ
#சிவகிரி (திருநெல்வேலி மாவட்டம் ) - 4 மி.மீ

 அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்

15-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம்.

15-10-2018 நேரம் காலை 10:00 மணி நான் நேற்று எனது இரவு பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல இன்று அதிகாலை முதல் வட கடலோர மாவட்டங்கள் உட்பட கடலோர மாவட்டங்களில் அங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பதிவானது சற்று முன்பு கடலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஆங்காங்கே சாரல் அல்லது தூறல் பதிவாகி வந்ததை செயகைக்கோள் படங்களின் உதவியுடன் அறிய முடிகிறது மேலும் இன்று காலை காரைக்கால் மாவட்டத்திலும் மிதமான மழை பதவாகியுள்ளது.இனி அடுத்து வரக்கூடிய நாட்களிலும் நள்ளிரவு அல்லது அதிகாலை வேளையிலும் காலை நேரங்களிலும் வட கடலோர மாவட்டங்கள் உட்பட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே அவ்வப்பொழுது மழை பதிவாக தொடங்கலாம் .மேலும் நேற்றைய எனது பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல 15-10-2018 ஆகிய இன்று தமிழகத்தில் பரவலான மழைக்கு வாய்ப்புகள் உண்டு குறிப்பாக மேற்கு , மேற்கு உள் ,தென் உள் ,தென் மற்றும் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புகள் உண்டு எந்தெந்த பகுதிகளில் மழை பதிவாக அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது தொடர்பாக இன்று பிற்பகலில் மீண்டும் பதிவிடுகிறேன்.

15-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம்.

#நெடுங்கள் (கிருஷ்ணகிரி மாவட்டம் ) - 106 மி.மீ
#சாத்தனூர் அணை (திருவண்ணாமலை மாவட்டம் ) - 74 மி.மீ
#கோடநாடு (நீலகிரி மாவட்டம் ) - 62 மி.மீ
#வால்பாறை (கோவை மாவட்டம் ) - 59 மி.மீ
#தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம் ) - 55 மி.மீ
#பரூர் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 54 மி.மீ
#பரமத்திவேலூர் (நாமக்கல் மாவட்டம் ) -53 மி.மீ
#வாணியம்பாடி (வேலூர் மாவட்டம் ) - 50 மி.மீ
#ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம் ) - 50 மி.மீ
#போச்சம்பள்ளி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 49 மி.மீ
#சிவகங்கை (சிவகங்கை மாவட்டம் ) - 49 மி.மீ
#போளூர் (திருவண்ணாமலை மாவட்டம் ) - 48 மி.மீ
#வேலூர் (வேலூர் மாவட்டம் ) - 45 மி.மீ
#பாப்பிரெட்டிபட்டி (தர்மபுரி மாவட்டம் ) - 45 மி.மீ
#சூலூர் (கோயம்பத்தூர் மாவட்டம் ) - 41 மி.மீ
#ஆம்பூர் (வேலூர் மாவட்டம் ) - 39 மி.மீ
#உத்தமபாளையம் (தேனி மாவட்டம் ) - 38 மி.மீ
#கிருஷ்னகிரி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 37 மி.மீ
#கோவில்பட்டி (தூத்துக்குடி மாவட்டம் ) - 33 மி.மீ
#ஓசூர் AWS (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 33 மி.மீ
#கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம் ) - 33 மி.மீ
#கோயம்பத்தூர் விமான நிலையம் (கோவை மாவட்டம் ) - 32 மி.மீ
#R.S.மங்களம் (ராமநாதபுரம் மாவட்டம் ) - 31 மி.மீ
#சூளகிரி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 30 மி.மீ
#பையூர் AWS (தர்மபுரி மாவட்டம் ) - 29 மி.மீ
#திருவண்ணாமலை  (திருவண்ணாமலை மாவட்டம் ) - 28 மி.மீ
#ஹொக்கேனக்கல்  (தர்மபுரி மாவட்டம் ) - 28 மி.மீ
#தேவகோட்டை (சிவகங்கை மாவட்டம் ) - 28 மி.மீ
#மேட்டூர் (சேலம் மாவட்டம் ) - 28 மி.மீ
#கலசப்பாக்கம்  (திருவண்ணாமலை மாவட்டம் ) - 27 மி.மீ
#ஆண்டிபட்டி (தேனி மாவட்டம் ) - 27 மி.மீ
#மடுகூர் (தஞ்சை மாவட்டம் ) - 27 மி.மீ
#பெண்கொண்டபுரம் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 25 மி.மீ
#கல்லாட்டி (நீலகிரி மாவட்டம் ) - 25 மி.மீ
#கோத்தகிரி (நீலகிரி மாவட்டம் ) - 24 மி.மீ
#தளவாடி (ஈரோடு மாவட்டம் ) - 24 மி.மீ
#மூலனூர் (திருப்பூர் மாவட்டம் ) - 24 மி.மீ
#கோயம்பத்தூர் தெற்கு (கோவை மாவட்டம் ) - 23 மி.மீ
#கயத்தாறு (தூத்துக்குடி மாவட்டம் ) - 23 மி.மீ
#பல்லடம் (திருப்பூர் மாவட்டம் ) - 22 மி.மீ
#மரண்டஹள்ளி  (தர்மபுரி மாவட்டம் ) - 22 மி.மீ
#செங்கம்  (திருவண்ணாமலை மாவட்டம் ) - 22 மி.மீ
#பென்னாகரம் (தர்மபுரி மாவட்டம் ) - 20 மி.மீ
#திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம் ) - 20 மி.மீ
#ஏற்காடு (சேலம் மாவட்டம் ) - 20 மி.மீ
#ஊத்தங்கரை (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 19 மி.மீ
#கொல்லிமலை (நாமக்கல் மாவட்டம் ) - 16 மி.மீ
#சின்னக்கல்லாறு (கோவை மாவட்டம் ) - 15 மி.மீ
#ராயக்கோட்டை (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 15 மி.மீ
#திருசெங்கோடு (நாமக்கல் மாவட்டம் ) - 15 மி.மீ
#எம்ரால்ட்  (நீலகிரி மாவட்டம் ) - 15 மி.மீ
#திருப்பூர் (திருப்பூர் மாவட்டம் ) - 15 மி.மீ
#கடவூர் (கரூர் மாவட்டம் ) - 14 மி.மீ
#அவிநாசி (திருப்பூர் மாவட்டம் ) - 13 மி.மீ
#உதகமண்டலம் (நீலகிரி மாவட்டம் ) - 12 மி.மீ
#கோயம்பத்தூர் AWS (கோவை மாவட்டம் ) - 12 மி.மீ
#தர்மபுரி (தர்மபுரி மாவட்டம் ) - 12 மி.மீ
#கிளன்மோர்கான் (நீலகிரி மாவட்டம் ) - 11 மி.மீ
#பாலக்கோடு  (தர்மபுரி மாவட்டம் ) - 11 மி.மீ
#கடம்பூர் (தூத்துக்குடி மாவட்டம் ) - 11 மி.மீ
#குறுங்குளம் (தஞ்சை மாவட்டம் ) - 11 மி.மீ
#பழனி (திண்டுக்கல் மாவட்டம் ) - 10 மி.மீ
#கோபிசெட்டிபாளையம் (ஈரோடு மாவட்டம் ) - 10 மி.மீ
#அஞ்செட்டி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 10 மி.மீ
#பொன்னியாறு அணை (திருச்சி மாவட்டம் ) - 9 மி.மீ
#கரூர்பரமத்தி (கரூர் மாவட்டம் ) -9 மி.மீ
#தரங்கம்பாடி (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 9 மி.மீ
#கெட்டி (நீலகிரி மாவட்டம் ) - 8 மி.மீ
#ஓசூர் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 8 மி.மீ
#கூடலூர் (தேனி மாவட்டம் ) - 8 மி.மீ
#நடுவட்டம் (நீலகிரி மாவட்டம் ) - 8 மி.மீ
#முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம் ) - 6 மி.மீ
#எட்டையபுரம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 6 மி.மீ
#அதிராம்பட்டினம் (தஞ்சை மாவட்டம் ) - 6 மி.மீ
#குன்னூர் (நீலகிரி மாவட்டம் ) - 6 மி.மீ
#அரூர்  (தர்மபுரி மாவட்டம் ) - 5 மி.மீ
#மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம் ) - 5 மி.மீ
#மருங்காபுரி (திருச்சி மாவட்டம் ) - 5 மி.மீ

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்


14-10-2018 ஏமன் நாட்டில் கரையை கடந்த லூபன் (LUBAN ) புயல் - கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவாகிய மழை அளவுகளின் பட்டியல்

14-10-2018 நேரம் காலை 11:25 மணி நேற்று மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் ஓமன் நாட்டின் #சலாலா (#Salalah) நகருக்கு கிழக்கே நிலைகொண்டிருந்த அந்த #லூபன் (#LUBAN ) புயலின் மையப்பகுதியானது நாம் எதிர்பார்த்ததை போலவே மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து சற்று முன்பு #ஏமன் (#YEMEN) நாட்டின் #அல்கய்தா (#AL-GHAYDAH) அருகே கரையை கடக்க தொடங்கியது தற்பொழுது அதன் மையப்பகுதியானது #DAWHAL அருகே நிலைகொண்டுள்ளது.இது தொடர்பான செயற்கைகோள் படத்தையும் இந்த பதிவுடன் இணைக்கிறேன்.

தமிழகத்தை பொறுத்தவரையில் நான் நேற்று பதிவிட்டு இருந்தது போல #டிட்லி (#TITLI) புயலின் தாக்கம் தற்பொழுது முற்றிலும் குறைந்துள்ளதால் உள் மாவட்டங்களில் கிழக்கு திசை காற்று மீண்டும் வலுப்பெற தொடங்கியிருக்கிறது.காற்று திசை மாற்றம் காரணமாக இன்று முதல் உள் மாவட்டங்களில் பரவலான வெப்பசலன மழைக்கு வாய்ப்புகள் உண்டு.இன்றும் மேற்கு மற்றும் மேற்கு உள் மாவட்டங்களில் ஆங்காங்கே வலுவான இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது மேலும் வட உள் ,தென் உள் ,உள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் இன்று சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது மேலும் கடலோர மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகலாம்.எந்தெந்த பகுதிகளில் மழைக்கான அதிக வாய்ப்புகள் உள்ளது எனபது தொடர்பாக இன்று பிற்பகிலில் பதிவிடுகிறேன்.

14-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம்.

#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 102 மி.மீ
#சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம் ) - 55 மி.மீ
#பர்லியார் (நீலகிரி மாவட்டம் ) - 42 மி.மீ
#வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம் ) - 40 மி.மீ
#தாராபுரம் (திருப்பூர் மாவட்டம் ) - 39 மி.மீ
#ஏற்காடு AWS (சேலம் மாவட்டம் ) - 35 மி.மீ
#குன்னூர் PTO (நீலகிரி மாவட்டம் ) -27 மி.மீ
#திருப்பூர் (திருப்பூர் மாவட்டம் ) - 26 மி.மீ
#போளூர் (திருவண்ணாமலை மாவட்டம் ) - 26 மி.மீ
#உடுமலைப்பேட்டை (திருப்பூர் மாவட்டம் ) - 25 மி.மீ 
#காங்கேயம் (திருப்பூர் மாவட்டம் ) - 23 மி.மீ 
#கோடநாடு (நீலகிரி மாவட்டம் ) - 22 மி.மீ
#கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம் ) - 21 மி.மீ
#குன்னூர் (நீலகிரி மாவட்டம் ) - 21 மி.மீ
#இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 20 மி.மீ
#பெரியகுளம் (தேனி மாவட்டம் ) - 20 மி.மீ
#பவானிசாகர் (ஈரோடு மாவட்டம் ) -19 மி.மீ
#குந்தா பாலம்  (நீலகிரி மாவட்டம் ) - 19 மி.மீ
#சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம் ) -19 மி.மீ
#பல்லடம் (திருப்பூர் மாவட்டம் ) - 18 மி.மீ 
#கோபிசெட்டிபாளையம் (ஈரோடு மாவட்டம் ) - 12 மி.மீ
#கெத்தி (நீலகிரி மாவட்டம் ) - 11 மி.மீ
#வால்பாறை PTO (கோவை மாவட்டம் ) - 11 மி.மீ
#மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம் ) - 10 மி.மீ
#மணமேல்குடி (புதுக்கோட்டை மாவட்டம் ) - 10 மி.மீ
#கொல்லிமலை (நாமக்கல் மாவட்டம் ) - 9 மி.மீ
#அதிராம்பட்டினம் (தஞ்சை மாவட்டம் ) - 9 மி.மீ
#கன்னிமார் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 7 மி.மீ
#கொட்டாரம் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 7 மி.மீ
#நாமக்கல் (நாமக்கல் மாவட்டம் ) - 6 மி.மீ
#கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம் ) - 6 மி.மீ
#கோத்தகிரி (நீலகிரி மாவட்டம் ) - 5 மி.மீ
# பொன்னையாறு அணை (திருச்சி மாவட்டம் ) - 5 மி.மீ
#பாப்பிரெட்டிபட்டி (தர்மபுரி மாவட்டம் ) - 5 மி.மீ
#அவிநாசி (திருப்பூர் மாவட்டம் ) - 5 மி.மீ

அடுத்த 24 மணி நேரத்தின் மழைக்கான வாய்ப்புகள் தொடர்பாக இன்று மீண்டும் பிற்பகலில் பதிவிடுகிறேன்.அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.



14-05-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?


14-05-2018 நேரம் அதிகாலை 1:15 மணி அடுத்து வரக்கூடிய நாட்களிலும் தமிழிகக்தில் ஆங்காங்கே வெப்பசலன மழைக்கு வாய்ப்புகள் உண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சத்தீவுகளுக்கு அருகே நிலைகொண்டிருந்த மேலடுக்கு சுழற்சியானது தற்பொழுது சோமாலியாவுக்கு கிழக்கே அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது அடுத்து வரக்கூடிய நாட்களில் அது வலு பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறி சோமாலியா ,ஏமன் நாட்டு கடல் பகுதிகளை நோக்கி நகர முற்படலாம் செங்கடலை நெருங்க முற்படுகையில் அது முற்றிலும் வலுவிழந்து போக வாய்ப்புகள் உள்ளது . இனி அதன் நகர்வுகள் தொடர்பான தகவல்கள் நமக்கு தேவையற்ற கதைதான் ஆனாலும் அதனை எதற்காக இங்கு நான் குறிப்பிட்டுள்ளேன் என்றால் இனி அந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்துக்கு நேரடியான பயன்கள் என்று எதுவுமே இருக்கபோவது கிடையாது என்பதனை எடுத்துரைக்க தான் ஆனால் அதன் தாக்கம் அரபிக்கடல் பகுதியில் முற்றிலும் குறையத் தொடங்கிய பிறகு மீண்டும் மாலத்தீவுகள் அருகே 16-05-2018 அல்லது 17-05-2018 ஆம் தேதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புகள் உள்ளது இதன் காரணமாக காற்று திசை மாற்றம் (Wind Discontinuity) ஏற்பட்டு மீண்டும் தமிழக உட் பகுதிகளில் நல்ல வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது மேலும் கீழ் திசை காற்றும் மேற்கு திசை காற்றும் மோதிக்கொள்ளும் இடங்களில் காற்று திசை மாற்றம் ஏற்பட்டு (Wind Discontinuity) இடியுடன் கூடிய கனமழை பதிவாகவும் வாய்ப்புகள் உள்ளது.மொத்தத்தில் 17-05-2018 அல்லது அதற்கு பிறகு வரக்கூடிய நாட்களில் நேற்றுடன் தொடங்கியிருக்கும் இந்த வாரத்தில் தமிழகத்தின் மேற்கு ,வட மேற்கு ,வட உள் ,தென் ,தென் மேற்கு ,தென் உள் ,தென் கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே நல்ல மழைக்கு வாய்ப்புகள் உண்டு.வட கடலோர மாவட்டங்களை பொறுத்தவரையில் பிறந்திருக்கும் இந்த வாரத்திலும் கடலோர பகுதிகளில் மழைக்கான வாய்ப்புகள் கொஞ்சம் குறைவு தான்.பிற்பகல் வேளையில் கிழக்கு திசைக்காற்றும் கீழ் திசை காற்றும் மோதும் பகுதியான திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை மேகங்கள் உருவாகி வருகின்றன ஆனால் வெப்ப சூழல்களின் காரணமாக அவை விரைவில் வலுவிழந்து விடுகின்றன.பொதுவாக வெப்பசலன மழையை பொறுத்தவரையில் மழைக்கான வாய்ப்புகள் என்பது அப்போதைய சூழல்களை பொறுத்தே அமையும் ஆகையால் மழைக்கான வாய்ப்புகளை அடுத்து வரக்கூடிய நாட்களிலும் அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.

இந்திய வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பெரிய அளவிலான சில அம்சங்கள் குறித்து பார்ப்போம்(Large Scale Factors). 

எல் நினோ தெற்கு அலைவு :
தற்பொழுது பூமத்திய ரேகைக்கு அருகே இருக்கும் பசிபிக் கடலின் கடல் பரப்பு வெப்பநிலையானது இயல்பை விட குறைவாகவே உள்ளது இந்திய பருவமழையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நினோ 3.4 பகுதியின் வெப்பநிலையானது 0.2° C இயல்பை விட குறைவாக உள்ளது கடந்த மாதத்தில் அப்பகுதியின் கடல் பரப்பு வெப்பநிலையானது சற்று உயர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்பது போல தோன்றினாலும் மீண்டும் இந்த மாதத்தில் வெப்பநிலை குறைய தொடங்கியிருக்கிறது அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கும் லாநினாவுக்கான சூழல்களே நிலவ வாய்ப்புகள் உள்ளது.இந்த மாதத்திற்குள்ளாக எல் நினோ தெற்கு அலைவு ஆனது அதன் நடுநிலையான கட்டத்தை அடைய 50% வாய்ப்புகள் உள்ளது என NOAA அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தாலும்.பருவமழை தொடங்கிய பிறகும் சில நாட்களுக்கு லா -நினாவுக்கான சூழல்கள் தொடரவும் வாய்ப்புகள் உள்ளது.

மேடன் - ஜூலியன் அலைவு :
மேடன் - ஜூலியன் அலைவு ஆனது தற்பொழுது அதன் முதல் கட்டத்தில் உள்ளது அடுத்து வரக்கூடிய நாட்களில் அதன் வீச்சு அளவு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது ஆனால் பல சர்வதேச மாதிரிகளின் கூற்றுப்படி அடுத்து வரக்கூடிய நாட்களில் அதன் வீச்சு அளவு குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறேது.சில மாதிரிகள் குறைந்த வீச்சு அளவுடன் வரக்கூடிய வாரத்தில் இது இரண்டாவது கட்டத்துக்கு வருவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கின்றன MJO வின் நகர்வுகளை பொறுத்திருந்து பார்ப்போம்.மேலும் கடந்த 2017 நவம்பர் மாதம் முதல் 2018 மார்ச் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் மேடன் - ஜூலியன் அலைவு அதன் மூன்றாவது கட்டத்தில் இருந்த பொழுதும் தென் இந்தியாவிற்கு அருகே உள்ள அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் மழையின் அளவு அதிகரித்ததற்கான சான்றுகள் உள்ளன.

இந்திய பெருங்கடல் இருதுருவம் (Indian Ocean Dipole):
இந்திய பெருங்கடல் இருதுருவம் (Indian Ocean Dipole) ஆனது அதன் நடுநிலையான கட்டத்தில் உள்ளது அடுத்து வரக்கூடிய நாட்களிலும் இதே நிலையே தொடரலாம்.

நான் முன்கூட்டியே தொடர்ந்து பதிவிட்டு வருவது போல தற்போதைய சூழல்கள் அனைத்தும் சிறந்ததொரு தென்மேற்கு பருவழைக்கு சாதகமாக உள்ளன.இதனால் தமிழகம் எந்த அளவுக்கு பலன் பெரும் என்பதனை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.எதுவாயினும் முன்கூட்டியே நான் பதிவிட்டு விடுவேன்.

நான் மேலே குறிப்பிட்டு இருக்கும் தகவல்கள் மற்றும் வாய்ப்புகள் அனைத்தும் தற்போதைய வானிலை சூழல்களை அடிப்படையாக கொண்ட ஒரு கணிப்பு தான்.இதில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.

எல் -நினோ மற்றும் லா - நினா எப்படி ஏற்படுகிறது அதனால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் வால்கர் சுழற்சி என்றால் என்ன என்பதை போன்ற தகவல்களை எளிமையான தமிழில் அறிய - https://goo.gl/SDiQfL
எல்நினோ மற்றும் லா நினா குறித்த அடிப்படை தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/n4vHby
இந்திய பெருங்கடல் இருதுருவம் (Indian Ocean Dipole) குறித்த விரிவான தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/XmfuBT


17-02-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

17-02-2018 நேரம் பிற்பகல் 3:35 மணி அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை எப்படி இருக்கலாம் என்பது குறித்து பார்ப்பதற்கு முன் இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த 15-02-2018 ஆம் தேதி அன்று வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்து இருக்கும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

  • தற்போது நினோ 3.4  ( Nino 3.4 Region ) பகுதியில் கடல் பரப்பு வெப்பநிலையானது (Sea Surface Temperature) அதன் இயல்பான அளவில் இருந்து 0.9 ° செல்ஸியஸ் குறைவாக உள்ளது.
  • மேடன் - ஜூலியின் அலைவு (MJO) ஆனது தற்பொழுது அதன் 7 வது கட்டத்தில் (Phase) அடுத்து வரக்கூடிய நாட்களிலும் அது 7வது கட்டத்திலேயே (Phase) ஒன்றுக்கும் குறைவான வீச்சு அளவுடன் தொடர வாய்ப்புகள் உள்ளது.
  • இந்திய பெருங்கடல் இருமுனையானது  (Indian Ocean Dipole ) ஆனது தற்பொழுது அதன் நடுநிலையான கட்டத்தில் உள்ளது அடுத்து வரக்கூடிய நாட்களிலும் இதில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் குறைவு.
நமது பக்கத்தில் புதிதாக இணைந்திருக்கும் நண்பர்களுக்காக சில அடிப்படை தகவல்களை உள்ளடக்கிய இணைப்புகளை கீழே இணைக்கிறேன்.

எல்நினோ மற்றும் லா நினா குறித்த அடிப்படை தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/n4vHby

எல் -நினோ மற்றும் லா - நினா எப்படி ஏற்படுகிறது அதனால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் வால்கர் சுழற்சி என்றால் என்ன என்பதை போன்ற தகவல்களை எளிமையான தமிழில் அறிய - https://goo.gl/SDiQfL

இந்திய பெருங்கடல் இருமுனை (Indian Ocean Dipole) குறித்த விரிவான தகவல்களை தமிழில் அறிய  - https://goo.gl/XmfuBT



இந்த ஆண்டு மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் - மே  மாதங்களில் எல் - நினோ தெற்கு அலைவு  (El - nino Southern Oscillation ) ஆனது தனது நடுநிலையான கட்டத்துக்கு (Neutral Phase ) வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது அதற்கான சாத்தியக் கூறுகள் 55% உள்ளது அது அவ்வாறாக அதன் நடுநிலையான கட்டத்தை எட்டும் பட்சத்தில் நிகழும் 2018 ஆண்டு இயல்பான அளவு தென்மேற்கு பருவமழைக்கும்  வாய்ப்புகள் உள்ளது.சரியான தருணத்தில் இது தொடர்பான விரிவான தகவல்களை பதிவிடுகிறேன்.மேலும் நிகழும் ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  ஏப்ரல் , மே  மற்றும் ஜூன் மாதங்களில் அதன் இயல்பான அளவை விட வெப்பம் அதிகரித்து  இருக்கவும் வாய்ப்புகள் உள்ளது.



17-02-2018 அடுத்து வரக்கூடிய வாரத்திலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவ வாய்ப்புகள் உள்ளது.இன்று தற்பொழுது நிலவி வரும் வானிலையே அடுத்து வரக்கூடிய வாரத்திலும் தமிழகத்தின் அநேக இடங்களில் தொடரலாம்.வரக்கூடிய நாட்களில் திருப்பூர்  , ஈரோடு , திருவள்ளூர்  , மதுரை  ,கரூர் ,நாமக்கல் மாவட்டங்களின் அநேக இடங்களில்  பகல் நேரத்தில் குறிப்பாக காலை 11:00 மணியிலிருந்து மாலை 4:00 மணி வரை உள்ள நேரத்தில் 35° முதல் 38° செல்சியஸ் வரையில்  வெப்பநிலை நிலவ தொடங்கலாம் . விருதுநகர்  , நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களிலும் பகல் நேர வெப்பநிலை அதிகரிப்பு தொடரும்.வரக்கூடிய நாட்களில் அதிகாலை நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் பனிப்பொழிவு தொடரும் கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்டத்திலும் அதிகாலை நேரத்தில் ஆங்காங்கே பனிப்பொழிவு உணரப்படலாம்.அடுத்து வரக்கூடிய நாட்களில் கொடைக்கானல் மற்றும் வால்பாறை போன்ற பகுதிகளிலும் 1° முதல் 2° செல்சியஸ் வரையில் பகல் நேரத்தில் வெப்பநிலை உயர்வுக்கு வாய்ப்புகள் உள்ளது.

தற்போதைய இந்த வானிலையில் ஏதேனும் புதிய மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.

28-10-2017 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் ?

27-10-2017 நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது அந்த செய்தியை தெரிந்துகொண்ட பலர் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகிவிட்டதா ? என்று   நமது பக்கத்தில் என்னிடம் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர் அவர்களுக்கான எனது பதில் இதுதான் தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அந்தமானுக்கும் - தமிழகத்துக்கும் இடையே வளிமண்டலத்தில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது தற்பொழுது நிலவும் சூழ்நிலைகளை கொண்டு பார்க்கும் பொழுது அது ஒரு புயலாக வலு பெற வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது அதிகபட்சமாக அது தென் தமிழகத்துக்கு அருகே அடுத்த 3 அல்லது 4  நாட்களுக்குள் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற வாய்ப்புகள் உள்ளது அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அது வலுவிழக்கவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது அதனால் அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் அருகே புயலுக்கான வாய்ப்பு மிகவும் குறைவு.நான் இதற்கு முன்னரே தொடர்ந்து பதிவிட்டு வருவது போல வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டதாலேயே  அடுத்தடுத்து புயல்கள் உருவாகி தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் கனமழை பதிவாகவேண்டும் என்ற அவசியமில்லை கடந்த 3 நாட்களில் துளியளவும் மழை பெறாத இடங்களும் தமிழகத்தில் உள்ளன என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

27-10-2017 நேற்று தமிழக தென் மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரித்து இருந்தது 28-10-2017 (இன்றும் ) அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களிலும் இதே  நிலை தொடரலாம் இன்றுடன் ஒப்பிடுகையில் நாளை மழையின் அளவு சற்று குறைந்தே இருக்கும் 29-10-2017 அன்று இரவு அல்லது 30-10-2017 முதல் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம் 31-10-2017 முதல் தமிழகம் முழுவதும் பரவலான மழைக்கு வாய்ப்பு உண்டு.தற்பொழுது தெற்கு சீன பகுதிகளுக்கு அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உள்ளது அந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வருகின்ற 31-10-2017 அல்லது 01-11-2017 அன்று வியட்நாம் கடல் பகுதிகளுக்கு அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தாய்லாந்தை கடந்து  02-11-2017 அல்லது 03-11-2017 ஆம் தேதிகளில் வலு குறையாமல் அந்தமான் கடல் பகுதியை அடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் அது 04-11-2017 அல்லது அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அது ஒரு சக்திவாய்ந்த புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது தற்பொழுது நிலவும் சூழ்நிலைகளைக் கொண்டு பார்க்கையில் அது வங்கக்கடல் பகுதியில் வட மேற்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் அது இப்படித்தான் நகரும் என்றும் இந்த பகுதியில் தான் கரையை கடக்கும் என்றும் இப்பொழுதே 100% உறுதியுடன் கூறுவது சாத்தியமற்றது அதனால் அடுத்த ஒரு 4 முதல் 5 நாட்கள் காத்திருந்து அந்த புயல் குறித்த தகவல்களை பதிவிடுவதே சிறந்தது என நான் கருதுகிறேன் இந்த பதிவின் தொடர்ச்சியை வருகின்ற 03-11-2017 அன்று அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை தகவல்களை பதிவிடுகையில் சேர்த்து பதிவிடுகிறேன்.

நான் மேலே பதிவிட்ட தகவல்கள் அனைத்தும் தற்போது நிலவும் வானிலையை உள்ளடிக்கிய ஒரு கணிப்பு தான் இதில் மாற்றங்கள் ஏதாவது ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.


29-09-2017 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் ?

29-09-2017 (செப்டம்பர் 29) வெள்ளி கிழமையான இன்று முதல் கர்நாடகா மற்றும் கோவா மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் மழையின் அளவு இயல்பை விட அதிகரிக்கும் அதனால் தென் கர்நாடகா ,கோவா மற்றும் தென் ஆந்திர பகுதிகள் பயன்பெறும் தமிழகத்தை பொறுத்தவரையில் இதனால் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் அவ்வப்பொழுது பயன்பெறும் கிருஷ்ணகிரி ,வேலூர் ,திருவள்ளூர் ,சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்பொழுது மழையை எதிர்பார்க்கலாம் 29-09-2017 இன்றும் 30-09-2017 நாளையும் நான் மேலே குறிப்பிட்ட மூன்று மாவட்டங்களை தவிர இதர மாவட்டங்களில் மழையின் அளவு குறைந்தே இருக்கும் அக்டோபர் 1 ஆம் தேதிக்கு பிறகு இந்த நிலை லேசாக மாற தொடங்கும் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளிலும் வட கடலோர மற்றும் தென் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளிலும் மழையின் அளவு சிறிதே அதிகரிக்க தொடங்கும்.

02-10-2017 அன்று கர்நாடகாவை ஒட்டியுள்ள அரபிக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புகள்  உள்ளது அதனால் கர்நாடக மாநிலத்தில் மழையின் அளவு மீண்டும் அதிகரிக்க தொடங்கலாம் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது ஆகையால் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் காவிரி நீரின் அளவு மேலும் அதிகரிக்கலாம் அதேசமயம் தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.03-10-2017 முதல் தமிழக உட்பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது அதனலால் அன்று முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம்.

06-10-2017 அல்லது 07-10-2017 அன்று வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது அது பெரும்பாலும் மேற்கு நோக்கி நகரவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது ஆனால் அது புயலாக மாறுமா என்பதை இப்பொழுதே உறுதியாக கூற முடியாது அதற்கு சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.

நான் மேற்குறிய விஷயங்கள் யாவும் தற்பொழுது நிலவும் வானிலையை உள்ளடக்கிய ஒரு கணிப்பு தான் இதில் மாற்றங்கள் ஏதாவது இருப்பின் மீண்டும் பதிவிடுகிறேன்.


09-09-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

09-09-2017 இன்று அதிகாலை முதலே நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் நல்ல மழை பெய்து வருகிறது இன்று காலை 2:00 மணிக்கு தொடங்கிய மழை தற்பொழுது வரையில் நிற்காமல் தொடர்ந்து பெய்து வருகிறது இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24  நேரத்தில் அதாவது 08-09-2017 காலை 8:30 மணி முதல் 09-09-2017 காலை 8:30  உள்ள 24 மணி நேரத்தில் காரைக்காலில் 11.8 மி.மீ மழையும் நாகப்பட்டினத்தில் 9.2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது அதே சமயம் இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதிகளில் 113.5 மி.மீ மழையும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் 103.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

09-09-2017 இன்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி ,இராமநாதபுரம் ,சிவகங்கை ,மதுரை ,திருநெல்வேலி ,கன்னியாகுமரி ,விருதுநகர் ,புதுக்கோட்டை,திண்டுக்கல்  உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நல்ல  வாய்ப்புண்டு.

09-09-2017 இன்று கரூர் ,நாகப்பட்டினம் ,விழுப்புரம் ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ,வேலூர் ,கோயம்பத்தூர் ,திருப்பூர் ,கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஓரளவு நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

09-09-2017 இன்று திருச்சி ,தஞ்சாவூர் ,அரியலூர்,பெரம்பலூர் ,சேலம் மாவட்டங்களிலும் மழையை எதிர்பார்க்கலாம்.


07-09-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

07-09-2017 வளிமண்டலத்தில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழினத்தில் இன்று பரவலான மழைக்கு வாய்ப்புண்டு.07-09-2017 இன்று ஈரோடு ,திருப்பூர் ,சேலம் ,கோயம்பத்தூர் ,நீலகிரி,கிருஷ்னகிரி ,தர்மபுரி ,வேலூர் ,திண்டுக்கல் ,மதுரை ,புதுக்கோட்டை ,திருச்சி ,தஞ்சாவூர் ,நாகப்பட்டினம் ,தேனி ,தூத்துக்குடி ,சிவகங்கை ,திருவாரூர் ,விழுப்புரம் ,திருவண்ணாமலை,அரியலூர் ,பெரம்பலூர் ,நாமக்கல் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு உண்டு.

07-09-2017 இன்று ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நலன் மழைக்கு வாய்ப்புண்டு குறிப்பாக காங்கேயம் ,சென்னிமலை ,புதூர் ,பெருந்துறை மற்றும் அதன் சுற்று வட்டப்பகுதிகளில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.

07-09-2017 இன்று நீலகிரி மாவட்டம் கூடலூர் ,கோயம்பத்தூர் மாவட்டம் வால்பாறை ,ஆழியார் ,சின்னகள்ளார் கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்னகிரி திட்டுக்கள் மாவட்டம் பண்ணைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஓரளவு நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

07-09-2017 தற்பொழுது காரைக்கால் மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது நாகப்பட்டினம் மாவட்டத்திலும் ஒரு சில பகுதிகளில் இன்று நல்ல மழைக்கு வாய்ப்புண்டு மேலும் விளாத்திகுளம் ,பேராவூரணி ,கமுதி உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று நலன் மழையை எதிர்பார்க்கலாம்.


2017 ஜூன் 1 முதல் செப்டம்பர் 6 ஆம் தேதிவரை உள்ள காலகட்டத்தில் தமிழகத்தில் இயல்பை விட 45% அதிக மழை பதிவாகியுள்ளது

நிகழும் 2017 ஆம் ஆண்டு 01-06-2017 (ஜூன் 1) முதல் 06-09-2017 (செப்டம்பர் 6) ஆம் தேதி வரை உள்ள காலகட்டத்தில் தமிழகத்தில் 318.4 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது  இது அதன் இயல்பான அளவான 219.7 மி.மீ உடன் ஒப்பிடுகையில் 45% அதிகம் அதே போல இதே காலகட்டத்தில் புதுச்சேரியில் 333.1 மி.மீ மழை பதிவாகியுள்ளது இது அதன் இயல்பான அளவான 253.8 மி.மீ என்ற அளவுடன் ஒப்பிடுகையில் 31 % அதிகம்.

இயல்பாக செப்டம்பர் மாதம் முதல்வாரத்தில் தமிழகத்தில் 2 அல்லது 3 மி.மீ தான் பதிவாகும் ஆனால் இந்த ஆண்டு தொடர்ந்து 10 மி.மீ என்கிற அளவுக்கும் அதிகமாக பதிவாகிவருகிறது.06-09-2017  இன்று காலை 8:30 மணிக்கு பதிவான அளவின் படி கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 13.1 மி.மீ அளவு மழை பதிவாகியிருந்தது.

06-09-2017 இன்று காலை 8:30 மணியளவில் பதிவான அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் அதாவது 05-09-2017 காலை 8:30 மணிமுதல் 06-09-2017 காலை 8:30 மணி இடைவெளியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 60 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய பகுதிகள்.

காஞ்சிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம் )  -----------------> 100 மி.மீ
திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர் மாவட்டம்  ) ----------------->90 மி.மீ
திருமானுர் (அரியலூர் மாவட்டம் ) ----------------->90 மி.மீ
லால்குடி (திருச்சி மாவட்டம் ) ----------------->90 மி.மீ
கிராண்ட் அணைக்கட்டு (தஞ்சாவூர் மாவட்டம் ) -----------------> 77 மி.மீ
பெரியகுளம் (தேனி மாவட்டம் ) -----------------> 70 மி.மீ
சமயபுரம் (திருச்சி மாவட்டம் ) -----------------> 70 மி.மீ
வாணியம்பாடி (வேலூர் மாவட்டம் ) -----------------> 68 மி.மீ 
நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம் ) -----------------> 63 மி.மீ
ஸ்ரீபெரம்பத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம் ) -----------------> 60 மி.மீ 
பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) -----------------> 57 மி.மீ


2017 செப்டம்பர் மாதம் இனி வரக்கூடிய நாட்ககளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் ?

2017 செப்டம்பர் மாதம் தொடக்கத்திலயே கடந்த மூன்று நாட்களாக அதாவது 01-09-2017 முதல் 03-09-2017 வரை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.இன்னும் 40 முதல் 60 நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரி வட கிழக்கு பருவமழையை எதிர்நோக்கியுள்ள நிலையில் கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் அதிகரித்து இருக்கிறது இதனால் கடந்த மாதங்களை போன்று தமிழக உள் மாவட்டங்களில் உருவாகும் மழை மேகங்கள் விறுவிறுவென வங்கக்கடலை நோக்கி கிழக்கு திசையில் வேகமாக நகர்ந்து வராமல் நின்று நிதானமாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிக மழையை வழங்கிவருகின்றன.இதனால் தமிழக உள் மாவட்டங்களின்  ஒரு சில பகுதிகளில் அதிக மழை பதிவாகி வருகிறது சில நேரங்களில் மழைமேகங்கள் மேற்கு நோக்கியும் நகர முற்படுகின்றன ஆனால் அதிக தூரம் அவைகள் அப்படியே பயணிப்பது கிடையாது இனி வரக்கூடிய சில நாட்களுக்கும் இந்த நிலை தொடரும் என எதிர்பார்க்கலாம்.

அடுத்து வரக்கூடிய நாட்களை பொறுத்தவரையில் அதாவது 05-09-2017 முதல் 14-09-2017 வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்  இதற்கு முந்தைய நாட்களுடன் ஒப்பிடும் அளவு மழை இல்லாவிட்டாலும்  ஓரளவு கணிசமான மழையை பரவலாக எதிர்பார்க்கலாம் 14-09-2017 க்கு பிறகு ஒரு சில பகுதிகளில் குறிப்பாக தென் மாவட்டங்களில் மழையின் அளவு குறைவது போல் தோன்றினாலும் அதற்கு பிறகு வரும் செப்டம்பரின் இறுதி வாரத்தில் மீண்டும் மழையின் அளவு மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

08-09-2017 முதல் அரபிக்கடலை ஒட்டியுள்ள தென் மாநிலங்களின் கடலோர பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்கும் இதனால் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்கள் பயனடையும்.11-09-2017 அல்லது 12-09-2017 ஆம் தேதிகளில் அரபிக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவும் வாய்ப்புகள் உள்ளது அது பெரும்பாலும் மேற்கு திசையை நோக்கியே நகரும் அப்பொழுது மீண்டும் உள் மாவட்டங்களிலும் ,கடலோர மாவட்டங்களிலும் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம்.


50 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் 2017 ஆகஸ்ட் மாதத்தில் 160 மி.மீ அளவை தாண்டி பதிவாகிய மழை

2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகத்துக்கு சிறந்த மழையை வழங்கியுள்ளது.இந்த மாதத்தில் மட்டும் சுமார் 161.8 மி.மீ அளவு மழை தமிழகத்தில் பதிவாகியுள்ளது திட்டத்திட்ட 50 ஆண்டுகளுக்கு பிறகு இப்பொழுது தான் ஆகஸ்ட் மாதத்தில் 160 மி.மீ அளவை தாண்டி மழை பதிவாகியுள்ளது இதற்கு முன்பு 1966 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 167.8 மி.மீ மழை பதிவாகியிருந்தது அதன் பிறகு கடந்த 50 ஆண்டுகளாக ஒரு முறை கூட ஆகஸ்ட் மாதத்தில் 160 மி.மீ அளவு மழை தமிழகத்தில் பதிவாகவில்லை.

இருபது மற்றும் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்தில் பதிவான அதிக பட்ச மழையே 249.1 மி.மீ தான் அதுவும் 108 வருடங்களுக்கு முன்பு 1909ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது.


31-08-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

31-08-2017 இன்று சிவகங்கை ,மதுரை ,ராமநாதபுரம் ,திருநெல்வேலி ,கன்னியாகுமரி ,திருவள்ளூர் ,வேலூர் ,காஞ்சிபுரம் ,திருவண்ணாமலை ,விழுப்புரம் ,கடலூர் ,தஞ்சாவூர் ,திருச்சி ,திருவாரூர் ,நாகப்பட்டினம் ,சேலம் ,நாமக்கல் ,கோயம்பத்தூர் ,திருப்பூர் ,திண்டுக்கல்,பெரம்பலூர் ,அரியலூர் ,சேலம் ,சென்னை மற்றும் ஈரோடு மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.

31-08-2017 இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ,இரமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி ,ஏர்வாடி,இராமநாதபுரம்,கமுதி ,திருவாடானை   பகுதிகளில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் சென்னையின் கிண்டி ,தி நகர் ,தாம்பரம் ,பல்லாவரம் ,அடையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

31-08-2017 இன்று அரியலூர் ,தஞ்சாவூர் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புண்டு கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளில் இன்று நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.இன்று வேலூர் ,காஞ்சிபுரம் ,ஆரணி உள்ளிட்ட பகுதிகளிலும் கணிசமான அளவு மழையை எதிர்பார்க்கலாம்.

31-08-2017 இன்று புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ,அம்மாபட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழையை எதிர்பார்க்கலாம்.

31-08-2017 இன்று அல்லது நாளை 01-09-2017 காலை நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புண்டு காரைக்காலிலும் மழையை எதிர்பார்க்கலாம்.

31-08-2017 (நாளை ) முதல் தமிழக தென் மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரிக்கும்.....இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்,ஜாம் நகர் பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட வாய்ப்பு

30-08-2017 இன்று மஹாராஷ்த்திர கடலோர பகுதிகளில் நல்ல மழை தற்பொழுது பெய்து வருகிறது நேற்றுடன் ஒப்பிடுகையில் தற்பொழுது மழையின் அளவு மும்பையில் குறைந்திருக்க வேண்டும் தற்பொழுது அந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது குஜராத் மாநிலத்தில் நிலை கொண்டுள்ளது அது தீவிரமடைந்து குஜராத் மாநிலம் ராஜ்கோட் ,ஜாம் நகர் நகர் பகுதிகளில் கன மழைக்கு வழிவகுக்கலாம்  சில இடங்களில் வெள்ளபெருக்கு ஏற்படும் அபாயமும் உண்டு அது வட மேற்கு திசையை நோக்கி நகர்வதால்  பாகிஸ்தானுக்கு சென்று விடும் அதனால் தமிழகத்துக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது.

30-08-2017 இன்று இன்னும் சற்று நேரத்தில் கேரளாவில் அந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் அதிகரித்த மழையின் அளவு குறைய தொடங்கலாம் ஆகையால் நாளை முதல் தமிழகத்தில் வெப்பசலன மழையின் அளவு  அதிகரிக்கும் அதனால் 01-09-2017 (செப்டம்பர்  1) ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பரவலான மழைக்கு வாய்ப்புண்டு குறிப்பாக இந்த ஆண்டு இதுவரையில் இல்லாதது போல திருநெல்வேலி ,கன்னியாகுமரி ,தூத்துக்குடி ,ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்கலாம்

01-09-2017 முதல் தமிழகம் முழுவதும் பரவலான மழையை எதிர்பார்க்கலாம் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புண்டு.

29-08-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

29-08-2017 இன்று கோயம்பத்தூர் ,தேனி ,திண்டுக்கல் ,நீலகிரி ,விருதுநகர் ,திருநெல்வேலி ,வேலூர் ,கிருஷ்ணகிரி ,தர்மபுரி ,சேலம் ,ஈரோடு ,புதுக்கோட்டை ,சென்னை ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புண்டு.

29-08-2017 இன்று கோயம்பத்தூர் மாவட்டம் வால்பாறை பகுதியில் கன மழைக்கு வாய்ப்புண்டு ,பொள்ளாச்சி ,பல்லடம் ,தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

29-08-2017 இன்று நீலகிரி மாவட்டம் ஊட்டி ,மேட்டுப்பாளையம் ,குன்னுர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புண்டு.

29-08-2017 இன்று திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ,ஈரோடு மாவட்டம் நம்பியூர் ,கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை ,குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஓரளவு நலன் மழையை எதிர்பார்க்கலாம்.

29-08-2017 இன்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியிலும் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

29-08-2017 இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் சென்னையிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.


Related Posts Plugin for WordPress, Blogger...