தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

Detailed Info About Southwest monsoon 2020 | effect of southwest monsoon in tamilnadu | low pressure likely to form in bay around 9th june 2020 | active monsoon

ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை எப்பொழுது தீவிரமடைய தொடங்கலாம்.
========================
05-06-2020 நேரம் காலை 10:40 மணி ஜூன் 10 (10-06-2020) ஆம் தேதி வாக்கில் மற்றும் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் #தென்மேற்கு_பருவமழை (#Southwest_Monsoon) தீவிரமடைய தொடங்கலாம்.இதன் காரணமாக தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஜூன் 10 ஆம் தேதி மற்றும் அதற்கு அடுத்து வரக்கூடிய வாரத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகக்கூடும் நீலகிரி மாவட்ட மேற்கு பகுதிகளில் சில இடங்களில் குறிப்பாக அவலாஞ்சி ,அப்பர்பவாணி ,மூக்குறுத்தி வனப்பகுதிகளில் அதி கனமழை பதிவாகவும் வாய்ப்புகள் உண்டு.மேலும் #கர்நாடக மாநில #காவிரி_நீர்பிடிப்பு பகுதிகள் உட்பட #கேரளா ,#கர்நாடகா , #கோவா மற்றும் #மஹாராஷ்டிர மாநில கடலோர மாவட்டங்கள்   உட்பட அம்மாநில மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் கனமழை பதிவாகும்.இந்த ஆண்டின் பருமழையில் முதல் #Active_Phase என்றும் இதனை கூறலாம்.(#First_Active_Phase_of_SWM_in_2020).

வங்கக்கடல் பகுதிகளில் அடுத்து உருவாக இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி
=========================
04-06-2020 ஆகிய நேற்று மாலை நேரத்தில் மத்திய பிரதேச மாநிலத்தின் மத்திய பகுதிகளில் நிலைகொண்டு இருந்த அந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியானது (#Well_Marked_low_pressure_Area) அதாவது நேற்று முன் தினம் கரையை கடந்த நிசர்கா புயலின் மிச்சம் என்றே அதனை வழங்கலாம்.தற்சமயம் அது மேலும் வகுகுறைந்து ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி என்கிற நிலையை உத்திரபிரதேசம் மாநிலம் #வாரணாசி அருகே நிலைக்கொண்டு இருப்பதை அறிய முடிகிறது.அடுத்து வரக்கூடிய நாட்களில் அது முற்றிலும் வகுவிழந்து போகும்.அதன் பின்னர் குறிப்பாக 08-06-2020 (ஜூன் 8)  அல்லது 09-06-2020 (ஜூன் 9) ஆம் தேதிகளின் வாக்கில் வங்கக்கடல் பகுதியில் அந்தமானுக்கு அருகே ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (#Low_Pressure_Area) உருவாகலாம்.வங்கக்கடல் என்றதும் உடனே தமிழகத்துக்கு வருமா? என்பதை போன்ற கேள்விகளை கேட்காதீர்கள்.இது நமக்கான பருவமழை அல்ல பொதுவாக இதைப்போன்ற காலகட்டத்தில் வடக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகுவது இயல்பு தான் அது மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்கிற நிலையை கூட அடையலாம் அது ஒடிசா அல்லது மேற்கு வங்கத்தில் நுழைந்து இந்தியாவின் மத்திய பகுதிகளில் நிலத்திலயே மேற்கு - வட மேற்கு அல்லது மேற்கு திசையில் பயணிக்கும்.இதன் காரணமாக அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்கையில் குறிப்பாக 09-06-2020 அல்லது 10-06-2020 ஆம் தேதிகளின் வாக்கில் தென்மேற்கு பருவமழை இந்தியாவின் மேற்கு மாநிலங்களில் தீவிரமடையும்.

பொதுவாக தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் காலகட்டத்தில் அதிக பலணடைய வாய்ப்புகள் உள்ள பகுதிகள்
===========================

நீலகிரி மாவட்டம் : 
###############
#எருமாடு ,#நெல்லியம் , #அப்பர்பவாணி  ,#நடுவட்டம் , #பண்டலூர் ,#அவலாஞ்சி , #தேவாலா ,#தேவர்சோழா ,#மூக்குருத்தி தேசிய பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள நீலகிரி மாவட்டத்தின் பிற மேற்கு மற்றும் மத்திய பகுதிகள்.

கோவை மாவட்டம் : 
#################
#வால்பாறை , #சின்னக்கல்லாறு  , #சின்கோனா , #சோலையாறு_அணை , #பெரம்பிக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டராப் பகுதிகள்.

தேனி மாவட்டம் : 
##############
 #பெரியார்_அணை ,#தேக்கடி மற்றும் இதர மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள்.

கன்னியாகுமரி மாவட்டம்:
#####################
#கொளச்சல் ,#திற்பரப்பு ,#பேச்சிப்பாறை ,#கீரிப்பாறை ,#மார்த்தாண்டம் , #சிவலோகம் ,#சித்தாறு_அணை ,#புத்தன்_அணை மற்றும் இதர #கன்னியாகுமரி மாவட்ட மேற்கு பகுதிகள்.

நெல்லை மாவட்டம்:
==================
#பொதிகை மலை (#அகஸ்தியர் மலை ) , #பாபநாசம் மற்றும் அதன் அருகே உள்ள மேற்கு பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகள்.

முடிக்கும்.. குடிக்கும்...என்ன தொடர்பு? சரியான பதிலுக்கு ...சன்மானங்கள் (பாராட்டுக்கள்) வழங்கப்படும்.....

நானும் ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் காத்திருந்தேன்....இன்று துணிந்து  தலையையும் உயிரையும் முடித்திருத்தம் செய்யும் நண்பரிடம் ஒப்படைத்துவிட்டேன்..... ஆனால் , சவரம் செய்கையில் எப்படி மிகக்கவசம் அணிந்து கொள்வது என்பது தான் எனக்கு தெரியவில்லை.....

#காரைக்கால் மாவடத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட பிறகு முடி திருத்தம் செய்ய ஆட்கள் யாரும் வருவதில்லை என அந்த முடி திருத்தம் செய்யும் நண்பர் மிகவும் வருத்தப்பட்டார்.இதற்கும் அதற்கும் என்ன தொடர்பு என யோசனை செய்துக்கொண்டே குழம்பிய நிலையில் வீடு திரும்புகையில் ...சாலையோரம் இருந்த ஒரு மதுக்கடை வாசலில் பலகை வைக்கப்பட்டு இருந்தது 180 ML வெறும் 150 ரூபாய் மட்டுமே என்று.....

உங்களுக்கு இதற்கிடையில் இருக்கும் தொடர்பு புரிந்தால் கூறுங்கள்.

#karaikal #karaikal_haircut #karaikal_lock_down

25.05.2020 இன்றைய வானிலை.| கடந்த 24 மணி நேர மழை அளவுகள் | Today's weather forecast | last 24 hours rainfall data

25-05-2020 நேரம் பிற்பகல் 1:20 மணி இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு , மேற்கு உள் ,உள் மற்றும் தென் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை அடுத்த 24 மணி நேரத்தில் பதிவாக வாய்ப்புகள் உள்ளது.

குறிப்பாக இன்றும் தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் #மதுரை , #விருதுநகர் ,#சிவகங்கை உட்பட தென் உள் மாவட்டங்களின் சில இடங்களிலும்  இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.#திருச்சி மாவட்டத்தில் இன்றும் அங்கும் இங்குமாக சில இடங்களில் மழை பதிவாகலாம் நேற்று #திருச்சி மாநகரின் வடக்கு புறநகர் பகுதிகளில் மழை பதிவாகவில்லை இன்று பொறுத்திருந்து பார்க்கலாம்.பொதுவாக #திருச்சி மாவட்டத்தில் இன்றும் சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.மேலும் #புதுக்கோட்டை , #கன்னியாகுமரி , #நெல்லை ,#திண்டுக்கல் மாவட்ட கிழக்கு பகுதிகள் மற்றும் #தூத்துக்குடி மாவட்ட மேற்கு பகுதிகளிலும் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.மேலும் #நீலகிரி , #கோவை , #திருப்பூர் மற்றும் #ஈரோடு , #சேலம் மாவட்டத்திலும் இன்று ஓரிரு இடங்களில் மழை பதிவாகலாம்.

இன்று மேற்கு உள் மாவட்டங்களிலும் #ஒப்பு_ஈரப்பதத்தின் அளவு அதிகரித்து இருந்ததை தெரிந்துகொள்ள முடிந்தது.ஆகையால் கடலோர மக்களுக்கு இணையாக மேற்கு உள் மாவட்ட மக்களும் இன்று அதிக புழுக்கத்தை உணர்ந்து இருப்பார்கள்.

27-05-2020 ஆம் தேதி வாக்கில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் , மேற்கு உள் , தென் உள் மற்றும் உள் மாவட்டங்களில் மழை தீவிரமடைய தொடங்கலாம்.இது தொடர்பாக நாம் ஏற்கனவே விவாதித்து இருந்தோம்.

கடந்த 24 மணி நேர மழை அளவுகள்
========================
கோடநாடு (நீலகிரி மாவட்டம்) - 56 மி.மீ
நத்தம் AWS (திண்டுக்கல் மாவட்டம்) - 51 மி.மீ
விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 43 மி.மீ
வாடிப்பட்டி ARG (மதுரை மாவட்டம்) - 31 மி.மீ
நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்) - 31 மி.மீ
கோவில்பட்டி ,மருங்காபுரி தாலுக்கா (திருச்சி மாவட்டம்) - 25 மி.மீ
திருச்சி பேருந்து நிலையம் (திருச்சி மாவட்டம்) - 25 மி.மீ
மருங்காபுரி (திருச்சி மாவட்டம்) - 23 மி.மீ
சூளகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 22 மி.மீ
வாழப்பாடி (சேலம் மாவட்டம்) - 22 மி.மீ
திருச்சி நகரம் (திருச்சி மாவட்டம்) - 20 மி.மீ
கல்லட்டி (நீலகிரி மாவட்டம்) - 18 மி.மீ
தாளவாடி (ஈரோடு மாவட்டம்) - 18 மி.மீ
மதுரை AWS (மதுரை மாவட்டம்) - 17 மி.மீ
மறநடஹள்ளி (தர்மபுரி மாவட்டம்) - 16 மி.மீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 16 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
பொன்னையார் அணை (திருச்சி மாவட்டம்) - 14 மி.மீ
ஏத்தாபூர் (சேலம் மாவட்டம்) - 14 மி.மீ
மேலூர் ARG (மதுரை மாவட்டம்) - 11 மி.மீ
பெருந்துறை (ஈரோடு மாவட்டம்) - 10 மி.மீ
பவானி (ஈரோடு மாவட்டம்) - 9 மி.மீ
தட்டயங்கார்பேட்டை (திருச்சி மாவட்டம்) - 8 மி.மீ
திண்டுக்கல் (திண்டுக்கல் மாவட்டம்) - 5 மி.மீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி மாவட்டம்) - 5 மி.மீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர் மாவட்டம்) - 5 மி.மீ
மணப்பாறை (திருச்சி மாவட்டம்) - 5 மி.மீ
பென்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 5 மி.மீ
ராசிபுரம் (நாமக்கல் மாவட்டம்) - 5 மி.மீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 5 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
திண்டுக்கல் (திண்டுக்கல் மாவட்டம்) - 5 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
மாசினாங்குடி (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
பவானிசாகர் அணை (ஈரோடு மாவட்டம்) - 4 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
தொட்டபெட்டா , உதகை (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
ஆனைமடுவு அணை (சேலம் மாவட்டம்) - 2 மி.மீ
நிலக்கோட்டை (திண்டுக்கல் மாவட்டம்) - 2 மி.மீ
விருதுநகர் AWS (விருதுநகர் மாவட்டம்) - 1 மி.மீ
ஓசூர் AWS (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 1 மி.மீ
சங்கரன்கோவில் (தென்காசி மாவட்டம்) - 1 மி.மீ

#Puducherry_Weather

இன்றும் மதுரை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளின் நிலவரமும் வெளியாகவில்லை மாலை அல்லது இரவுக்குள் கிடைக்கப்பெற்றால் பதிவிடுகிறேன்.

வால்பாறை நினைவுகள் | திசை மாறிய பயணம் | Valparai Memories | wrong route but right place

கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் #காரைக்கால் பகுதியில் இருந்து #பழனி க்கு நானும் எனது இரு நண்பர்களும் சென்றிருந்தோம் விடியற்காலையில் பழனி யை அடைந்து தரிசனம் முடித்து அதன் பின்னர் வெயிலின் தாக்கத்தில் இருந்து சற்று விடு பெற #கொடைக்கானல் மலைக்கு சென்றுவிடலாம் என முடிவெடுத்து அங்கிருந்து மீண்டும் பயணத்தை தொடங்கினோம்.மகிழுந்தை இயக்கிய நண்பர் அப்பொழுது தான் புதிதாக ஓட்டுனர் உரிமம் பெற்று இருந்தார் , ஏதோ சுமாராக வாகனங்களை இயக்குவார். ஆகையால் உடன் இருந்த மற்றொரு நண்பர் மலை மீது வாகனத்தை இயக்க அவர் சரிப்பட்டு வரமாட்டார் ஆகையால் ஏதாவது சமவெளி பகுதி அல்லது சிறிய மலை பகுதிக்கு செல்லலாம் என ஆலோசனை வழங்கினார்.அதுவரையில் அவர் வாகனத்தை இயக்கிய விதம் மற்றும் #கொடைக்கானல் மலைப்பாதையில் இருக்கும் கொண்டை ஊசி வளைவுகள் என பல விஷயங்களை கருத்தில் கொண்டு பார்க்கையில் எனக்கும் அவர் சொல்வது தான் சரி என தோன்றியது.எனவே Google Map உதவியுடன் ஏதாவது சிறிய மலை பகுதி அருகில் இருக்கிறதா என தேடினோம் அப்பொழுது தான் ஒரு திரைப்படத்தில் கூறிய ஏதோ ஒரு ஊரின் பெயர் நினைவுக்கு வந்தது அதனை Search செய்து Google Map சொன்ன திசையில் மறுக்கேள்விகள் இன்றி பயணித்தோம்.

அப்பொழுது பல தடைகளை கடந்து எங்கெங்கோ சென்று திசை மாறி 40 கொண்டை ஊசி வளைவுகளை எதிர்கொண்டு நாங்கள் சென்றடைந்த இடம் தான் #வால்பாறை.அதுவரையில் நான் #வால்பாறை_வட்டப்பாரை என ஒரு பாடலை மட்டும் தான் கேள்விப்பட்டு இருந்தேன்.இப்படி வழி தவறி வால்பாறைக்கே சென்று விடுவேன் என்று நினைத்துக் கூட பார்த்தது கிடையாது.

நாம் எதிர்பார்க்காத ஒரு பயணம் நாம் எதிர்பார்த்ததை விட அழகான ஒரு இடத்துக்கு நம்மை கூட்டி சென்றால் என்ன நடக்கும்.#வால்பாறை என் நினைவில் என்றும்  இருக்கும்.


#valparai_memories #unorganized_travel #valparai_heaven

தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுக்க வாய்ப்புகள் உள்ளதா? | weather locust swarm able to enter tamilnadu 2020 | locust plague

23-05-2020 நேரம் இரவு 11:00 மணி கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய அளவிலான வெட்டுக்கிளிகள் (#Locust) படையெடுப்பு பாகிஸ்தான் நாட்டில் நிகழ்ந்து வருகிறது.அங்கு இருக்கும் விவசாய நிலங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன.இந்தியாவின் சுற்றுசூழல் காடுகள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமும் (#Ministry_of_environment_forest_and_climate_change) இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.அதில் #வெட்டுக்கிளிகள்_திரள் (#Locust_Swarm)  ராஜஸ்தான் , பஞ்சாப் , ஹரியானா மற்றும் மத்திய_பிரதேச மாநிலங்களை அடைந்து விளைநிலங்களில் பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புகள் இருப்பதாகவும்.பருத்தி  ,காய்கறி முற்றும் உணவு பொருட்களின் உற்பத்தியை இது பாதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

என்னடா வெட்டுக்கிளிக்கு இவ்வளவு அக்கப்போரா என கேட்காதீர்கள். இதைப்போன்ற நேரத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் அதனை எதிர்கொள்வது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல.

ஆப்பிரிக்க நாட்டில் இருந்து புறப்பட்ட இந்த பாலைவன வெட்டுக்கிளிகளின் திரள் (#Desert_Locust) ஏமன் ,பெஹ்ரைன் ,குவைத் ,சவூதி_அரேபியா போன்ற நாடுகளை கடந்து தற்சமயம் #பாகிஸ்தான் நாட்டின் விளைநிலங்களில் தாக்குதலை மேற்க்கொண்டு வருகின்றன.இந்தியாவிலும் #பஞ்சாப் ,#ஹரியானா மாநிலங்களில் அவை இப்பொழுதே ஊடுருவ தொடங்கி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.இது ஒரு புறம் இருக்க ஒருவேளை நிலப்பகுதிகளின் வழியை தேர்ந்தெடுக்காமல் அவை இந்திய பெருங்கடல் வழியே ஒரு வெட்டுக்கிளிகள் திரள் பயணம் செய்ய தொடங்கினால் அவை நேராக இந்திய தீபிகற்பத்தில் (#Peninsular_India)  அதன் தாக்குதலை தொடங்கி பின்னர் வங்கதேசம் செல்லுமாம்.

AMPHAN (உம்பன்) புயல் கரையை கடக்க தொடங்கியது |Amphans wall cloud region enters the land

20-05-2020 நேரம் பிற்பகல் 3:40 மணி #AMPHAN புயலின் மையப்ப்குதி கரையை கடந்து வருவதை சற்று முன்பு பதிவாகியிருக்கும் #கொல்கத்தா (#Kolkatta) ராடார் படங்களின் வாயிலாக தெளிவாக அறிய முடிகிறது.அந்த மையக்கண் பகுதியின் வெளிப்பகுதி (#The_wall_Cloud_Region) நாம் எதிர்பார்த்தபடி தற்சமயம் #Haldia பகுதிகளில் வலுவாக பதிவாகி வருகிறது.#AMPHAN புயல் முழுமையாக கரையை கடக்க இன்னும் 3 மணி நேரங்கள் பிடிக்கும்.#KOLKATTA பகுதியில் தற்சமயம் மணிக்கு அதிகபட்சமாக 70 கி.மீ  வேகத்தில் காற்று வீசி வருகிறது இது அடுத்த சில மணி நேரங்களில் மேலும் அதிகரிக்க தொடங்கலாம்.மேற்கு வங்க மாநிலத்தில் எந்தெந்த பகுதிகளில் அதிக பாதிப்புகள் இருக்கும் என்பதனை அறிய கடந்த பதிவை காணுங்கள்.அதனுடைய இணைப்பையும் இங்கே வழங்குகிறேன் - https://www.facebook.com/1611990775491571/posts/3242375935786372/

புதுச்சேரி நகரில் சற்று முன்பு பிற்பகல் 1:00 மணி வாக்கில் அதிகபட்சமாக 41.2 ℃ வெப்பநிலை பதிவானது அதாவது கிட்டத்தட்ட 106°F பாரன்ஹீட்.இந்த 2020 ஆம் ஆண்டில் புதுச்சேரியில் இதுவரை பதிவாகியுள்ள அதிகபட்ச பகல் நேர வெப்பநிலையில் இதுவே அதிகம்.அதே போல #காரைக்கால் பகுதியில் 102°F பாரன்ஹீட் அளவு வெப்பம் அதிகபட்சமாக பதிவானது.#கடலூர் பகுதியில் 104°F பாரன்ஹீட் அளவு வெப்பமும் #நாகப்பட்டினம் பகுதியில் 103°F பாரன்ஹீட் அளவு வெப்பமும் இன்று அதிகபட்சமாக பதிவாகியுள்ளது.அதே போல #மீனம்பாக்கத்தில் அதாவது சென்னை விமான நிலையத்தில் அதிகபட்சமாக 107°F பாரன்ஹீட் அதாவது 41.8℃  அளவில் பகல் நேர வெப்பம் பதிவாகியுள்ளது.அநேக வட கடலோர பகுதிகளிலும் இன்று இதுவரையில் இந்த ஆண்டின் அதிகபட்ச பகல் நேர வெப்பநிலை பதிவாகியுள்ளது.

20 மே 2020 AMPHAN புயல் (Paradip) பரதீப் 214 மி.மீ அளவு மழை 100 கி.மீ வேகத்தில் காற்று

20-05-2020 நேரம் காலை 10:00 மணி நான் இங்கே பதிவேற்றம் செய்திருக்கும் #பரதீப் ராடார் படத்தில் அந்த #AMPHAN புயலின் மைய கண் பகுதியை தெளிவாக காண இயல்கிறது.நேற்று இரவு முதல் அதன் வெளிப்புற பகுதியின் காற்று #பரதீப் உட்பட #ஓடிசாவின் அநேக கடலோர பகுதிகளிலும் அதன் வலிமையை காட்டி வருகிறது.இது கரையை மேற்கு வங்கத்தில் கடக்கும் என்றாலும் அதிக பாதிப்புகளை #ஒடிசா வின் கடலோர பகுதிகளில் கடந்த சில மணி நேரங்களாக தொடர்ந்து ஏற்படுத்தி வருவதையும் அறிய முடிகிறது.சற்று முன்பு அதாவது காலை 8:30 மணி வாக்கில் அது ஓடிசா மாநிலத்தின் #பரதீப் (#Paradip) க்கு கிழக்கு - தென்கிழக்கு திசையில் 120 கி.மீ தொலைவில் Latitude 19.8°N மற்றும் longitude 87.5°E இல் ஒரு #அதி_தீவிர_புயல் (#Extremely_severe_cyclone) என்கிற நிலையில்  நிலைக்கொண்டு இருந்தது.இதன் காரணமாக #பரதீப் பகுதியில் தற்சமயம் மணிக்கு 100 கி.மீ க்கும் அதிகமான வேகத்தில் அதிகபட்சகமாக காற்று வீசி வர வேண்டும் மேலும் கடந்த 24 மணி நேரத்தில் #paradip பகுதியில் கிட்டத்தட்ட 214 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.தற்சமயமும் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பதிவாகி வருகிறது.அதேபோல #Puri பகுதியில் 89 மி.மீ அளவு மழையும் பதிவாகியுள்ளது.நான் நேற்று குறிப்பிட்டு இருந்தது போல  #மேற்கு_வங்கம் மாநிலம் #Digha அருகே அடுத்த சில மணி நேரங்களில் இன்று அந்த புயல் கரையை கடக்க முற்படலாம்.புயலின் வெளிப்புற பகுதி அடுத்த சில மணி நேரங்களில் இன்று பிற்பகல் வாக்கில்  #மேற்கு_வங்க மாநில கடலோர பகுதிகளில் அதன் வலிமையை காட்ட முற்படலாம். இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் அதன் மையப்பகுதி கரையை கடக்கலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...