தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
weather லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
weather லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26-04-2019 வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் தற்போதைய நிலை என்ன ? தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடந்த 24 மணி நேர வானிலை தொடர்பான தகவல்கள்.

26-04-2019 நேரம் காலை 10:55 மணி நேற்று இரவில் நேரலையில் நான் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் அங்கும் இங்குமாக ஓரிரு இடங்களில் மட்டும் மழை மேகங்கள் பதிவாகி வருவதாக தெரிவித்து இருந்தேன் இன்றும் காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் #கோவை மாவட்டம் #வால்பாறை பகுதியை அடுத்த #சோலையாறு அணை பகுதியில் 16 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.அதே போல #குமரி மாவட்டம் #பெருஞ்சாணி அணை பகுதியிலும் கிட்ட தட்ட 8 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளின் ஓரிரு இடங்களை தவிர்த்து கடந்த 24 மணி நேரத்தில் அநேக பிற பகுதிகளிலும் வறண்ட வானிலையே நிலவி உள்ளது.இன்றும் இதே சுழல்களே தொடரும்.

26-04-2019 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#சோலையாறு  - #Solaiyar dam (கோவை மாவட்டம் ) - 16 மி.மீ
#பெருஞ்சாணி - #PERUNCHANI (கன்னியாகுமரி மாவட்டம் ) - 8 மி.மீ
#சுரளக்கோடு  - #SURALACODE (கன்னியாகுமரி மாவட்டம் ) - 5 மி.மீ 
#வால்பாறை (கோவை மாவட்டம் ) - 5 மி.மீ
#கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம் ) - 2 மி.மீ

அந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியை (Well Marked Low Pressure Area) பொறுத்தவரையில் தற்பொழுது அதாவது இன்று காலை 9:00 மணி வாக்கில் பூமத்திய ரேகை அருகே உள்ள வட கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்தது.தற்பொழுது பல்வேறு மாதிரிகளும் அது வலு பெற்று தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களை நெருங்கி பின்னர் ஆந்திர கடலோர பகுதிகளின் அருகே வளைந்து (Re-Curve) செல்ல தொடங்கும் என்பதைப் போன்ற தகவல்களை வெளிப்படுத்த தொடங்கியுள்ளன.நான் நேரலையில் தெரிவித்து இருந்தது போல அதனுடைய திசையை தீர்மானிப்பதில் அந்த உயர் அழுத்தத்தின்  (High Pressure) சுழற்சி முக்கிய பங்காற்றுகிறது.

அது எந்த அளவுக்கு அது தமிழகத்துக்கு  நெருக்கமாக வருகிறதோ அந்த அளவுக்கான மழை தமிழகத்தில் பதிவாகலாம்.இன்னமும் எதுவும் முடிந்து விட வில்லை.எதையும் உறுதி செய்வதற்கு முன் நாளை வரை காத்திருக்கவும்.

கடந்த 24 மணி நேரத்தின் மழை அளவுகளை குறிப்பிட தான் இந்த பதிவை பதிவிட்டேன்.அந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வுகள் தொடர்பாகவும் தமிழகத்திற்கான மழை சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் இன்று மீண்டும் பதிவிடுகிறேன்.

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


25-04-2019 வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றுழத்த தாழ்வு பகுதி - அதன் நகர்வுகள் எப்படி இருக்கலாம் ?

25-04-2019 நேரம் பிற்பகல் 1:40 மணி கடந்த பதிவுகளில் நான் குறிப்பிட்டு இறந்தது போல தற்பொழுது தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பூமத்திய ரேகை அருகே உள்ள வட கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (Low Pressure Area) நிலவி வருகிறது.நான் முன்பே பதிவிட்டு இருந்தது போல மேடன்-ஜூலியன் அலைவு (MJO) ஆனது தற்பொழுது சாதகமான கட்டத்தில் இருப்பதால் அடுத்து வரக்கூடிய நாட்களில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து அதன் அடுத்தடுத்த நிலையை எட்ட மிக சாதகமான சூழல் நிலவி வருகிறது.இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த சில மணி நேரங்களில் மேலும் வட மேற்கு திசையில் நகர முற்பட்டு 26-04-2019 ஆகிய நாளை அல்லது 27-04-2019 ஆகிய நாளை மறுநாள் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression)உருவெடுக்கலாம் மேலும் தற்போதைய சூழல்களே தொடரும் பட்சத்தில் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அது ஒரு புயலாக உருவெடுக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.அவ்வாறு அது ஒரு புயலாக உருவெடுக்கும் பட்சத்தில் அதற்கு #வங்கதேச நாட்டின் தேர்வு சொல்லான #FANI என்ற பெயர் சூட்டப்படும்.

நான் முன்பு நேற்று இரவு நமது பக்கத்தில் நேரலையில் தெரிவித்து இருந்தது போல கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் அதிகமான அழுத்தத்தின் காரணமாக அது மேற்கு நோக்கி தள்ளப்படும்.இதன் காரணமாக 29-04-2019 அல்லது 30-04-2019 ஆம் தேதிகளின் வாக்கில் அது தமிழக கடலோர பகுதிகளை ஒட்டியுள்ள கடல் பகுதிகளை நெருங்க வாய்ப்புகள் அதிக வாய்ப்புகள்  உள்ளதுஅதே தற்போதைய சூழல்களில் அது பெரும்பாலும் தமிழகம் அல்லது ஆந்திர கடலோர பகுதிகளில் கரையை கடக்க முற்படவே அதிக வாய்ப்புகள் உள்ளது. அது வட தமிழக கடலோர பகுதிகளை நெருங்கி பின்னர் ஆந்திர கடலோரத்தை ஒட்டியே பயணிக்கலாம் என்பதைப் போன்ற தகவலை மாதிரிகளும்  வெளிப்படுத்த தொடங்கியுள்ளன.நான் முன்பே குறிப்பிட்டு இருந்தது போல அது தமிழகம் மற்றும் ஆந்திராவில் எந்த பகுதியில் கரையை கடக்கும் என்பதை இப்பொழுதே உறுதிப்படுத்த முடியாது.தமிழக பகுதிகளின் மழைக்கான வாய்ப்புகளும் அந்த புயல் தமிழகம் அருகே உள்ள கடல் பகுதியை நெருங்குகையில் தான் தெரியவரும் அதற்கு குறைந்தது 28-04-2019 ஆம் தேதி வரையிலாவது காத்திருக்க வேண்டும்.

அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வுகள் தொடர்பாக நமது பக்கத்தில் அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.


அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.



21-04-2019 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவாகிய மழை தொடர்பான தகவல்கள்

21-04-2019 நேரம் காலை 11:35 மணி நேற்றும் தமிழகத்தில் ஆங்காங்கே சில மாவட்டங்களில் பரவலான வெப்சலன மழை பதிவாகியுள்ளது குறிப்பாக #நீலகிரி  , #தேனி ,#கன்னியாகுமரி உட்பட மேற்கு மற்றும் தென் மேற்கு மாவட்டங்களிலும் #நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் #வேலூர் மாவட்டம் மேற்கு பகுதிகளிலும் #சேலம்  , #நாமக்கல் உள்ளிட்ட மேற்கு உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழை பதிவாகியுள்ளது குறிப்பாக நீலகிரி மாவட்டம் #ஊட்டி யில் 98 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது அதே போல #தேனி மாவட்டம் #சோத்துப்பாறை பகுதியிலும் 92 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது மேலும் நேற்று கிருஷ்னகிரி , தர்மபுரி , திருவண்ணாமலை மாவட்டத்தின் மேற்கு பகுதிகளிலும் #துறையூர்  , #மணப்பாறை உட்பட திருச்சி மாவட்டத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும் ஆங்காங்கே நல்ல மழை பதிவாகியுள்ளது.இன்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மேற்கு உள் மற்றும் தென் உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.

21-04-2019 இன்றும் காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பதிவான சில பகுதிகளின் நிலவரம்

#உதகமண்டலம் - #OOTY (நீலகிரி மாவட்டம் ) - 98 மி.மீ
#சோத்துப்பாறை (தேனி மாவட்டம் ) - 92 மி.மீ
#கோடநாடு (நீலகிரி மாவட்டம் ) - 75 மி.மீ
#ஓசூர் - #HOSUR (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 69 மி.மீ
#ஓமலூர் - #OMALUR (சேலம் மாவட்டம் ) - 66 மி.மீ
#வால்பாறை (கோவை மாவட்டம் ) - 66 மி.மீ
#மேட்டூர் (சேலம் மாவட்டம் ) - 65 மி.மீ
#குன்னூர் PTO (நீலகிரி மாவட்டம் ) - 63 மி.மீ
#சிவலோகம் -#சித்தாறு II   (கன்னியாகுமரி மாவட்டம் ) - 62 மி.மீ
#எடப்பாடி (சேலம் மாவட்டம் ) - 60 மி.மீ
#பரூர் - #BARUR(கிருஷ்னகிரி மாவட்டம் ) - 60 மி.மீ
#பொன்னையாறு அணை (திருச்சி மாவட்டம் ) - 57 மி.மீ
#சித்தாரல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 53 மி.மீ
#தொட்டபெட்டா -#Doddapetta , உதகமண்டலம் (நீலகிரி மாவட்டம் ) - 45 மி.மீ
#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 43 மி.மீ
#பெண்கொண்டபுரம் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 41 மி.மீ
#குமாரபாளையம் (நாமக்கல் மாவட்டம் ) - 41 மி.மீ
#திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம் ) - 41 மி.மீ
#பர்லியார் (நீலகிரி மாவட்டம் ) - 40 மி.மீ
நெடுங்கள் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 40 மி.மீ
#பாப்பிரெட்டிப்பட்டி  (தர்மபுரி மாவட்டம் ) - 40  மி.மீ
#பெரியகுளம் (தேனி மாவட்டம் ) - 38 மி.மீ
#திருசெங்கோடு  (நாமக்கல் மாவட்டம் ) - 38 மி.மீ
#மணப்பாறை ARG (திருச்சி மாவட்டம் ) - 38 மி.மீ
#கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம் ) - 36 மி.மீ
#துறையூர் (திருச்சி மாவட்டம் ) - 36 மி.மீ
புஷ்பாமருத்துவமனை அருகில் , குன்னூர் (நீலகிரி மாவட்டம் ) - 34 மி.மீ
#கோத்தகிரி (நீலகிரி மாவட்டம் ) - 32 மி.மீ
செங்கோட்டை (திருநெல்வேலி மாவட்டம் ) - 32 மி.மீ
#ஸ்ரீவைகுண்டம்  (தூத்துக்குடி மாவட்டம் ) - 31 மி.மீ
கெத்தி -#GEDDAI  (நீலகிரி மாவட்டம் ) - 30 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம் ) - 30 மி.மீ
#சங்கரிதுர்க் (சேலம் மாவட்டம் ) - 28 மி.மீ
தானிஷ்பேட்டை  - #DANISHPET (சேலம் மாவட்டம் ) - 28 மி.மீ
#ஆணைமடவு அணை  - #ANAIMADAVU DAM (சேலம் மாவட்டம் ) - 26 மி.மீ
#தர்மபுரி (தர்மபுரி மாவட்டம் ) - 24 மி.மீ
மயிலடி  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 24 மி.மீ
#அரூர்  (தர்மபுரி மாவட்டம் ) - 24 மி.மீ
ஆண்டிபட்டி (தேனி மாவட்டம் ) - 24 மி.மீ
#பல்லடம்  (திருப்பூர் மாவட்டம் ) - 24 மி.மீ
#நாகர்க்கோயில்  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 23 மி.மீ
மணப்பாறை TOWN (திருச்சி மாவட்டம் ) - 23 மி.மீ
போச்சம்பள்ளி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 22 மி.மீ
கடவூர் (கரூர் மாவட்டம் ) - 21 மி.மீ
குழித்துறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 20 மி.மீ
பூதப்பாண்டி  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 20 மி.மீ
தளி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 20 மி.மீ
#நாமக்கல் (நாமக்கல் மாவட்டம் ) - 20 மி.மீ
#தாராபுரம் (திருப்பூர் மாவட்டம் ) - 18 மி.மீ
#ஆலங்காயம் (வேலூர் மாவட்டம் ) - 17 மி.மீ
#கூடலூர் - #GUDALUR (நீலகிரி மாவட்டம் ) - 16 மி.மீ
#உத்தமபாளையம் (தேனி மாவட்டம் ) - 16 மி.மீ
உத்தம்பாளையம் (தேனி மாவட்டம் ) - 16 மி.மீ
#உடுமலைப்பேட்டை  (திருப்பூர் மாவட்டம் ) - 16 மி.மீ
#தட்டையங்கார்பேட்டை (திருச்சி மாவட்டம் ) - 15 மி.மீ
#சேந்தமங்கலம் (நாமக்கல் மாவட்டம் ) - 15 மி.மீ
பரமத்தி வேலூர் (நாமக்கல் மாவட்டம் ) - 15 மி.மீ
#பென்னாகரம் (தர்மபுரி மாவட்டம் ) - 15 மி.மீ
#கோவில்பட்டி (தூத்துக்குடி மாவட்டம் ) - 15 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 14 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம் ) - 14 மி.மீ
#சேலம் (சேலம் மாவட்டம் ) - 12 மி.மீ
கன்னியாகுமரி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 12 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம் ) - 12 மி.மீ
அரண்மனைப்புத்தூர் (தேனி மாவட்டம் ) - 12 மி.மீ
#எட்டையபுரம்  (தூத்துக்குடி மாவட்டம் ) - 12 மி.மீ
பெரியார் (தேனி மாவட்டம் ) - 13 மி.மீ
#பீளமேடு - கோவை விமான நிலையம்  (கோவை மாவட்டம் ) - 11 மி.மீ
தென்காசி (திருநெல்வேலி மாவட்டம் ) - 11 மி.மீ
#ஆம்பூர் (வேலூர் மாவட்டம் ) - 11 மி.மீ
#ராதாபுரம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 11 மி.மீ
லால்குடி (திருச்சி மாவட்டம் ) - 10 மி.மீ
#மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம் ) - 10 மி.மீ
ராசிபுரம்  (நாமக்கல் மாவட்டம் ) - 10 மி.மீ
எருமைப்பட்டி (நாமக்கல் மாவட்டம் ) - 10 மி.மீ
பாண்டவையாறு (திருவாரூர் மாவட்டம் ) - 9 மி.மீ 
#கிண்ணக்கோரை (நீலகிரி மாவட்டம் ) -9 மி.மீ
மேலூர் (மதுரை மாவட்டம் ) - 9 மி.மீ
பெருஞ்சாணி  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 9 மி.மீ
#சூளகிரி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 9 மி.மீ
ஊத்தங்கரை (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 9 மி.மீ
வீரப்பாண்டி (தேனி மாவட்டம் ) - 9 மி.மீ

இவை தவிர்த்து பல இடங்களிலும் மழை பதிவாகியுள்ளது 9 மி.மீ க்கும் குறைவான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளை நான் மேலே குறிப்பிடவில்லை.இந்த பட்டியலில் இடம்பெறாத உங்களது பகுதியின் மழை அளவை அறிய விரும்பினால் உங்களது ஊரின் பெயரை COMMENT செய்யுங்கள் நான் பதில் வழங்குகிறேன்.

நிகழ் நேரத்தில் பதிவாகி வரும் மழை தொடர்பான தகவல்களுடன் இன்று மீண்டும் பதிவிடுகிறேன்.அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.

20-04-2019 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவான மழை அளவுகளின் தகவல்கள்

20-04-2019 நேரம் நண்பகல் 12:15 மணி நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல தமிழகத்தில் நேற்று மேற்கு ,மேற்கு உள் ,தென் உள் ,தென் மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பசலன மழை தீவிரமடைந்து உள்ளது நேற்று நாமக்கல் பகுதியில் நல்ல மழை பதிவாகியுள்ளது.20-04-2019 ஆகிய இன்றும் தமிழகத்தின் மேற்கு ,மேற்கு உள் ,வட உள்  , உள் ,தென் மற்றும் தென் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் சூறைக்காற்றுடனான இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது .இது தொடர்பாகவும் நிகழ் நேரத்தில் மழைக்கான வாய்ப்புகளுடனும் இன்று இன்னும் சற்று நேரத்தில் பதிவிடுகிறேன்.

மேலும் அடுத்து வரக்கூடிய வாரத்தில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புகள் உள்ளது.இதன் நகர்வுகள் தொடர்பாகவும் தமிழக மழைக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் அடுத்தடுத்த பதிவுகளில் விவாதிப்போம்.

20-04-2019 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#கீழ்-கோதையார்  - #LOWER-KOTHAIYAR ARG (கன்னியாகுமரி மாவட்டம் ) - 93 மி.மீ
நாமக்கல் AWS - #NAMAKKAL (நாமக்கல் மாவட்டம் ) - 88 மி.மீ
#கொடைக்கானல் படகுக்குழாம் (திண்டுக்கல் மாவட்டம் ) - 78 மி.மீ
#கொடைக்கானல்  - #KODAIKANAL (திண்டுக்கல் மாவட்டம் ) - 66 மி.மீ
#மஞ்சளாறு அணை (திண்டுக்கல் மாவட்டம் ) - 58 மி.மீ
#வேடசந்தூர் (திண்டுக்கல் மாவட்டம் ) - 56 மி.மீ
#பரமத்திவேலூர் (நாமக்கல் மாவட்டம் ) - 38 மி.மீ
#குந்தாபாலம் ARG (நீலகிரி மாவட்டம் ) - 36 மி.மீ
#மேல்பவானி (#UPPER-BHAVANI)  - 36 மி.மீ 
#மேலூர் ARG (மதுரை மாவட்டம் ) - 35 மி.மீ
#எருமப்பட்டி - #ERUMAPPATI (நாமக்கல் மாவட்டம் ) - 30 மி.மீ
#சுரளக்கோடு - #SURALACODE (கன்னியாகுமரி மாவட்டம் ) - 29 மி.மீ
#கின்னக்கோரை (நீலகிரி மாவட்டம் ) - 28 மி.மீ
நிலக்கோட்டை (திண்டுக்கல் மாவட்டம் ) - 28 மி.மீ
#தாராபுரம் (திருப்பூர் மாவட்டம் ) - 26 மி.மீ
#ஆத்தூர் (சேலம் மாவட்டம் ) - 25 மி.மீ
ஏற்காடு AWS (சேலம் மாவட்டம் ) - 25 மி.மீ
#பிக்கெட்டி (நீலகிரி மாவட்டம் ) - 24 மி.மீ
#கெத்தி -#GEDDAI (நீலகிரி மாவட்டம் ) - 24 மி.மீ
RDO அலுவலகம் - நாமக்கல்  (நாமக்கல் மாவட்டம் ) - 24 மி.மீ
#காமாட்சிபுரம் - திண்டுக்கல் மேற்கு (திண்டுக்கல் மாவட்டம் ) - 23 மி.மீ
#சேலம்  - #SALEM (சேலம் மாவட்டம் ) - 23 மி.மீ
#திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம் ) - 22 மி.மீ
#மூலனூர் (திருப்பூர் மாவட்டம் ) - 20 மி.மீ
#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 19 மி.மீ
#ஏற்காடு - அண்ணாப்பூங்கா அருகில் (சேலம் மாவட்டம் ) - 17 மி.மீ
#ராசிபுரம் (நாமக்கல் மாவட்டம் ) - 17 மி.மீ
#சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம் ) - 17 மி.மீ
#பெரியநாயக்கன் பாளையம் (கோவை மாவட்டம் ) - 17 மி.மீ
#பெருஞ்சாணி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 16 மி.மீ
#சித்தாரல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 16 மி.மீ
#புத்தன்அணை - #PUTHANDAM (கன்னியாகுமரி மாவட்டம் ) - 15 மி.மீ
#பட்டுக்கோட்டை (தஞ்சாவூர் மாவட்டம் ) - 15 மி.மீ
#வாணியம்பாடி (வேலூர் மாவட்டம் ) - 15 மி.மீ
#எடப்பாடி (சேலம் மாவட்டம் ) - 14 மி.மீ
கள்ளிக்குடி (மதுரை மாவட்டம் ) - 13 மி.மீ
#திருவாரூர் - #TIRUVARUR (திருவாரூர் மாவட்டம் ) - 13 மி.மீ
#கோபிசெட்டிபாளையம் (ஈரோடு மாவட்டம் ) - 12 மி.மீ
மேலூர்  - பர்மாகாலனி அருகில் (மதுரை மாவட்டம் ) - 12 மி.மீ
கொல்லிமலை (நாமக்கல் மாவட்டம் ) - 12 மி.மீ
அவிநாசி (திருப்பூர் மாவட்டம் ) - 11 மி.மீ
#சங்கரிதுர்க் (சேலம் மாவட்டம் ) - 10 மி.மீ
குப்பணம்பட்டி (மதுரை மாவட்டம் ) - 10 மி.மீ
#அரவாக்குறிச்சி (கரூர் மாவட்டம் ) - 8 மி.மீ
பவானி (ஈரோடு மாவட்டம் ) - 7 மி.மீ
தல்லாகுளம் (மதுரை மாவட்டம் ) - 6 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம் ) - 6 மி.மீ
#மோகனூர் (நாமக்கல் மாவட்டம் ) - 5 மி.மீ
மதுரை தெற்கு (மதுரை மாவட்டம் ) - 5 மி.மீ
ஒரத்தநாடு (தஞ்சாவூர் மாவட்டம் ) - 5 மி.மீ
#கரூர் (கரூர் மாவட்டம் ) - 4 மி.மீ
ராமேஸ்வரம் (ராமநாதபுரம் மாவட்டம் ) - 4 மி.மீ
பரமக்குடி (ராமநாதபுரம் மாவட்டம் ) - 3 மி.மீ

அனைவருக்கும் எனது நண்பகல் வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


08-10-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

08-10-2018 நேரம் மாலை 4:00 மணி தற்பொழுது தென்மேற்கு அரபிக்கடல் பகுதியை ஒட்டியுள்ள மேற்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டிருக்கும் அந்த #லூபன் (#LUBAN) புயலானது மணிக்கு 18 கி.மீ வேகத்தில் மேற்கு - வட மேற்கு திசையில் தெற்கு ஓமன் மற்றும் ஏமன் நாட்டு கடல் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது மேடன் -ஜூலியன் அலைவு (Madden-Julian Oscillation) ஆனது அடுத்து வரக்கூடிய நாட்களில் அதன் இரண்டாவது கட்டத்துக்கு வர வாய்ப்புகள் இருப்பதால் #லூபன் (#LUBAN) புயல் மேலும் தீவிரமடைந்து ஒரு தீவிர புயலாக (Severe Cyclone) அடுத்து வரக்கூடிய நாட்களில் உருவெடுக்க வழிவகை செய்கிறது.அதன் பின்னர் அது 13-10-2018 அல்லது அதற்கு பிறகு வரக்கூடிய நாட்களில் ஏமன் நாட்டின் கடலோர பகுதிகளை நெருங்க முற்படலாம் அங்கு நிலவி வரும் சாதகமற்ற சூழல்கள் காரணமாக அது சற்று வலுகுறைந்து ஏடன் வளைகுடா பகுதிகளுக்குள் நுழைந்து அதன் அருகே இருக்கும் சோமாலியா நாட்டின் வடக்கு பகுதிகளில் கரையை கடக்கலாம் என்றும் சில மாதிரிகளின் தகவல்கள் தெரிவிகின்றன .எதுவாயினும் இதனால் தமிழகத்துக்கு எந்த வித பாதிப்பும் கிடையாது.நேரடியான மழை வாய்ப்புகள் என்றும் எதுவும் இருக்கப்போவது இல்லை.
நேற்று வங்கக்கடல் பகுதியில் அந்தமானுக்கு வட கிழக்கே நிலைகொண்டிருந்த அந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுப்பெற்று ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression) தற்பொழுது மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது அடுத்த சில மணி நேரங்களில் இது ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (Deep Depression) என்கிற நிலையை அடைய முற்படலாம் மேலும் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அது ஒரு புயலாக உருவெடுக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது அவ்வாறு அது ஒரு புயலாக உருவெடுக்கும் பட்சத்தில் அதற்கு பாகிஸ்தான் நாட்டின் தேர்வு சொல்லான #டிட்லி (#TITLI ) என்று பெயர் சூட்டப்படும்.அடுத்து வரக்கூடிய நாட்களில் அது வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஒடிசா அல்லது வடக்கு ஆந்திராவின் கடலோர பகுதிகளை அடைய முற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

08-10-2018 ஆகிய இன்று தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மேற்கு ,தென் ,மேற்கு உள் ,தென் உள் ,வட உள் ,கடலோர மற்றும் உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு இன்று தமிழகத்தில் ஓரளவு பரவலான மழைக்கு வாய்ப்புகள் உண்டு.

09-10-2018 ஆகிய நாளை வங்கக்கடல் பகுதியில் நிலைக்கொண்டிருக்கும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலு பெற்று வட மேற்கு திசையில் நகர்ந்து செல்கையில் தென் கிழக்கு திசையில் இருந்து காற்றை தம்வசம் இழுப்பதால் தமிழக தென் மாவட்டங்களில் காற்று வலு பெறுகிறது இதன் காரணமாக நாளை தமிழக தென் மற்றும் தென் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.வட தமிழகத்தில் மழையின் அளவு குறைந்து பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவ தொடங்க வாய்ப்புகள் உள்ளது.

10-10-2018 ஆம் தேதி அன்றும் அதற்கு அடுத்து வரக்கூடிய சில நாட்களிலும் வட மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலையானது மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு ஏற்ப தென் மாவட்டங்களில் சில இடங்களில் அவ்வப்பொழுது மழைக்கு வாய்ப்புகள் உண்டு குறிப்பாக நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் அவ்வப்பொழுது மழை பதவாகலாம்.தற்பொழுது பதிவிட்டு வருவதை போலவே தினந்தோறும் மழைக்கான வாய்ப்புகளை அன்றன்றைக்கு பிற்பகலில் பதிவிடுகிறேன்.

14-10-2018 அல்லது அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் தமிழகத்தில் மழையின் அளவு மீண்டும் அதிகரிக்க தொடங்கலாம் 15-10-2018 ஆம் தேதி வாக்கில் கிழக்கு திசை காற்று மீண்டும் வலுப்பெற தொடங்கலாம் 15-10-2018 முதல் 20-10-2018 ஆம் தேதிவரை உள்ள ஏதேனும் ஒரு நாளில் வட கிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியதாக அறிவிப்பு வெளியாகலாம்.

நான் குறிப்பிட்டு இருக்கும் மழைக்கான வாய்ப்புகள் அனைத்தும் தற்பொழுது வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் அடுத்தக்கட்ட நகர்வுகளை பொறுத்து மாறுதல்களுக்கு உட்பட்டவை.மேலும் நான் மேலே குறிப்பிட்டு இருக்கும் தகவல்கள் அனைத்தும் தற்பொழுது நிலவி வரும் வானிலை சூழல்களை உள்ளடக்கிய ஒரு கணிப்பு தான்.இதில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.


16-09-2018 அடுத்து வரக்கூடிய நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

16-09-2018 நேரம் காலை 11:35 மணி  தற்பொழுது இந்த ஆண்டின் சக்தி வாய்ந்த சூறாவளியாக கருதப்படும் அந்த #மங்குட் (#MANGKHUT) சூறாவளியானது நேற்று முன்தினம் ஒரு 5ஆம் வகை சூறாவளியாக #பிலிப்பைன்ஸ் (#Phillipines) நாட்டின் வடக்கு பகுதிகளை கடந்து தற்பொழுது 16-09-2018 ஆகிய இன்று ஒரு 2ஆம் வகை சூறாவளியாக சற்று வலுக்குறைந்து #மக்காவு (#Macau) மற்றும் அதன் அருகே உள்ள தெற்கு சீனப்பகுதிகளை நோக்கி நகர்ந்து  வருகிறது #ஹாங்காங் (#Hongkong) பகுதிகளிலும் கனமழை உட்பட மணிக்கு 160 கி.மீ வேகம் வரையிலும் காற்று வீசக்கூடும்.


Effect of MANGKHUT Typhoon in india
மேலும் அந்த  #மங்குட் (#MANGKHUT) சூறாவளியானது அதன் சுழற்சியால் வடகிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் இருந்தும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் இருந்து ம்  காற்றை வேகமாக இழுப்பதாலும் கிழக்கு திசை காற்று இந்திய வட  கிழக்கு மாநிலங்களில் வீரியம் குன்றி இருப்பதாலும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளின் வழியே நிலப்பகுதிகளில் இருந்து காற்று கடல் பகுதிக்குள் வர முற்படுகிறது இதன் காரணமாக 16-09-2018 ஆகிய இன்று மத்திய வங்கக்கடல் பகுதியில் அந்தமானுக்கு வட கிழக்கே ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது மேலும் அது 17-09-2018 ஆகிய நாளை அல்லது 18-09-2018 ஆகிய நாளை மறுநாள் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக (Low Pressure Area) உருப்பெறலாம் அதைப்போல அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (#Depression) உருவெடுத்து வட கிழக்கு திசையில் நகர தொடங்கலாம் அதனுடைய நகர்வுகளை அவ்வப்பொழுது நமது பக்கத்தில் பதிவிடுகிறேன்.மேலும் அது 20-09-2018 அல்லது 21-09-2018 ஆம் தேதிகளில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவின் கடலோர பகுதிகளை நெருங்க முற்படலாம்.பின்னர் கரையை கடந்து அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் வட மேற்கு திசையில் நகர்ந்து மீண்டும் #ஒடிசா ,#சத்தீஸ்கர் மற்றும் #மத்தியபிரதேச மாநிலங்களில் ஆங்காங்கே கனமழையை ஏற்படுத்தி நகர்ந்து செல்லலாம்.



தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தமட்டில் அடுத்து வரக்கூடிய நாட்களிலும் குறிப்பாக 16-09-2018 மற்றும் 17-09-2018 ஆம் தேதிகளில் கடந்த சில நாட்களை போன்று தமிழக வட ,வட உள் ,தென் உள் ,மேற்கு உள் மற்றும் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழைக்கு வாய்ப்புகள் உண்டு மேலும் தெற்கு ஆந்திர பகுதிகளிலும் கடந்த சில நாட்களை போலவே மழை மேகங்கள் இரவு நேரங்களில் குவிய வாய்ப்புகள் உள்ளதால் நள்ளிரவு அல்லது அதிகாலை நேரங்களில் காஞ்சிபுரம் ,திருவள்ளூர் மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்புகள் உண்டு ஒவ்வொரு நாளும் அன்றைய மழைக்கான வாய்ப்புகளையும்  தினந்தோறும்  பிற்பகலில் பதிவிடுகிறேன்.மேலும் நான் மேலே குறிப்பிட்டு இருந்தது போல மத்திய வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதும் தமிழகத்தில் மழையின் அளவு சற்று குறைய தொடங்கலாம் அதாவது குறிப்பாக 18-09-2018 அல்லது 19-09-2018 ஆம் தேதிகளில் மழையின் அளவு அதற்கு முந்தைய நாட்களுடன் ஒப்பிடுகையில் குறைந்து இருக்கலாம்.மேலும் அது வலுப்பெற்று வட கிழக்கு திசையில் நகர்ந்து செல்ல தொடங்குகையில் குறிப்பாக 20-09-2018 அல்லது 21-09-2018 முதல் தமிழகத்தின் பல இடங்களிலும் பகல் நேர வெப்பநிலையானது மீண்டும் அதிகரிக்க தொடங்கலாம் செப்டம்பர் இறுதி வாரத்தில் தமிழகத்தில் மீண்டும் வெப்பசலன மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.

வானிலை தொடர்பான மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.


07-04-2018 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கலாம் ?


07-04-2018 நேரம் அதிகாலை 1:55 மணி அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் என்பதனை பார்ப்பதற்கு முன் இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த 05-04-2018 அன்று  வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பெரிய அளவிலான அம்சங்கள் குறித்து பார்ப்போம் (Large Scale Factors).

  • தற்பொழுது பசிபிக் கடலின் சமவெளிப்பரப்பில் லா- நினா வுக்கான சூழல்கள் நிலவி வருகின்றன. Monsoon Mission Climate Forecast System (MMCFS) மாதிரிகளின் முன்னறிவிப்புகளின் படி அடுத்து வரக்கூடிய வாரத்திலேயும் இதே நிலையே தொடரலாம்.
  • மேடன் - ஜுலியன் அலைவு ஆனது தற்பொழுது அதன் எட்டாவது கட்டத்தில் ஒன்றுக்கும் அதிகமான வீச்சு அளவுடன்  உள்ளது அடுத்து வரக்கூடிய வாரத்திலும் இதே அதன் எட்டாவது கட்டித்தேலேயே தொடரலாம் (என்னை பொறுத்தமட்டில் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் மேடன் - ஜுலியன் அலைவு ஆனது அதன் ஒன்றாவது கட்டத்தை அடையலாம் மேலும் இந்த மாத மத்தியில் அது குறைவான வீச்சு அளவுடன் இரண்டாவது கட்டத்துக்கு வரலாம் ).
  • இந்திய பெருங்கடல் இருமுனையானது (Indian Ocean Dipole) தற்பொழுது அதன் நடுநிலையான கட்டத்தில் உள்ளது.
நான் இதற்கு முந்தைய பதிவுகளில் வெப்பநிலை குறைவு மற்றும் மழை தொடர்பான தகவல்களை பதிவிட்டு இருந்திருந்தேன்.அதாவது நிகழும் 2018 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் இயல்பான பகல் நேர வெப்பநிலை அளவை காட்டிலும் சராசரியாக 0.5° முதல் 1.0° செல்சியஸ் வரையில் குறைவான வெப்பநிலையே பதிவாக வாய்ப்பு இருப்பதாக  தெரிவித்து இருந்தேன்.அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தமட்டில் நிகழும் 2018 ஆம் ஆண்டு  கடந்த சில ஆண்டுகளை போல அல்லாமல் ஏப்ரல் மாதத்தில் அவ்வப்பொழுது மழைக்கான வாய்ப்புகளை அள்ளி வழங்கும் ஆண்டாக அமைய அதிக வாய்ப்புகள் உள்ளது.அடுத்து பிறக்க இருக்கும் வாரத்தில் தமிழகத்தின் பல இடங்களிலும் அவ்வப்பொழுது இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புகள் உண்டு ஆங்காங்கே ஆலங்கட்டி மழைக்கும் வாய்ப்புகள் உள்ளது இதன் காரணமாக பகல் நேர வெப்பநிலையானது இதற்கு முன்பு நிலவி வந்ததை விட மெல்ல மெல்ல குறைய தொடங்கலாம் அல்லது இதே பகல் நேர வெப்பநிலையே அடுத்து வரக்கூடிய நாட்களிலும் தொடரலாம். வெப்பநிலை மாறுபாடுகள் தொடர்பாக நமது பக்கத்தில் தினமும் அவ்வப்பொழுது பதிவிட முயற்சிக்கிறேன்.

07-04-2018 (இன்று ) மற்றும் 08-04-2018 (நாளை ) தமிழகத்தில் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புகள் உண்டு.மழைக்கு வாய்ப்பு இருக்கும் மாவட்டங்கள் / பகுதிகள் தொடர்பாக இன்று பிற்பகலில் பதிவிடுகிறேன்.புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களை பொறுத்தவரையில் இன்று வானம் அவ்வப்பொழுது மேக மூட்டத்துடன் காணப்படலாம்.தமிழகத்தின் அணைத்து கடலோர மாவட்டங்களிலும் கடலோர பகுதிகளில் இன்று வானம் அவ்வப்பொழுது மேக மூட்டத்துடன் காணப்படலாம் மேலும் இன்று முதல் இந்தியாவின் அஸ்ஸாம் , மேற்குவங்கம் , ஒரிசா , பீஹார் , உத்திரபிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மற்றும் வட மாநிலங்களிலும் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம்.

நிகழும் 2018 ஏப்ரல் மாதத்தில் அடுத்து பிறக்க இருக்கும் வாரத்தில் தமிழகத்தின் பல இடங்களிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புகள் உண்டு. 09-04-2018 அல்லது 10-04-2018 ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம் அதன் பிறகு வட கடலோர , உள்  ,தென் , தென் கடலோர , மேற்கு மற்றும் வட உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்புகள் உருவாகலாம்.

மழைக்கான வாய்ப்புகளை அவ்வப்பொழுது பதிவிட முயற்சிக்கிறேன். அனைவருக்கும் எனது அதிகாலை நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் நான் மேலே குறிப்பிட்டுள்ள மழைக்கான வாய்ப்புகள் அனைத்தும் தற்போதைய வானிலையை உள்ளடக்கிய ஒரு கணிப்பு தான் .இதில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.


26-11-2017 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

26-11-2017 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் என்பதை பார்ப்பதற்கு முன் கடந்த 23-11-2017 அன்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கும் பெரிய அளவிலான அம்சங்கள் (Large Scale Features) குறித்து பார்ப்போம்.

  • தற்பொழுது லா-நினாவுக்கான (la-nina) சூழல்கள் நிலவி வருகிறது அடுத்த இரண்டு வாரங்களுக்கும் இதே நிலையே தொடரலாம்.
  • தற்பொழுது மேடன் ஜூலியன் அலைவு  (Madden - Julian oscillation) ஆனது அதன் 6 வது  கட்டத்தில் வீச்சு 1 என்கிற அளவுடன் உள்ளது இது வரக்கூடிய நாட்களில் வீச்சின் அளவு குறைந்த நிலையில் அதனுடைய 5 ஆம் கட்டத்துக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்திய பெருங்கடலின் இருமுனை (Indian Ocean Dipole ) ஆனது தற்பொழுது நடுநிலையான கட்டத்தில் உள்ளது.
லா நினாவுக்கான சூழல் என்பது தென் அமெரிக்காவுக்கு அருகே இருக்கும் பசிபிக் கடல் பரப்பின் வெப்பநிலை குறைவை குறிக்கிறது.இந்த சூழலில் வர்த்தக காற்று (Trade Wind ) என்று சொல்லக்கூடிய மேற்கு திசையில் பயணிக்க கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் அவை பசிபிக் பெருங்கடலின் மறுமுனையில் அதாவது ஆசிய கண்டத்துக்கு அருகே இருக்கும் வெப்பமான பகுதிக்கு சென்று மேலே எழும்புகையில் அந்த பகுதியில் மழை மேகங்கள் அதிகமான அளவில் உருவாகுகின்றன இதன் தாக்கத்தால்   இந்தோனேஷியா ,இந்தியா உட்பட பல நாடுகளில் மழையின் அளவு அதிகரிக்கிறது.லா-நினாவின் காரணமாக சில இடங்கள் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது ஆனால் அவை எந்த ஒரு இடத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உறுதியாக குறிப்பிட்டு இப்பொழுதே சொல்ல முடியாது. பொதுவாக லா-நினாவின் காரணமாக இந்தியா ,இந்தோனேசியா அருகே உள்ள கடல் பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது ஆனால் மழை அதிகரிப்புக்கு இது மட்டுமே போதாது லா-நினோவுக்கான சூழல்கள் நிலவி வந்த பொழுதே  பருவமழை பலன் வழங்காமல் போன நிகழ்வுகளும் வரலாற்றில் உண்டு.

மேடன் ஜூலியன் அலைவு  (Madden - Julian oscillation)  ஆனது இந்த மாத இறுதியில் தனது 4 வது கட்டத்துக்கு வர வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது பின்னர் அது மீண்டும் 5,6 மற்றும் 7 வது  கட்டங்களுக்கு அடுத்தடுத்து பயணிக்க வாய்ப்பு இருப்பதாக ஒரு கணிப்பியல் மாதிரி தெரிவிக்கிறது இன்னொரு  சர்வதேச கணிப்பியல் மாதிரியின் கூற்று படி நவம்பர் மாத இறுதியில் அது 8 வது கட்டத்துக்கும் டிசம்பர் முதல் வார இறுதியில் அது 2 வது மற்றும் 3 வது கட்டத்துக்கும் அடுத்தடுத்து நகர வாய்ப்புகள்  உள்ளதாக  தெரிவிக்கிறது.மேலே கூறி இருந்தது  போன்று அது நவம்பர் மாத இறுதியில் 4 வது கட்டத்துக்கு வந்தால் இந்தோனேசியா மற்றும் இந்திய பெருங்கடலில் மழையின் அளவு அதிகரிக்கும் அதனால் வங்கக்கடல் பகுதிக்கும் பயன் உண்டு.மேடன் ஜூலியன் அலைவு அதன் 3 வது கட்டத்துக்கு வராமல் இந்த மாத இறுதியிலும் டிசம்பர் முதல் வாரத்திலும் தமிழகத்தின் மழை அளவில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது சந்தேகம் தான் பொறுத்திருந்து  பார்ப்போம்.

26-11-2017 தற்பொழுது வங்கக்கடல் பகுதியில் இலங்கைக்கு அருகே நிலைகொண்டு இருக்கும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது ஆனால் அதன் நகர்வுகள் வேகமானதாக இல்லை நேற்று இருந்த நிலைக்கு அது இந்நேரம் இலங்கைக்கு மேற்கே நிலைகொண்டு இருக்க வேண்டும் ஆனால் அப்படி நடக்கவில்லை ஆக இனி வரக்கூடிய சில  நாட்களுக்கு தமிழகத்தில் பதிவாக இருக்கும் மழை அளவை நிர்ணயிக்க போவது அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வுகள் தான்.

இனி நான் தெரிவிக்கப்போகும் தகவல்கள் அனைத்தும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வுகளை பொறுத்து மாற்றங்களுக்கு உட்பட்டது இதன் மாற்றங்களுக்கு ஏற்ப அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.

26-11-2017 தற்போழுது இலங்கைக்கு அருகே நிலைகொண்டு இருக்கும் அந்த காற்றழுத்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று இரவு அல்லது நாளைக்குள் இலங்கையை கடந்து இலங்கைக்கு மேற்கே குமரிக்கடலில் நிலைகொள்ள வாய்ப்புகள் உள்ளது அவ்வாறு அது மேற்கு நோக்கி நகர முற்படும்பொழுது நான் முன்பே கூறியிருந்தது போல தமிழக வட கடலோர மாவட்டங்களில் 27-11-2017 ,28-11-2017 மற்றும் 29-11-2017 ஆம் தேதிகளில் அவ்வப்பொழுது நல்ல மழைக்கு வாய்ப்பு உண்டு நெல்லை ,கன்னியாகுமரி  மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.கடந்த காலத்தில் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் மையப்பகுதி அவ்வப்பொழுது விரிவடைந்து காணப்பட்டது இதில் நான் எதிர்பார்ப்பது என்னவென்றால் அது குமரிக்கடலுக்கு அருகே நிலை கொண்டு இருக்கும் பொழுது  அதனுடைய மையப்பகுதி விரிவடைய வாய்ப்புகள் உள்ளது  அப்படி அது  நடக்கும் பட்சத்தில்  உள் மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புகள்  உருவாகும் அதாவது 27-11-2017 மற்றும் 28-11-2017 ஆம் தேதிகளில் அதே சமயம் அது மேற்கு நோக்கி குமரிக்கடலை கடந்து செல்கையில் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புகள்  உருவாகும் அதாவது 28-11-2017 மற்றும்  30-11-2017 ஆம் தேதிகளில் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வுகள் குறித்த ஒரு தெளிவான தகவல்கள் தெரியாத வரையில் இவை அனைத்தும் வெறும் வாய்ப்புகளே அதாவது எந்த நேரத்திலும் மாற்றங்களுக்கு உட்பட்டது.

டிசம்பர் முதல் வாரத்தில் தமிழகத்தில் மழை அளவு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது வலு பெற்று ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது ஆனால் நான் இதற்கு முன்பே பல பதிவுகளில் இருந்து தொடர்ந்து தெரிவித்து வருவது போல அவை வலு குறைந்த நிலையில் தமிழகத்தையோ அல்லது இலங்கையையோ நெருங்கிய  பின்பு வலுவடைய வேண்டும் அப்போழுது தான் அதனால் தமிழகம் பலனடைய அதிக வாய்ப்புகள் உள்ளது அதை விடுத்து தென் மேற்கு வங்கக்கடல் பகுதியை அடைவதற்கு முன்னரே அது  ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ ,புயலாகவோ வலு அடையும் பட்சத்தில் அது வட - வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழகத்தை விட்டு விலகி செல்லவே அதிக வாய்ப்புகள் உருவாகும் அது குறித்த எந்த ஒரு தகவலையும் இப்பொழுதே உறுதிபட தெரிவிக்க இயலாது சிறிது காலம் பொறுத்து இது தொடர்பான தகவல்களை பதிவிடுகிறேன்.

நான் மேலே கூறி இருந்த தகவல்கள் அனைத்தும் தற்பொழுது நிலவும் வானிலையையும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் தற்பொழுதைய நகர்வுகளையும் உள்ளடக்கிய ஒரு கணிப்பு தான் இதில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.


17-11-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் ?

17-11-2017 நேரம் காலை 11:40 மணி இன்று காலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வங்கக்கடல் பகுதியில் ஒடிசா மாநிலம் பரதிபுக்கு 190 கி.மீ தென் - தென் மேற்காகவும் கோபால்பூருக்கு 110 கி.மீ தென் - தென் கிழக்காகவும் திகாவுக்கு 390 கி.மீ தென் - தென்மேற்காகவும் நிலைகொண்டுள்ள அந்த காற்றழுத்த தாழ்வு பகுதியினாது கடந்த 6 மணி நேரங்களாக மணிக்கு 8 கி.மீ என்கிற வேகத்தில் வடகிழக்கு திசையில் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் அது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க கூடும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

எந்த வித மாற்றங்களும் இன்றி இதே சூழ்நிலைகள் தொடர்ந்தால் 18-11-2017 (நாளை ) இரவு அல்லது 19-11-2017 (நாளை மறுநாள் ) அன்று காலைக்குள் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது முற்றிலும் வலுவிழக்க கூடும் அதன் பின் மீண்டும் வட கிழக்கு திசை காற்றின் வேகம் தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கலாம் 19-11-2017 முதல் மீண்டும் தமிழகத்தில் நல்ல பரவலான மழைக்கு வாய்ப்பு உண்டு.

நான் இதற்கு முந்தைய பதிவுகளில் இருந்து தொடர்ந்து தெரிவித்து வருவது போல இனி வரக்கூடிய நாட்களிலும் வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் இல்லை அதே போல இந்திய பெருங்கடலில் உருவாக இருக்கும் புயல்களுக்கும் பஞ்சமிருக்காது அவை தமிழகத்துக்கு நேரடியாக பலன்களை வழங்காவிட்டாலும் கிழக்கிலிருந்து - மேற்கு நோக்கி நகரும் பொழுது அவற்றின் சுழற்சி வட கிழக்கு பருவமழைக்கு சாதகமான சூழலை வங்கக்கடல் பகுதியில் அமைத்து கொடுக்கும் அதேபோல வங்கக்கடல் பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலைகள் வலு குறைந்த நிலையில் தமிழகத்தை நெருங்கி வர வேண்டும் அது தான் முக்கியம் அதை விடுத்து அவை அந்தமானுக்கு அருகிலேயே வலுப்பெற்று ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்க தொடங்கினாள் அவை பெரும்பாலும் தமிழகத்தை விட்டு விலகி வட - வட மேற்கு திசைகளில் நகரவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அடுத்து வரக்கூடிய வாரத்துக்கான வானிலை தகவல்களை நாளை அல்லது நாளை மறுநாள் பதிவிடுகிறேன்.
நான் மேலே குறிப்பிட்ட அனைத்தும் தற்பொழுது நிலவும் வானிலையை உள்ளடிக்கிய ஒரு கனிப்பு தான் இதில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.
கடந்த சில நாட்களாக எல்-நினோ வருமா என பலரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறீர்கள் எல்-நினோ மற்றும் லா - நினோ குறித்து நான் இதற்கு முன்பே பல முறை வளக்கமளித்து உள்ளேன் நீங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதை பார்த்தால் ஏதோ புது வதந்தி பரவி வருவதை போல தெரிகிறது.

எல்நினோ மற்றும் லா நினோ குறித்த அடிப்படை விஷயங்களை தமிழில் அறிய - https://goo.gl/n4vHby
எல் -நினோ மற்றும் லா - நினோ எப்படி ஏற்படுகிறது மற்றும் அதனால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் வால்கர் சுழற்சி என்றால் என்ன என்பதை போன்ற தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/SDiQfL


24-10-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்பொழுது தொடங்கலாம் ?

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்பொழுது தொடங்கலாம் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 20-10-2017 அன்று நான் எழுதிய பதிவில் கூறியிருந்த ஒரு சில தகவல்களை மீண்டும் நினைவு படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.20-10-2017 அன்று நான் எழுதிய பதிவில் 26-10-2017 முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம் அடுத்து வரக்கூடிய நாட்களிலும் அதே நிலை தொடர்ந்து வட கிழக்கு பருவமழைக்கு தொடக்க மழையாக (ONSET RAIN) அது அமையலாம் என்று குறிப்பிட்டு இருந்தேன்.தற்பொழுது நிலவும் சூழ்நிலைகளை கொண்டு பார்க்கையில் 25-10-2017 நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் உருவாக  வாய்ப்புகள் உள்ளது நாளை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கும் அதுவே வரக்கூடிய நாட்களிலும் தொடரும் இதுவே வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் ஆகும்.
நான் கடந்த 20-10-2017 அன்று எழுதிய பதிவில் தெரிவித்து இருந்தது போல 26-10-2017 முதல் தமிழகத்தில் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம் அது அடுத்து வரக்கூடிய நாட்களிலும் தொடரலாம் 26-10-2017 முதல் 01-11-2017 ஆகிய தேதிகளுக்குள் ஏதேனும் ஒரு நாளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்படலாம்.மேலும் 20-10-2017 அன்று நான் எழுதிய பதிவில் 24-10-2017க்கு பிறகு வரக்கூடிய நாட்களில் இலங்கைக்கு கிழக்கே வங்கக்கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் அது மேற்கு  திசையில் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாகவும்  கூறியிருந்தேன் தற்போது அதற்கான வாய்ப்பும்  அதிகரித்துள்ளது அடுத்து வரக்கூடிய வாரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது ஆனால் அது குறித்து எந்த ஒரு தகவலையும் இப்பொழுதே உறுதியாக கூறமுடியாது 27-10-2017 அன்று அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை தகவல்களை பதிவிடுகையில் இது குறித்து உறுதியான தகவல்களையும் சேர்த்து பதிவிடுகிறேன்.

இந்த பதிவுடன் இரண்டு படங்களை இணைத்துள்ளேன் அதில் முதல் படத்தில் 23-10-2017 வங்கக்கடல் பகுதியில் வீசும் காற்றின் திசையும் இரண்டாவது படத்தில் தற்போதைய சூழ்நிலைகளே தொடந்தாள் 26-10-2017 அன்று காற்றின் திசை எப்படி இருக்கலாம் என்பதும் தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கிறது.இது இந்திய வானிலை ஆய்வு மைய அதிகார பூர்வ இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது இதை நீடிக்கப்பட்ட வரம்பியல் கணிப்பு என்பார்கள் (Extended Range Forecast )

நான் கடந்த சில பதிவுகளில் தொடர்ந்து கூறி வருவது போல வடகிழக்கு பருவமழை எப்பொழுது தொடங்கியதாக அறிவிக்கப்பட்டாலும் நவம்பர் மாதம் முதல் வாரத்திற்கு பிறகுதான் அதாவது திட்டத்திட்ட நவம்பர் 10 ஆம் வாக்கில் தான் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கும்.

நான் மேலே பதிவிட்ட தகவல்கள் யாவும் தற்போது தமிழகத்தில் நிலவும் வானிலையை உள்ளடக்கிய ஒரு கணிப்பு தான் இதில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.




19-07-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

19-07-2017 இன்று கோயம்பத்தூர் ,நீலகிரி ,தேனி , கன்னியாகுமரி ,ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம்.

19-07-2017 இன்று வால்பாறை மற்றும் வால்பாறை - முன்னாறு இடையே உள்ள மழை பகுதிகளில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் ,நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கேரள எல்லையை ஒட்டியுள்ள கோவை மாவட்டம் காருண்யா உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழையை எதிர்பார்க்கலாம் மேலும் பொள்ளாச்சியிலும் லேசான மழை பதிவாகலாம்.

19-07-2017 இன்று கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

19-07-2017 இன்று தேனி  மாவட்டத்திலும் ஒரு சில பகுதிகளில் லேசான மழையை எதிர்பார்க்கலாம்.


17-05-2017 இன்று புதுச்சேரியை பதம் பார்த்த அக்னி வெயில்

17-06-2017 இன்று காலையிலிருந்தே புதுச்சேரியில் வெப்பத்தின் அளவு  அதிகமாக உணரப்பட்டது. இந்நிலையில் இன்று நண்பகல் 12:30 மணி அளவில் பதிவான  வெப்பநிலையின் படி புதுச்சேரியில் 105.05° பாரன்ஹீட் 40.6° செல்ஸியஸாக பதிவாகியருந்தது. அதன் பின்னும் தொடர்ந்து  அதிகரித்து வந்த வெப்பநிலையானது  இன்று மதியம் 2:30 மணி அளவில்  புதுச்சேரியில் 109° பாரன்ஹீட்டாக வெப்பம் பதிவானது அதாவது 42.7° செல்ஸியஸ் மே  மாதத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 2012க்கு பிறகு இப்பொழுது தான் இவ்வளவு அதிகமான வெப்பம் புதுச்சேரியில் பதிவாகியுள்ளது.















16-05-2017 இன்று வட கடலோர மாவட்டங்களை வறுத்தெடுத்து கொண்டிருக்கும் வெயில்

16-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பத்தின் அளவு கடந்த வரத்துடன் ஒப்பிடுகையில் இயல்பை விட அதிகரித்துள்ளது.இன்று காலையிலிருந்து பதிவான வெப்பநிலையில் படி தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 14 மாவட்டங்களில் 100° பாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவாகியுள்ளது.குறிப்பாக வட கடலோர மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு இயல்பை விட அதிகமாக உள்ளது.

16-05-2017 இன்று புதுச்சேரி ,கடலூர் ,சென்னை ஆகிய வட கடலோர பகுதிகளில் காலை 11:30 மணிக்கே 100° பாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவாகியுள்ளது.காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் காலை 11:30 மணிக்கு மாவட்டத்தில் 100° க்கும் சற்று குறைவாக பதிவாகியுள்ளது.இது மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்பொழுது ஒரு நாளில் அதிகபட்ச வெப்பநிலையானது மதியம் 1:30 மணியிலிருந்து 4:30 மணிக்கு உள்ளாக தான் பதிவாகிறது.அதனால் மக்கள் காலை 11:00 மணியிலிருந்து மாலை 5 மணிவரை வெயிலில் நடமாடுவதை முடிந்தவரையில் குறைத்துக் கொள்ளவும்.


Related Posts Plugin for WordPress, Blogger...