தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
temple லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
temple லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24-05-2017 திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரன்யேஸ்வரர் ஆலய அலுவலகத்தில் தீவிபத்து

24-05-2017 இன்று காரைக்கால் மாவட்டத்தின் திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்தில் அமைந்திருக்கும் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரன்யேஸ்வரர் ஆலய நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தால் தற்பொழுது அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து அரங்கேறியிருப்பதாக கூறப்படுகிறது.

காரைக்காலில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரன்யேஸ்வரர் ஆலயத்தின் சனிப்பெயர்ச்சி திருவிழா இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.அதனால் வாரத்தின் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் திருநள்ளாறுக்கு வரும் பக்த்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது.சனிப்பெயற்சிக்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வந்த நிலையில் இன்று திடீரென ஏற்பட்ட மின் கசிவால் ஆலய நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

25-05-2017 திருநள்ளாறு தேவஸ்தானத்தின் முன் பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையில் 24-05-2017 அன்று தீ விபத்து ஏற்பட்டதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


காரைக்கால் அம்மையார் திருக்கோவில்

காரைக்கால் அம்மையார் திருக்கோவில் ஆனது காரைக்கால் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது.

காரைக்கால் அம்மையார்
காரைக்காலில் பிறந்து சிவபெருமானே 'அம்மையே' என்று அழைத்தபெருமைக்கு உரியவர் இவர் .
63 நாயன்மார்களில் உள்ள 3 பெண் நாயன்மார்களில் இவறும் ஒருவர்.

மாங்கணி திருவிழா
காரைக்கால் நகரில் மாங்கணி திருவிழா வருடம் தவறாமல் நடைபெறுகிறது.
மாங்கணி திருவிழா கொன்டாட காரணம் என்ன?.
காரைக்கால் அம்மையாரரின் இயற்பெயர் 'புணிதவதி ' இவர் காரைக்காலில் வியாபாரம் புரிந்துக்கொண்டிருந்த  தனதத்தன்,தர்மவதி தம்பதியினருக்கு மகளாக பிறந்தார்.சிறு வயது முதலே இறைவன்பால் தீராத அண்புக்கொண்டு இருந்தார்.

பின்னர் 'பரமதத்தன்' என்றவரை மணந்த காரைக்கால் அம்மையார் இல்லற வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.ஒருநாள் பரமதத்தனிடம் ஒரு வியாபாரி இரண்டு மாங்கணிகளை கொடுத்தார்.அந்த கணிகளை வீட்டிற்கு அனுப்பி வைத்தார் பரமதத்தன்.வீட்டிற்க்கு உணவுக்கேட்டு வந்த சிவணடியார்க்கு அந்த மாங்கணிகளில் ஒண்றினை எடுத்து படையளிட்டார் புணிதவதி. பரமதத்தன் மதிய உணவிற்க்காக விடு திரும்பினார்.தாண் கொடுத்து அனுப்பிய மாங்கணிகளை கேட்டார்.சிவனடியார்க்கு படைத்தது போக மீதம் இருந்த ஒரு பழத்தினை கொண்டு வந்து கொடுத்தார் புணிதவதி.அக்கணியினை சுவைத்த
பரமதத்தன் சுவை நண்றாக இருக்கவே இன்னொரு மாங்கணியையும் கேட்டார்.என்ன செய்வதென்று தெரியாத புணிதவதி சமையலறைக்குள் சென்று இறைவனிடம் வேண்டினார் உடனே அவர்க்கையில் ஒரு மாங்கணி தோன்றியது அக்கணியினை பரமதத்தணிடம் வழங்கினார்  அதனையும் சுவைத்த பரமதத்தன் முதல் கணியை  விட இரண்டாவது கணி மிக சுவையாக இருந்ததை கண்டு  புணிதவதயிடம் விளக்கம் கேட்டார் புணிதவதியும் நடந்ததைக்கூறினார் ஆனால் பரமதத்தன் நம்ப மறுத்து எங்கே நீ சொல்வது உண்மையானால் இன்னொரு கணியினை வரவ ழைக்கும்படி கூறினார்.அம்மையார் இறைவனை வணங்க இன்னொரு கணி தோன்றியது.இதனைக்கண்டு அதிர்ச்சியும்,ஆச்சரியம் கொன்ட பரமதத்தன் இந்த தெய்வப்பெண்ணுடன் இல்லற வாழ்க்கையை தொடர்வது தவறு என்று எண்ணி புணிதவதியை விட்டு நீங்க நினைத்தார்.வணிகம் செய்ய புறப்படுவதாக கூறி கப்பலில் கடலில் பயணம் மேற்க்கொண்டார்.

சில காலம் கழித்து பரமதத்தன் பாண்டிய நாட்டில் (மதுரை ) இருப்பதாக தகவல் கிடைத்து பார்க்கச்சென்றார் புணிதவதி அங்கே பரமதத்தன் இன்னொரு பெண்ணை மணம் முடித்து ஒரு பெண் குழந்தையுடன் வாழ்வது தெரியவந்தது.புணிதவதி தன்னை தேடி வந்த செய்தியை அறிந்து   புணிதவதியை சந்தித்து அவரை தெய்வமாக கருதி தனது குடும்பத்துடன் காலில் விழுந்து வணங்கினார் பரமதத்தன்.இவர் தெய்வத்தன்மை உடையவர் அதனால் தான் காலில் விழுந்தேன் நீங்களும் இவரை வழிபடுங்கள் என்று கூறினார்.

புணிதவதி  கணவனுக்காக கொண்ட இளமையும் ,அழகும் நீங்கி இறைவனை போற்றுகின்ற பேய் வடிவத்தை தனக்கு அருள வேண்டும் என இறைவனை வேண்டி நின்றார்.அவ்வாறே அவர் சிவபூதகண வடிவைப்பெற்றார்.

 இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் மாங்கணி திருவிழா காரைக்கால் நகரில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

திருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் (தர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி )ஆலயம்

 திருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம் திருநள்ளார் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது.

திருநள்ளார் பெயர்க்காரணம்

திரு +நள +ஆறு =திருநள்ளார்.

நிடதநாட்டு அரசனான நளன் சனிஸ்வர பகவானின் துன்பப்பிடியில் இருந்து தன்னை விடுவிக்கும்மாறு    இங்கு உள்ள தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கினார். அதனால் சனிஸ்வர பகவான் அவரை தனது துன்பப்பிடியில் இருந்து விடுவித்தார்  'நள' என்ற சொல் நளன் மகாராஜாவை குறிக்கிறது.'ஆறு' என்ற சொல் இயற்கையான ஒரு நீரோட்டத்தை குறிக்கிறது.'திரு ' என்பது ஒரு மரியாதைக்குரிய சொல்லாகும்.இவை மூன்றும் இணைந்து 'திருநள்ளார்' என்ற பெயர் பெற்றது.இது முன்னாளில் ஆதிபுரி,தர்ப்பாரண்யம், நாகவிடங்கபுரம்,  நலேஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது.


 அதெல்லாம் சரி நளன் மகாராஜாவை சணீஷ்வரன் ஏன் துன்பப்படுத்த வேண்டும் அதற்கு காரணம்.'தமயந்தி' என்னும் இளவரசியை மணக்க தேவர்கள் கலந்துக்கொண்ட ஒரு சுயம்வரத்தில்.தமயந்தி தேவர்களை தவிர்த்து நளனை மணந்தால் இதனால் ஆத்திரம் அடைந்த தேவர்கள் சனிஸ்வரனிடம் சென்று நளனை துன்பப்படுத்துமாறு முறையிட்டனர் அவரும் துன்பப்படித்தினார்.

Related Posts Plugin for WordPress, Blogger...